சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல்

சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல்

Qries

– Advertisement –

முருகப்பெருமானுக்கு உகந்த மாதமான கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு நாளும் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்வதன் மூலம் நமக்கு அளப்பறியாத நன்மைகள் உண்டாகும் என்று கூறப்படுகிறது. அப்படி இருக்கும் பொழுது இந்த கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய முருகப்பெருமானுக்குரிய திதியான சஷ்டி திதி என்பது வெள்ளிக்கிழமையுடன் சேர்ந்து வருகிறது. இது கூடுதல் பலனை தரக்கூடியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட நாளில் முருகப்பெருமானின் அருளை பெறுவதற்கு பாட வேண்டிய பாடலை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
சுக்கிர சஷ்டி தினத்தில் பாட வேண்டிய பாடல்
முருகப்பெருமானுக்கு உகந்த திதியாக கருதப்படுவது சஷ்டி திதி என்று நம் அனைவருக்கும் தெரியும். கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய சஷ்டிக்கு அதிக அளவில் பலன் இருக்கிறது என்றும் அந்த மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றும் கூறப்படுகிறது. மற்ற நாட்களில் முருகப்பெருமானை வழிபாடு செய்யாவிட்டாலும் இந்த வளர்பிறை சஷ்டி தினத்தில் நாம் முருகப்பெருமானை வழிபாடு செய்யும்பொழுது முருகப்பெருமானின் அருள் என்பது நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.
– Advertisement –

முருகப்பெருமானுக்குரிய ஆலயங்களாக திகழ்வதுதான் அறுபடை வீடுகள். திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, பழமுதிர்ச்சோலை, திருத்தணி இந்த ஆறு ஸ்தலங்களுக்கும் சென்று முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்களுக்கு முருகப்பெருமானின் அருள் என்பது பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஆறு ஸ்தலங்களில் ஒவ்வொரு ஸ்தலத்திற்கும் ஒவ்வொரு விதமான பலன் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஒவ்வொரு கிரகத்தின் அருளும் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது. அந்த பலன்கள் அனைத்தையும் பெறுவதற்கு பலரும் மகா சஷ்டி விரத நாட்களில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ஆலயமாக சென்று வழிபாடு செய்வார்கள். இது வசதி வாய்ப்பு இருப்பவர்களுக்கு பொருந்தும் .
அவ்வாறு இந்த அறுபடை வீடுகளுக்கும் செல்ல இயலாத சூழ்நிலையில் இருப்பவர்கள் தங்களுக்கும் அறுபடை முருகனின் அருளைப் பெற வேண்டும் என்ற ஆசை இருக்கும் அல்லவா? அப்படிப்பட்டவர்கள் கார்த்திகை மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை சஷ்டி அன்று மாலை வீட்டில் இருக்கக் கூடிய முருகப்பெருமானின் படத்தை சுத்தம் செய்து அவருக்கு முன்பாக ஒரு அகல் விளக்கை வைத்து அதில் நெய் ஊற்றி பஞ்சு திரி போட்டு வடக்கு பார்த்தவாறு தீபம் ஏற்றி வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு முருகப்பெருமானின் இந்த பாடலை ஒரே ஒரு முறையாவது கூற வேண்டும். தங்களால் இயலும் பட்சத்தில் எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருக ஆலயத்திற்கு சென்று அங்கு தீபம் ஏற்றி வைத்து இந்த பாடலை பாடலாம்.
– Advertisement –

பாடல்
மூவிரு முகங்கள் போற்றி!முகம் பொழி கருணை போற்றி!ஏவரும் துதிக்க நின்றஈராறு தோள் போற்றி! காஞ்சிமாவடி வைகும் செவ்வேள்மலர்அடி போற்றி! அன்னான்சேவலும் மயிலும் போற்றி!திருக்கைவேல் போற்றி! போற்றி
இதையும் படிக்கலாமே: சுக்கிர சஷ்டி பரிகாரம்
முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து இருந்த இடத்தில் இருந்து கொண்டே இந்த ஒரு பாடலை பாடுபவர்களுக்கு அறுபடை வீடுகளுக்கு சென்று முருகப் பெருமானை தரிசனம் செய்ததற்குரிய பலன் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top