
இன்று ஜூலை மாதம் 29ஆம் தேதி ஆடி மாதத்தின் 13 ஆம் நாள் செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வந்திருக்கும் கருட பஞ்சமி. இன்றைய நாளில் பலரும் பெருமாள் ஆலயத்திற்கு சென்ற கருட பகவானை வழிபாடு செய்திருப்போம். பலரும் கருட பகவானுக்குரிய மூல மந்திரங்களை கூறியும் வழிபாடு செய்திருப்போம். ஆனால் ஒரு சிலரால் ஆலயத்திற்கு செல்ல முடியாமலும் வீட்டில் வழிபாடு செய்ய முடியாத நிலையிலும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்களும் இன்றைய நாளில் கருட பகவானின் அருளை பெறுவதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம். கருட பஞ்சமி மந்திரம்வருடத்திற்கு ஒருமுறை வரக்கூடியது தான் இந்த கருட பஞ்சமி. கருட பஞ்சமி நாளன்று அனைவரும் கருட பகவானை வழிபாடு செய்ய வேண்டும். கருட பகவானை வழிபாடு செய்வதன் மூலம் விபத்துகள் நேராமல் இருக்கும். மன தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இன்றி மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். நோய் நொடிகள் இல்லாத ஆரோக்கியமான வாழ்க்கையை வாழலாம். இப்படி நாம் கூறிக் கொண்டே செல்லலாம். ஆபத் பாண்டவனாக கருட பகவான் திகழ்கிறார் என்றும் கூறப்படுகிறது. நினைத்த மாத்திரத்திலேயே நமக்கு அருள் புரியக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக தான் கருட பகவான் திகழ்கிறார். அப்படிப்பட்ட கருட பகவானுக்குரிய நாளில் அவரை நினைத்து கூற வேண்டிய ஒரு மந்திரம். – Advertisement -இந்த மந்திரத்தை இன்று இரவு 12 மணிக்குள் எப்பொழுது வேண்டுமானாலும் கூறலாம். 15 நிமிடம் மட்டும் இதற்காக நாம் ஒதுக்கினால் போதும். இந்த மந்திரத்தை கூறுபவர்கள் கட்டாயம் குளித்திருக்க வேண்டும். காலையிலேயே குளித்திருந்தாலும் தவறில்லை. இந்த மந்திரத்தை உச்சரிப்பதற்கு முன்பாக முகம், கை, கால்களை கழுவி விட்டு மந்திரத்தை உச்சரித்தால் போதும். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்தவித தடையும் கிடையாது. சுத்தமாக இருக்கக்கூடியவர்கள் அதாவது தீட்டு இன்றி அசைவம் சாப்பிடாமல் இருப்பவர்கள் வீட்டு பூஜை அறையில் ஒரு தீபத்தை ஏற்றி வைத்து கருட பகவானை நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும்.ஒருவேளை பூஜை அறைக்கு செல்ல இயலாது என்பவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு அமைதியான இடத்தில் அமர்ந்து கொண்டு கருட பகவானை நினைத்து இந்த மந்திரத்தை கூறினால் போதும். வீட்டில் தான் கூற வேண்டும் என்று இல்லை. ஆலயம் செல்பவர்கள் ஆலயத்திலும் கூறலாம். ஆலயத்திற்கும் செல்ல முடியாது வீட்டிற்கும் வர தாமதமாகும் என்பவர்கள் அவர்கள் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டே கருட பகவானை மனதார நினைத்து இந்த மந்திரத்தை கூறலாம். எந்த திசையை பார்க்க வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ஆனால் வெறும் தரையில் அமர்ந்து கூறக்கூடாது என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. ஒரு விரிப்பை விரித்தோ அல்லது மனைப் பலகை மீதோ அல்லது ஷேர் மீது அமர்ந்து கொண்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். – Advertisement – மந்திரம்“ஷம் ஷிபாய”இதையும் படிக்கலாமே: தீராத கஷ்டத்தை தீர்க்கும் கருட மந்திரம்கருட பகவானின் பஞ்சாட்சர மந்திரங்களில் இருந்து எடுக்கப்பட்ட இந்த இரண்டு வார்த்தை மந்திரம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான துன்பங்களையும் தவிடு பொடி ஆக்கும். முழு நம்பிக்கையோடு கூறி முழு பலனையும் பெறலாம் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam