பணக்கார தெய்வமாக திகழக்கூடியவர் பெருமாள். அதிலும் குறிப்பாக திருப்பதி ஏழுமலையானை குறிப்பிட்டு நாம் கூறலாம். அப்படிப்பட்ட திருப்பதி ஏழுமலையானுக்குரிய வழிபாடுகளை செய்வதற்கு உகந்த மாதமாக புரட்டாசி மாதம் திகழ்கிறது. ஒவ்வொரு வருடமும் வரக்கூடிய புரட்டாசி மாதத்தில் திருப்பதியில் பிரம்மோற்சவம் நடைபெறும். மேலும் அந்த புரட்டாசி மாதத்தில் வரக்கூடிய சனிக்கிழமையில் பலரும் விரதம் இருந்து ஏழுமலையானை வழிபாடு செய்வார்கள். இப்படி வழிபாடு செய்வதன் மூலம் ஏழுமலையானின் அருளால் கடன்கள் அற்ற செல்வ செழிப்பான வாழ்க்கையை வாழ முடியும் என்பது நம்பிக்கை. அப்படிப்பட்ட புரட்டாசி மாதத்தில் திருப்பதி ஏழுமலையானை நினைத்து தினமும் எந்த மந்திரத்தை கூறினால் செல்வ செழிப்புடன் வாழலாம் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.செல்வ செழிப்புடன் வாழ மந்திரம்திருப்பதி சென்று வந்தால் திருப்பங்கள் நேரும் என்று கூறுவார்கள். அதிலும் குறிப்பாக பிரம்மோற்சவம் நடைபெறக்கூடிய புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தவர்கள் மிகவும் பாக்கியசாலி என்றே கூறலாம். இயன்றவர்கள் புரட்டாசி மாதத்தில் திருப்பதிக்கு சென்று ஏழுமலையானை தரிசனம் செய்யலாம். இயலாதவர்கள் அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு சென்று அந்த பெருமாளையே திருப்பதி ஏழுமலையானாக நினைத்து வழிப்பாடு செய்யலாம். மேலும் திருப்பதி ஏழுமலையானை நினைத்து தினமும் வீட்டிலேயே ஒரே ஒரு நெய் தீபத்தை பெருமாளுக்கு முன்பாக ஏற்றி வைத்து இந்த ஒரு நாமத்தை நாம் கூறுவதன் மூலம் நம் வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும் நீங்கி செல்வ செழிப்புடன் வாழ்வதற்குரிய வழி கிடைக்கும். – Advertisement -இந்த மந்திர வழிபாட்டை புரட்டாசி மாதம் முழுவதும் கூறவேண்டும். காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இருந்து மதியம் 12 மணிக்குள்ளோ அல்லது மாலை 6:00 மணியிலிருந்து இரவு 9 மணிக்குள்ளோ இந்த மந்திரத்தை நாம் கூறலாம். இயன்றவர்கள் வீட்டில் பூஜையறையில் பெருமாளுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். இயலாதவர்கள் மேற் சொன்ன குறிப்பிட்ட நேரத்தில் எந்த நேரத்தை வேண்டுமானாலும் தேர்வு செய்து எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் சொல்லலாம். பெண்கள் மாதவிடாய் சமயத்திலும் இந்த மந்திரத்தை கூறலாம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக சுத்தமாக குளித்திருக்க வேண்டும். அதேபோல் அசைவம் சாப்பிட்டிருக்கக் கூடாது.இந்த இரண்டு நிபந்தனைகளை மட்டும் முறையாக பின்பற்றி இந்த மந்திரத்தை புரட்டாசி மாதம் முழுவதும் ஆண்கள், பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் என்று எந்தவித வயது பாகுபாடும் இல்லாமல் கூறுவதன் மூலம் அவர்கள் அனைவருக்கும் பெருமாளின் அருள் கண்டிப்பான முறையில் கிடைக்கும். பெருமாளின் அருள் கிடைத்துவிட்டாலே மகாலட்சுமியின் அருளும் கிடைத்துவிடும். இவர்கள் இருவரின் அருள் கிடைத்துவிட்டால் நம் வாழ்வில் இருக்கக்கூடிய பணம் தொடர்பான அனைத்து பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். வீட்டு பூஜை அறையில் நெய் தீபத்தை ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறுபவர்கள் நெய்வேத்தியமாக டைமண்ட் கற்கண்டு வைத்து கூறும் பொழுது கூடுதல் சிறப்பு உண்டாகும். – Advertisement – மந்திரம்” ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம் ஓம் நமோ ஸ்ரீ வேங்கடேசாய நமஹ “இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் வாராஹி மந்திரம்முழு நம்பிக்கையோடு பெருமாளை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை புரட்டாசி மாதம் முழுவதும் தினமும் ஐந்து முறை மட்டும் கூறினால் போதும். பெருமாளின் அருளால் செல்வ செழிப்புடன் வாழ முடியும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam