
– Advertisement –
இன்றைய காலத்தில் ஆண்களும் பெண்களும் தங்க நகைகளின் மீது ஆசை கொண்டு தான் இருக்கிறார்கள். அதிக அளவில் வருமானம் இருக்கக்கூடியவர்கள் அவர்கள் விரும்பிய தங்க நகைகளை வாங்கி அணிந்து கொள்ளும் நிலையில் இருப்பார்கள். ஆனால் இதற்கு விதிவிலக்காக ஒரு சிலருக்கு எவ்வளவு தான் கையில் பணம் இருந்தாலும் அவர்கள் நினைத்த தங்க நகைகளை வாங்க முடியாத நிலையிலும் இருப்பார்கள். இன்னும் சிலருக்கோ அந்த தங்க நகைகளை வாங்குவதற்குரிய பொருளாதார வசதி இல்லாமலும் இருப்பார்கள். இப்படி தங்கத்தை வாங்க முடியவில்லை அல்லது சேர்க்க முடியவில்லை என்று கவலைப்படுபவர்களும் தங்கத்தால் ஏதேனும் தோஷம் ஏற்பட்டிருந்தால் அந்த தோஷத்தில் இருந்து விலக வேண்டும் என்று நினைப்பவர்களும் எந்த மந்திரத்தை கூறினால் தங்கம் அதிக அளவில் சேரும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
எந்த ஒரு பொருளாக இருந்தாலும் செயலாக இருந்தாலும் அது நம்மை தேடி வர வேண்டும் என்றால் அதற்கும் நமக்கும் இடையே ஏதாவது ஒரு ஈர்ப்பு சக்தி என்பது இருக்க வேண்டும். அப்படி இல்லாத பட்சத்தில் நாம் எவ்வளவு முயற்சி செய்தாலும் அது நம்மிடம் வந்து சேராது. இந்த ஈர்ப்பு சக்தியை தான் பலரும் வசியம் என்று கூறுகிறார்கள். நினைத்த நபர்கள் நம்மிடம் வந்து சேர வேண்டும் நம்மிடம் வந்து பேச வேண்டும் என்பதற்காக வசியம் செய்பவர்களும் இருக்கிறார்கள். அதே போல் தான் தங்கம் நம்மிடம் வந்து சேர வேண்டும் என்பதற்காக தங்கத்தையும் நாம் வசியம் செய்யலாம். அப்படி தங்கத்தை வசியம் செய்வதற்கு பரிகாரம் செய்வதற்கு பதிலாக நம்முடைய முன்னோர்கள் பின்பற்றிய மந்திர வழிபாட்டை செய்யலாம். அந்த மந்திரத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
– Advertisement –
எந்த ஒரு மந்திரமாக இருந்தாலும் குருவின் மூலம் நமக்கு கிடைக்கும் பட்சத்தில் அந்த மந்திரத்திற்கு அதிக அளவில் பலன் இருக்கிறது. அதிலும் குருவால் உபதேசிக்கப்பட்டு பெறக்கூடிய மந்திரங்கள் தான் பலிக்கும் என்று கூட கூறலாம். அப்படி நாம் பெற வேண்டும் என்றால் அதற்கு மானசீகமாக நாம் யாராவது ஒருவரை குருவாக தேர்வு செய்ய வேண்டும்.
அப்படி யாரும் இல்லாத பட்சத்தில் அருகில் இருக்கக்கூடிய சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள். ஒரு பேப்பரில் பின்வரும் இந்த மந்திரத்தை எழுதி சிவபெருமானின் பாதத்தில் வைத்து திரும்பி வாங்கிக் கொள்ளுங்கள். இப்படி செய்வதன் மூலம் சிவபெருமானே இந்த மந்திரத்தை உங்களுக்கு உபதேசிப்பது போல் ஒரு உணர்வு உண்டாகும். பிறகு இந்த மந்திரம் எழுதிய பேப்பரை வீட்டிற்கு எடுத்து வந்து மாலை வீட்டில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு ஏதாவது ஒரு இனிப்பு பொருளை தெய்வத்திற்கு முன்பாக நெய்வேத்தியமாக வைத்து இந்த மந்திரத்தை 21, 54, 108 என்ற எண்ணிக்கையில் கூற வேண்டும்.
– Advertisement –
இப்படி தினமும் நாம் தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூற கூற நம்முடைய வாழ்க்கையில் தங்கம் சேர்வதற்குரிய வாய்ப்புகளும் உண்டாகும். மேலும் தங்கத்தால் ஏற்பட்ட தோஷங்களும் விலகும். குரு பகவானின் அருளாலும் சுவர்ணலட்சுமியின் அருளாலும் எந்தவித தடையும் இல்லாமல் தங்கம் சேர்ந்து கொண்டே இருக்கும்.
மந்திரம்ஓம் நமோ ஹேரம்ப மதமோதித அஸ்திமுகாய சொர்ணபிராப்த்தையே மமா குருகுரு ஸ்வாஹா.
இதையும் படிக்கலாமே:தேவைகள் பூர்த்தியடைய முருகப் பெருமான் மந்திரம்
எந்த ஒரு வழிபாட்டை செய்வதாக இருந்தாலும் முழு நம்பிக்கையுடன் செய்ய வேண்டும். அப்படி முழு நம்பிக்கையுடன் செய்தால் தான் அந்த வழிபாட்டின் பலன் நமக்கு கிடைக்கும். அந்த வகையில் இந்த மந்திரத்தை முழு நம்பிக்கையுடன் தினமும் கூறுபவர்களுக்கு எதிர்பார்க்காத அளவிற்கு தங்க நகைகள் சேர ஆரம்பிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam