சிவராத்திரி நான்கு கால பூஜை மந்திரம்

சிவராத்திரி நான்கு கால பூஜை மந்திரம்

Qries

– Advertisement –

நம்முடைய குடும்பம் தலைமுறை தலைமுறையாக செழித்து மேலோங்கி வாழ வேண்டும் என்பதற்காக தானே வழிபாட்டு முறைகளையும், நம்முடைய பிரார்த்தனையையும் வைக்கின்றோம். பணம் காசு தேவை என்றாலும், கொஞ்சம் ஆழ்ந்து சிந்தித்துப் பார்த்தால், எல்லாமே நம்முடைய குடும்ப நலனுக்காகத்தான்.
கணவன் நன்றாக இருக்க வேண்டும், மனைவி நன்றாக இருக்க வேண்டும், தாய் தந்தை நன்றாக இருக்க வேண்டும், பிள்ளைகள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், என்று தான் இறைவழிபாடு செய்கின்றோம். உங்களுடைய வேண்டுதல்கள் நிறைவேற நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் தீர, அந்த ஈசனின் பாதத்தில் சின்னதாக ஒரு இடம் கிடைக்க சிவராத்திரி அன்று ஈசனை வழிபாடு செய்ய தவற விடாதீர்கள்.
– Advertisement –

26-2-2025 அன்று மகா சிவராத்திரி ஆனது வரவிருக்கிறது. இந்த நாளில் கோவிலுக்கு சென்றால் நான்கு கால பூஜைகளிலும் கலந்து கொள்ளலாம். விடிய விடிய கண்விழித்து சிவனின் ஆசியை முழுமையாக பெறலாம். கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் இந்த நான்கு கால பூஜையை வீட்டிலேயே செய்யலாம். வீட்டில் இருக்கும் சிவலிங்கத்திற்கு, சிவபெருமானின் திருவுருவப்படத்திற்கு நான்கு காலத்திற்கும் பூஜை செய்யலாம்.
மிக மிக எளிமையான முறையில் பூஜையறையில் ஒரு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, நான்கு காலத்திற்கும் ஒவ்வொரு இனிப்பு பலகாரங்கள் நெய்வேதியும் வைத்து, பூக்களை போட்டு அர்ச்சனை செய்து ஈசனை வழிபட்டாலே போதும். சிவபெருமானின் அருள் முழுமையாக கிடைத்துவிடும் ஈசனது திருவுருவப்படம் லிங்கம் எதுவுமே இல்லை என்றாலும், ஏற்றி வைத்திருக்கும் விளக்கத்திற்கும் முன்பு, சிவராத்திரி அன்று வீட்டிலேயே ஈசனை வழிபடலாம் தவறு ஒன்றும் கிடையாது.
– Advertisement –

சிவராத்திரி அன்று செய்யப்படும் நான்கு கால பூஜைக்கும் ஒவ்வொரு நேரம் இருக்கிறது. அந்த நேரத்திற்கு ஈசனுக்கு அர்ச்சனை செய்து மந்திரத்தை சொல்லி கற்பூர ஆரத்தி காண்பிக்க வேண்டும். சிவலிங்கம் இருந்தால் அதற்கு உண்டான அபிஷேகங்களை மேற்கொள்ள வேண்டும். பெரும்பாலானவர்கள் கோவிலுக்கு சென்று தான் இந்த நான்கு கால பூஜையில் கலந்து கொள்வார்கள்.
இந்த நான்கு கால பூஜையில் கலந்து கொள்ளும்போது ஒவ்வொரு கால பூஜைக்கு என்றும் தனித்தனி மந்திரங்கள் உள்ளது. முதல் கால பூஜை இரவு 7:30 மணிக்கு துவங்கும். இரண்டாம் கால பூஜை இரவு 10:30 மணிக்கு துவங்கும். மூன்றாம் கால பூஜை இரவு 12:00 மணிக்கு துவங்கும். நான்காம் கால பூஜை அதிகாலை 4:00 மணிக்கு துவங்கும். ஒவ்வொரு கால பூஜைக்கும் தனித்தனி மந்திரங்கள் இருக்கிறது.
– Advertisement –

சிவராத்திரி மந்திரம்
முதல் கால பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் அம்பலத்தாடியே போற்றி ஓம்”.
இரண்டாம் கால பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் ஈசனே போற்றி போற்றி”
மூன்றாம் கால பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம் “ஓம் கயிலை நாதனே போற்றி போற்றி”
நான்காம் கால பூஜையில் சொல்ல வேண்டிய மந்திரம். “ஓம் சிவ சிவ போற்றி ஓம்”.
உங்களுக்கு சிவபெருமானின் நான்கு கால பூஜையில் கலந்து கொள்ளும் பாக்கியம் கிடைத்தாலோ, அல்லது நீங்களே வீட்டில் இருந்தபடி சிவபெருமானுக்கு நான்கு கால பூஜைகளையும் செய்தாலோ, அந்த நேரத்தில் இந்த மந்திரத்தை உச்சரித்து பலன் அடையலாம். இரவு கண் விழிக்க முடியாது என்பவர்கள் பரவாயில்லை.
சிவராத்திரி அன்று மாலை 6:00 மணிக்கு விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, இந்த மந்திரத்தை உங்களால் முடிந்தவரை உச்சரிக்கலாம். கணக்கு என்பது கிடையாது. சிவராத்திரி நாள் முழுவதும் இந்த மந்திர வார்த்தைகளை மனதிற்குள் சொல்லிக் கொண்டே இருங்கள். வேலை செய்யும் நேரம் போக மீதி நேரம் எல்லாம் மனம் முழுவதும் சிவபெருமான் நிறைந்திருக்க வேண்டும். ஈசனின் அருளால் உங்களுடைய குடும்பம் சீரும் செழிப்போடு தழைத்தோங்கும்.
இதையும் படிக்கலாமே: சிவராத்திரியின் நான்கு கால பூஜை பலன்கள்
இந்த தலைமுறைக்கு மட்டுமல்ல அடுத்தடுத்து வரக்கூடிய தலைமுறைகளும், ஈசனின் அருள் ஆசியால் இந்த பூமியில் சந்தோஷமாக வாழும். இந்த மந்திரத்தை சொல்ல சொல்ல ஈசனின் மனம் குளிரும். ஆசிகள் உங்களை வந்து சேரும். அந்த ஆல மர விழுது போல உங்கள் குடும்பம் பறந்து விரிந்து இந்த பூமியில் பல தலைமுறைகளைக் கடந்தும் சந்தோஷமாக வாழும் என்ற இந்த தகவலுடன் இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top