செவ்வாய் கிருத்திகை மந்திரம் | Sevvai kiruthikai manthiram in Tamil

செவ்வாய் கிருத்திகை மந்திரம் | Sevvai kiruthikai manthiram in Tamil



கண்கண்ட தெய்வங்களுள் ஒருவராகவும் கலியுக தெய்வமாகவும் திகழக் கூடியவராக இருப்பவர்தான் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த கிழமையாக திகழ்வது செவ்வாய்க்கிழமை. மேலும் உகந்த நட்சத்திரமாக திகழ்வது கிருத்திகை நட்சத்திரம். செவ்வாய்க்கிழமையும் கிருத்திகை நட்சத்திரமும் ஒன்று சேர்ந்து வரக்கூடிய ஒரு அற்புதமான நாளாக தான் ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி திகழ்கிறது. அன்றைய நாளில் முருகப்பெருமானை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை ஆறு முறை கூறினால் போதும் கேட்ட வரம் கிடைக்கும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.நாம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அந்த தேவைகளை பூர்த்தி செய்வதற்காக பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வோம். ஒரு சிலருக்கு அந்த முயற்சிகள் வெற்றி அடையும். பலருக்கும் அந்த முயற்சிகள் தோல்வி அடைவதற்குரிய வாய்ப்புகள் உண்டாகும். அப்படி அவர்களுடைய முயற்சிகள் தோல்வியடையும் பொழுது தொடர்ந்து விடாமுயற்சியுடன் செயல்பட்டு இறைவனையும் வழிபாடு செய்வார்கள். அந்த வகையில் முருகப்பெருமானை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் கிருத்திகை நட்சத்திரம் நாள் அன்று வழிபாடு செய்வதன் மூலம் அவர்கள் நினைத்த காரியம் நினைத்தபடி நடந்திடும். – Advertisement -முருகப்பெருமானை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிமுறைகள் இருந்தாலும் மந்திர வழிபாடு என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாக திகழ்கிறது. அந்த வகையில் முருகப்பெருமானுக்கு பலவிதமான மந்திரங்களை நாம் பயன்படுத்துவதுண்டு. அவற்றுள் மிகவும் எளிமையான ஒரு மந்திரத்தை செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய கிருத்திகை நட்சத்திர நாளன்று நாம் கூறும் பொழுது முருகனின் அருளால் நாம் கேட்ட வரம் கிடைக்கும்.இந்த மந்திர வழிபாட்டை ஏப்ரல் மாதம் 29ஆம் தேதி காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கூற வேண்டும். முக்கியமான குறிப்பு இந்த மந்திரத்தை கூறும் பொழுது தண்ணீர் கூட அருந்தி இருக்கக் கூடாது என்பதுதான். அதாவது இந்த மந்திரத்தை வெறும் வயிற்றில் தான் கூற வேண்டும். அன்றைய தினத்தில் அருகில் இருக்கும் முருக ஆலயத்திற்கு சென்று முருகப் பெருமானை வழிபாடு செய்வது கூடுதல் சிறப்பை தரும். – Advertisement – மந்திரம்ஓம் ஐயும் கிலியும் சரவணபவ….செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் கிருத்திகை நட்சத்திர நாளன்று எந்த முறையில் பூஜை செய்தாலும் செய்யாவிட்டாலும், விரதம் இருந்தாலும் இருக்காவிட்டாலும், வழிபாட்டை மேற்கொண்டாலும் இவை அனைத்துமே செய்யாமல் இருந்தாலும் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் முழு மனதோடு முருகப்பெருமானை நினைத்து கூறினால் போதும். நாம் கேட்ட வரத்ததை முருகப் பெருமான் நமக்கு அருள்வார்.இதையும் படிக்கலாமே: சொந்த பூமி பரிகார கோவில்எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து மனமுருகி கூறி வழிபாடு செய்பவர்களுக்கு முருகனின் பரிபூரண அருள் கிடைப்பதோடு கேட்ட வரமும் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top