– Advertisement –
ஆவணி மாதத்தின் தேய்பிறை பஞ்சமி என்பது வெள்ளிக்கிழமை ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி வருகிறது. அன்றைய தினம் வாராகி அம்மனை வழிபாடு செய்வது என்பது மிகவும் சிறப்புக்குரியதாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட வெள்ளிக்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி அன்று எந்த மந்திரத்தை கூறி வாராகி அவனை வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் அனைத்தும் விலகும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
துன்பங்களை விரட்டியடிக்கும் வாராகி மந்திரம்
வாராகி அம்மனுக்கு உரிய திதியாக கருதப்படுவது பஞ்சமி திதி. மேலும் பெண் தெய்வ வழிபாட்டிற்கு உகந்த தினமாக திகழக் கூடியது வெள்ளிக்கிழமை. இவை இரண்டும் சேர்ந்து வரக்கூடிய நாளைய தினத்தில் வாராகி அம்மனை மறவாமல் வழிபாடு செய்ய வேண்டும். அவ்வாறு வழிபாடு செய்யும்பொழுது ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை நாம் உச்சரித்தோம் என்றால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் நீங்கும். மனதில் இருக்கக்கூடிய குறைகள் அனைத்தும் விலகும், மன பயம் நீங்கும்.
– Advertisement –
இந்த மந்திரத்தை அமைதியான இடத்தில் தான் கூற வேண்டும். நின்று கொண்டு கூறக்கூடாது. தரையில் விரிப்பு விரித்தோ அல்லது மனைப் பலகை போட்டோ அதன் மேல் அமர்ந்து தான் கூற வேண்டும். மிகவும் சக்தி வாய்ந்த இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 48 முறை உச்சரிக்க வேண்டும். அதிகபட்சம் நம்மால் இயலும் அளவு உச்சரிக்கலாம். இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம்முடைய கையில் எலுமிச்சம் பழம் அல்லது நெல்லிக்கனி இருக்க வேண்டும்.
எலுமிச்சம் பழத்தை வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது நம்மிடம் இருக்கக்கூடிய தீய சக்திகள் அனைத்தும் விலகும். நெல்லிக்கனியை வைத்து இந்த மந்திரத்தை உச்சரிக்கும் பொழுது பண வசியம் ஏற்பட்டு பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். மந்திரத்தை கூறி முடித்து வழிபாடு அனைத்தையும் நிறைவு செய்த பிறகு இந்த எலுமிச்சம் பழம், நெல்லிக்கனியை வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட்டு விட வேண்டும்.
– Advertisement –
இந்த இரண்டில் ஏதாவது ஒன்றை வைத்துக்கொண்டு தான் வழிபாட்டை செய்ய வேண்டும். இரண்டையும் வைத்துக்கொண்டு செய்யக்கூடாது. இந்த எலுமிச்சம் பழம் மற்றும் நெல்லிக்கனியை வீணாக்க கூடாது. கண்டிப்பான முறையில் வீட்டில் இருக்கும் அனைவரும் சாப்பிட விட வேண்டும். இதற்கு காரணம் என்னவென்றால் நாம் கையில் வைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் இந்த மந்திரத்தில் இருக்கக்கூடிய சக்திகள் அனைத்தும் அந்த பழத்தில் சென்றுவிடும் என்பதுதான். அதேபோல் வீட்டில் இருக்கும் நபர்கள் மட்டும்தான் இந்த பழத்தை சாப்பிட வேண்டும். வேறு யாருக்கும் தரக்கூடாது.
மந்திரம்
ஓம் ஸ்ரீபூதே வம் ஐம் ரம் மகா வஜ்ர வாராகி அதி குஹ்ய த்ரிபாத ஸ்வரூபிணி ஹும் பட் ஸ்வாஹா!
இதையும் படிக்கலாமே:வேண்டிய வரம் தரும் மகா சங்கடஹர சதுர்த்தி மந்திரம்அதிசக்தி வாய்ந்த இந்த வஜ்ரவாராகி அம்மனின் மந்திரத்தை முழு மனதோடு யார் ஒருவர் பஞ்சமி திதியில் வாராகி அம்மனை நினைத்து கூறுகிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய துன்பங்கள் அனைத்தும் விலகும், மனபாரம் குறையும், மனக்கவலை நீங்கும், மன பயம் போகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam