கிருஷ்ணர் அவதரித்த தினத்தை தான் நாம் கோகுலாஷ்டமி அல்லது கிருஷ்ண ஜெயந்தி அல்லது ஸ்ரீ ஜெயந்தி என்று கூறுகிறோம். அந்த வகையில் ஆகஸ்ட் மாதம் 16ஆம் தேதி கோகுலாஷ்டமியும் ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி கிருஷ்ண ஜெயந்தியும் வருகிறது. இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளில் கண்டிப்பான முறையில் கிருஷ்ணரை நாம் வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை இந்த இரண்டு நாட்களும் கிருஷ்ணரை வழிபாடு செய்ய இயலவில்லை என்பவர்கள் கிருஷ்ணனின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.கிருஷ்ண ஜெயந்தி மந்திரம்கிருஷ்ணர் அவதரித்த திதியாக அஷ்டமி திதி திகழ்கிறது. அது இன்று இரவு 11:13 வரை இருக்கிறது. மேலும் கிருஷ்ணர் அவதரித்த நட்சத்திரமாக திகழக்கூடிய ரோகினி நட்சத்திரம். இது ஆகஸ்ட் மாதம் 17ஆம் தேதி இருக்கிறது. அதனால் கிருஷ்ணருக்குரிய இந்த ஒரு மந்திரத்தை நாம் இந்த இரண்டு நாட்களில் ஏதாவது ஒரு நாளை தேர்வு செய்து கூறினால் போதும். இந்த மந்திர உச்சாடலுக்கு எந்தவித வழிபாட்டு முறைகளையும் நாம் பின்பற்ற வேண்டும் என்று அவசியம் இல்லை. வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்ற வேண்டியது கிடையாது, வழிபாடு செய்ய வேண்டும் என்பதும் கிடையாது, நெய்வேத்தியம் வைக்க வேண்டும் என்பதும் கிடையாது. முழுமனதோடு கிருஷ்ணரை மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் போதும். – Advertisement -கிருஷ்ணஜெயந்தி சமயத்தில் நம்மால் கிருஷ்ணரை வழிபாடு செய்ய இயலவில்லை, ஆனால் கிருஷ்ணனின் அருளை பரிபூரணமாக பெறவேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த மந்திர வழிபாட்டை பயன்படுத்திக்கொள்ளலாம். அதேபோல் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடும் வழக்கம் இல்லை என்பவர்களுமஅ இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இந்த வழிபாட்டை செய்வதற்கு எந்தவித தீட்டும் தடையாக இருக்காது என்பதால் யார் வேண்டுமானாலும் இந்த வழிபாட்டை செய்யலாம்.இந்த மந்திரத்தை தொடர்ச்சியாக ஆறு முறை கூறினால் போதும். வேறு எதுவும் செய்ய வேண்டியது இல்லை. ஒரு நிமிடம் கூட இதற்கு தேவைப்படாது. அந்த அளவிற்கு மிகவும் எளிமையான மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது. இந்த மந்திரத்தை முழு மனதோடு கிருஷ்ணரை நினைத்து கூறுபவர்களுக்கு அனைத்து விதமான செல்வங்களும் அவர்களை தேடி வரும் என்றே கூறலாம். – Advertisement – மந்திரம்” ஓம் க்லீம் கிருஷ்ணாய வாசுதேவாய நமஹ “இதையும் படிக்கலாமே: வெற்றிகளை குவிக்கும் முருகன் மந்திரம்மிகவும் எளிமையான இந்த மந்திர வழிபாட்டை சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எந்தவித தடைகளும் இல்லாமல் கிருஷ்ணரை முழு மனதோடு நினைத்து கூறுவதன் மூலம் கிருஷ்ணனின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam