
ஆடி மாதத்தில் பலவிதமான வழிபாட்டு முறைகளை பின்பற்றும் வழக்கம் நமக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட வழிபாட்டு முறைகளில் மிகவும் முக்கியமான ஒன்றாக திகழ்வதுதான் ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமியான கருட பஞ்சமி. அன்றைய நாளில் நாம் கருடாழ்வாரை வழிபாடு செய்வதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான கஷ்டங்களும், துன்பங்களும், துயரங்களும், ஆபத்துகளும் நீங்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட கருடாழ்வாரை நினைத்து எந்த மந்திரத்தை கூறினால் தீர்க்க முடியாத கஷ்டங்களும் தீர்ந்து போகும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.தீராத கஷ்டத்தை தீர்க்கும் மந்திரம்சிவபெருமானுக்கு எப்படி நந்தி வாகனமாக இருக்கிறாரோ அதேபோல் தான் பெருமாளுக்கு வாகனமாக கருடாழ்வார் இருக்கிறார். எப்படி சிவாலயத்திற்கு செல்லும் பொழுது முதலில் நந்தி பகவானை வணங்கி அவரிடம் அனுமதி கேட்ட பிறகு உள்ளே செல்ல வேண்டுமோ அதே போல் தான் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பொழுதும் முதலில் கருடாழ்வாரை வழிபாடு செய்துவிட்டு அவரிடம் அனுமதி வாங்கிய பிறகுதான் பெருமாளை தரிசனம் செய்ய வேண்டும். அப்பொழுதுதான் பெருமாளிடம் வைத்த கோரிக்கை நிறைவேறும் என்று கூறலாம். பஎருமாளிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது, எந்த கோரிக்கை நிறைவேற வேண்டும் என்று நினைக்கிறோமோ அந்த கோரிக்கையை கருடாழ்வார் இடம் நாம் கூறினாலேயே பெருமாள் அதை நிறைவேற்றி விடுவார் என்று கூட கூறப்படுகிறது. அவ்வளவு சிறப்பு வாய்ந்த கருடாழ்வாரின் மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம். – Advertisement -ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. ஒவ்வொரு மந்திரத்தையும் நாம் உச்சரிக்கும் பொழுது ஒவ்வொரு விதமான பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் கருடாழ்வாருக்கும் பலவிதமான மந்திரங்கள் இருக்கின்றன. தீர்க்கவே முடியாத கஷ்டங்களும் தீர்ந்து நிம்மதியாக வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கூற வேண்டிய மந்திரமும் இருக்கிறது. இந்த மந்திரத்தை தான் கருட பஞ்சமி நாளன்று நாம் கூற வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஒரு விரிப்பை விரித்து அதன் மேல் அமர்ந்து கொள்ள வேண்டும். துளசி இலை இருக்கும் பட்சத்தில் அதை கையில் வைத்துக்கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் கூடுதல் சிறப்புகள் உண்டாகும்.இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் ஒரு முறையும் அதிகபட்சம் தங்களால் எத்தனை முறை கூற முடியுமோ அத்தனை முறை கூறலாம். ஒரு முறை கூறினாலேயே நம்முடைய கஷ்டங்கள் தீர்ந்து போகும் என்று கூறப்படுகிறது. முழுமனதோடு கருடாழ்வாரை நினைத்து இந்த மந்திரத்தை நாம் கூறும்பொழுது கருடாழ்வாரின் அருளால் நம்முடைய தீர்க்க முடியாத கஷ்டம் தீர்ந்து போகும். ஏதாவது ஒரு கஷ்டத்தை மட்டும் முன்வைத்து இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்வதற்கு முன்பாக எந்தவித உணவுப் பொருட்களையும் சாப்பிடக்கூடாது. வெறும் வயிற்றில் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். – Advertisement – மந்திரம்“அரிஓம் றீம் கிலியும் சவ்வும் ஓம் கருடா வாவா ஓங்கார ஆங்கார ஓம் கருட பகவாய நம”இதையும் படிக்கலாமே: கேட்ட வரம் கிடைக்க கூற வேண்டிய மந்திரம்கருடாழ்வாரை முழுமனதோடு நம்பி எந்த கஷ்டம் தீர வேண்டும் என்று நினைத்து இந்த மந்திரத்தை கூறுகிறோமோ அந்த கஷ்டம் விரைவில் தீரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam