தொட்ட காரியம் தடையின்றி நடக்க மந்திர வழிபாடு

தொட்ட காரியம் தடையின்றி நடக்க மந்திர வழிபாடு

Qries


நம்முடைய வாழ்க்கையில் நாம் மேற்கொள்ளக்கூடிய முயற்சிகள் அனைத்தும் வெற்றி அடைய வேண்டும் என்றுதான் நினைப்போம். அப்படி வெற்றிகளை பெறாமல் ஏதாவது ஒரு தடைகள் ஏற்பட்டாலோ அல்லது அந்த தடைகளை ஏற்படுத்தக்கூடிய நபர்களாலோ நமக்கு பிரச்சனைகள் வருகின்றது என்றால் அந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடுவதற்கு நமக்கு வாராகி அம்மன் அருள் புரிவார். வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்து வாராகி அம்மனின் இந்த ஒரு மந்திரத்தை கூறுபவர்களுக்கு அவர்கள் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வாழ்க்கையில் நன்மைகள் உண்டாகும். அந்த மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.அனைத்து தடைகள் நீங்க வழிபாடுஉக்ர தெய்வ வழிபாடு என்பது இன்றைய காலத்தில் அதிக அளவில் நடைபெறுகிறது. அதிலும் குறிப்பாக வாராகி அம்மன் வழிபாட்டை பலரும் மேற்கொண்டு வருகிறார்கள். வாராகி அம்மனை பஞ்சமி, அஷ்டமி போன்ற திதிகளிலும் செவ்வாய், வெள்ளி, ஞாயிறு போன்ற கிழமைகளிலும் வழிபாடு செய்யும் வழக்கம் பலருக்கும் இருக்கிறது. வாராகி அம்மனை யார் ஒருவர் வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு எந்தவித கஷ்டமும் ஏற்படாது என்று கூறுவதோடு மட்டுமல்லாமல் வாராகி அம்மனை வழிபாடு செய்பவர்களுடைய இல்லத்திற்கு கண்டிப்பான முறையில் ராஜராஜேஸ்வரி வருவாள் என்றும் கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த வாராகி அம்மனுக்குரிய ஒரு மந்திர வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம். – Advertisement -இந்த மந்திர வழிபாட்டை வாராகி அம்மனுக்குரிய சிறப்பு மிகுந்த நாளில் ஆரம்பிக்க வேண்டும். ஆடிச் செவ்வாய், ஆடி வெள்ளி போன்ற நாட்களிலும் அஷ்டமி, பஞ்சமி, அமாவாசை, பௌர்ணமி போன்ற திதிகள் வரக்கூடிய நாட்களிலும் செய்ய ஆரம்பிப்பது மிகவும் சிறப்பு. இந்த வாராகி அம்மனின் மந்திரத்தை தினமும் 27 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை முச்சரிப்பதற்கு உகந்த நேரமாக கருதுவது இரவு 7 மணியில் இருந்து 10 மணிக்குள். எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். யார் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை மந்திரத்தை உச்சரிக்கலாம்.பெண்கள் தீட்டு சமயமாக இருந்தாலும் இந்த மந்திரத்தை உச்சரிக்கலாம். பிறப்பு தீட்டு, இறப்பு தீட்டு போன்ற தீட்டுகளில் இருந்தாலும் கூறலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக முகம் கை கால்களை மட்டும் சுத்தமாக கழுவிக்கொண்டு முழு பக்தியோடு வாராகி அம்மனை நினைத்து கூறினால் போதும். வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து தான் கூற வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் கிடையாது. வீட்டில் இருந்தாலும் வெளியில் இருந்தாலும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். எந்தவிதமான வேண்டுதலையும் முன்வைத்து இந்த மந்திரத்தை கூறக்கூடாது. – Advertisement – மந்திரம்“ஓம் க்லீம் உன்மத்த பைரவி வாராஹி நமஹ”இதையும் படிக்கலாமே: தலையெழுத்தை மாற்றும் பிரதோஷ மந்திரம்அனுதினமும் வாராகி அம்மனை நினைத்து இந்த ஒரு மந்திரத்தை எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் கூறுபவர்களுடைய வாழ்க்கை வெற்றிகரமாக அமையும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top