
– Advertisement –
உள்ளம் உருகி முருகப் பெருமானை நினைத்து முருகா என்று கூப்பிட்டாலே கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வரக்கூடிய தெய்வமாக தான் முருகப்பெருமான் திகழ்கிறார். அதுவும் அவருக்குரிய தினத்தில் அவரை நாம் வழிபாடு செய்தோம் என்றால் அதன் பலன் அதிகமாக தான் இருக்கும். அதிலும் இன்று அவருக்குரிய திதியும் அவருக்குரிய நட்சத்திரமும் சேர்ந்து வருகிறது. அப்பொழுது நம்முடைய வழிபாட்டிற்கு அதிக அளவில் பலன் கிடைக்கும் அல்லவா? அப்படிப்பட்ட நாளில் எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் நம்முடைய தேவைகள் பூர்த்தியடையும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப் பெருமான் மந்திரம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் பலவிதமான மந்திர உச்சாடல்கள் இருக்கின்றன. அந்த தெய்வத்தை முழுமனதோடு நினைத்து எந்த ஒரு மந்திரத்தை கூறினாலும் அந்த மந்திரத்தினால் நமக்கு பலவிதமான நன்மைகள் உண்டாக்கும். பலரும் தங்களுடைய வேண்டுதலை முன்வைத்து மந்திரத்தை கூறுவார்கள் அல்லது மந்திரத்தை கூறி முடித்த பிறகு வேண்டுதலை முன் வைப்பார்கள். ஆனால் இன்று நாம் பார்க்கப் போற இந்த மந்திரத்தை நாம் உச்சரித்தால் மட்டும் போதும். நம்முடைய வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் முருகப் பெருமான் அருள்வார்.
– Advertisement –
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். ஒரு சிலருக்கு திருமணம் நடக்க வேண்டும், சொந்த வீடு கட்ட வேண்டும், குழந்தை பாக்கியம் வேண்டும், நல்ல வேலை கிடைக்க வேண்டும், கடன் பிரச்சினை தீர வேண்டும், பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டாக வேண்டும், குழந்தைகள் நன்றாக படிக்க வேண்டும், வெளிநாட்டிற்கு செல்ல வேண்டும், சொந்தமாக இடம் வாங்க வேண்டும், உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் இப்படி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான வேண்டுதல்களும் தேவைகளும் இருக்கும்.
மேலும் ஒரு சிலருக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட தேவைகளும் வேண்டுதல்களும் இருக்கும். இவை அனைத்துமே நாம் பெற வேண்டும் என்றால் நம்முடைய முயற்சியோடு நம்முடைய இஷ்ட தெய்வ வழிபாட்டையும் மேற்கொள்ள வேண்டும். இன்று முருகப்பெருமானுக்குரிய சிறப்பு மிகுந்த நாள் என்பதால் இன்றைய நாளில் நாம் முருகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தையும் முருகப்பெருமான் அருள்வார். இது வேண்டும் என்று கேட்க வேண்டிய அவசியம் கூட கிடையாது. முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு பின்வரும் இந்த இரண்டு மந்திரங்களை கூறினால் போதும்.
– Advertisement –
இன்று இரவு 12 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் முருகப்பெருமானுக்கு என்று ஒரு தீபத்தை ஏற்றி வைத்து அந்த தீபச்சுடரொளியை பார்த்தவாறு இந்த மந்திரத்தை கூற வேண்டும். வீட்டில் வேல் வைத்து வழிபாடு செய்பவர்கள் இந்த மந்திரத்தை கூறும்பொழுது கையில் வேலை வைத்துக் கொள்ளலாம். வேல் இல்லை என்பவர்கள் சுக்கை கையில் வைத்துக்கொண்டு இந்த இரண்டு மந்திரத்தையும் 108 முறை கூற வேண்டும்.
மந்திரம்
“ஓம் சௌம் சரவணபவஓம் சௌம் வேலும் மயிலும் துணை”
இதையும் படிக்கலாமே:ஏழு ஜென்ம பாவம் நீங்க
இந்த இரண்டு மந்திரத்தையும் இன்று இரவு 12 மணிக்குள் கூறலாம் அல்லது முருகப்பெருமானுக்கு விசேஷமான நாட்கள் என்று கூறக்கூடிய செவ்வாய்க்கிழமை, சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் போன்ற நாட்களிலும் கூறிக் கொண்டே வருபவர்களுக்கு கண்டிப்பான முறையில் கேட்காமல் அனைத்தையும் கொடுப்பார் முருகப்பெருமான் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam