– Advertisement –
இன்று மிகவும் சிறப்பு வாய்ந்த அற்புதமான நாள் என்பது அனைவருக்கும் தெரியும் தனதிரியோதசி. இன்றைய தினத்தில் தான் எம தீபம் ஏற்றி வழிபாடு செய்ய வேண்டும். அதே சமயம் இன்றைய தினத்தில் தான் தன்வந்திரி ஜெயந்தியும் வருகிறது. உடல் நலத்தில் குறைவு இருப்பவர்கள் இன்றைய தினத்தில் தன்வந்திரியோ அல்லது விஷ்ணு பகவானையோ துளசி மாலை சாற்றி வழிபாடு செய்வது என்பது பல நன்மைகளை தரும். அந்த வகையில் தான் மேலும் ஒரு சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்வது லட்சுமி குபேரர் தீபம். இந்த தீபத்தை ஏற்றும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தன திரியோதசி நாளான இன்று மாலை லட்சுமி குபேரர் பூஜை செய்வது என்பது மிகவும் சிறப்பு. ஆனால் லக்ஷ்மி குபேர பூஜை செய்ய இயலாது என்று நினைப்பவர்கள் இரவு 12 மணிக்குள் இந்த முறையில் ஒரே ஒரு தீபத்தை ஏற்றி வழிபட்டாலும் லக்ஷ்மி குபேரர் பூஜை செய்வதற்குரிய பலன் உண்டாகும். அதனால் தன வரவும் அதிகரிக்கும். அவ்வளவு சிறப்பு வாய்ந்த இந்த லட்சுமி குபேரர் தீபத்தை ஏற்றுவதை பற்றி தெரிந்து கொள்வோம்.
– Advertisement –
இந்த லட்சுமி குபேரர் தீபத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 12 மணிக்குள் எந்த நேரத்தில் நம்மால் ஏற்ற முடியுமோ அந்த நேரத்தில் ஏற்றலாம். இதற்கு முகம் பார்க்கும் கண்ணாடி ஒன்று வேண்டும். அதை சுத்தம் செய்து அதற்கு சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக ஒரு தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அந்த தாம்பாள தட்டிற்கும் சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள்.
அதில் நல்ல கிழியாத வெற்றிலையாக 5 வெற்றிலையை தாம்பாளத்தை சுற்றி வைக்க வேண்டும். அதன் காம்பை நீக்கிவிட வேண்டும். அடுத்ததாக அந்த வெற்றிலைகளுக்கு நடுவே ஒரு அகல் விளக்கை வைத்து அதில் பச்சை நிற திரியை போட்டு நாம் கிள்ளி வைத்திருக்கும் வெற்றிலை காம்பையும் அதில் போட்டு விட வேண்டும். அதில் சுத்தமான நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி அந்த தீபத்தை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
– Advertisement –
அடுத்ததாக சிறிது வாசனை நிறைந்த மலர்களை தீபத்திற்கு வைக்க வேண்டும். இதோடு மகாலட்சுமிக்கு மிகவும் பிடித்தமான சோலி, தாமரை விதைகள், மாதுளம் பழம், நெல்லிக்கனி, ஏலக்காய், கிராம்பு இவற்றில் எது கிடைக்கிறதோ அதை வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக நம்மால் இயன்ற அளவு பணத்தை வைக்க வேண்டும். 11, 101, 501 என்று ஒற்றைப்படை எண்ணிக்கையில் பணத்தையும் வைத்து தீபம் ஏற்ற வேண்டும்.
இந்த தீபமானது கிழக்கு பார்த்தவாறு இருக்க வேண்டும். இந்த தீபத்திற்கு எதிரே மேற்கு பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடியை வைக்க வேண்டும். அதாவது இந்த தீபமும் இந்த தாம்பாளத்தில் இருக்கக்கூடிய பொருட்களும் அந்த முகம் பார்க்கும் கண்ணாடியில் பிரதிபலிக்க வேண்டும். அந்த முறையில் தான் வைக்க வேண்டும். இப்படி வைத்து முடித்துவிட்டு “ஓம் மகாலட்சுமி தாயே போற்றி, ஓம் லட்சுமி குபேரரே போற்றி” என்ற மந்திரத்தை நம்மால் இயன்ற அளவு எத்தனை முறை வேண்டுமானாலும் கூறலாம். குறைந்தபட்சம் ஒரு மணி நேரம் வரை இந்த தீபம் எடியட்டும். பிறகு நாம் எப்பொழுதும் போல் குளிர வைத்துவிட்டு வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.
இதையும் படிக்கலாமே:தீபாவளியை எப்படி கொண்டாடுவது?லஷ்மி குபேர பூஜையை மாலை நேரத்தில் செய்ய இயலாதவர்கள் இந்த முறையில் லட்சுமி குபேர தீபத்தை ஏற்றி வழிபாடு செய்வதன் மூலம் லட்சுமி குபேர பூஜை செய்வதற்குரிய பலன் முழுமையாக கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam