
சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாளாக கருதக்கூடிய சனிமகா பிரதோஷமான இன்று நாம் சிவபெருமானை எந்த அளவிற்கு வழிபாடு செய்கிறோமோ அதே அளவிற்கு நந்தியம்பெருமானையும் நாம் வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாகவே சிவாலயத்திற்கு சென்று சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு முன்பாக நந்தி பகவானை பார்த்து அவரிடம் அனுமதி பெற்ற பிறகு தான் வழிபாடு செய்ய வேண்டும் என்றும் அப்படி வழிபாடு செய்தால் தான் நம்முடைய வேண்டுதல் நிறைவேறும் என்றும் கூறப்படுகிறது.அவ்வளவு சிறப்பு வாய்ந்த நந்தி வழிபாடு என்பது நம் வாழ்வில் பலவிதமான நன்மைகளை வாரி வழங்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் சனி மகா பிரதோஷ நாள் அன்று நந்தி பகவானின் எந்த மந்திரத்தை கூறினால் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்றும் சிவபெருமானிடம் கேட்ட வரம் கிடைக்கும் என்றும் தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். – Advertisement -நலம் தரும் மந்திரம் நந்தி பகவானுக்குரிய இந்த மந்திரத்தை சனிமகா பிரதோஷ நாளான இன்று இரவு 12 மணிக்குள் நாம் 27 முறை கூறவேண்டும். பொதுவாகவே பிரதோஷ நேரத்தில் சிவபெருமானுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுவதைப் போலவே நந்தி பகவானுக்கும் அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். எப்படி சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது வில்வ இலைகளை சமர்ப்பணம் செய்து வழிபாடு செய்கிறோமோ அதே போல் நந்தி பகவானை வழிபாடு செய்யும்பொழுது அருகம்புல்லை வாங்கி கொடுத்து வழிபாடு செய்ய வேண்டும்.மேலும் நம்முடைய வேண்டுதல் என்னவோ அதை நேரடியாக சிவபெருமானிடம் கூறுவதற்கு முன்பாக நந்தியம்பெருமானிடம் கூறினாலே நந்தியம் பெருமான் அதை சிவபெருமானிடம் கூறி நம்முடைய வேண்டுதலை விரைவில் நிறைவேற்றுவார் என்று கூறப்படுகிறது. சிவபெருமானின் வாகனமாக திகழக்கூடிய நந்தி பகவானை நாம் முழுமனதோடு வழிபாடு செய்வதன் மூலம் சிவபெருமானின் அருளை பரிபூரணமாக பெற முடியும் என்பதில் எந்தவித ஐயமும் இல்லை – Advertisement – அதனால் தான் பலரும் பிரதோஷ நேரத்தில் நந்திக்கு முன்பாக தீபம் ஏற்றி வைத்து அருகம்புல் மாலை சாற்றி சிவப்பு அரிசி வெல்லம் தேங்காய் இவற்றை கலந்து நெய்வேத்தியமாக வைத்து தங்களுடைய வேண்டுதலை கூறுவார்கள். இப்படி வழிபாடு செய்ய இயலாதவர்கள் கூட இன்று இந்த ஒரு மந்திரத்தை 27 முறை நந்தி பகவானை நினைத்து கூறினாலே போதும் சிவபெருமானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைத்து விடும். அதனால் வாழ்க்கையில் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும்.இந்த மந்திரத்தை கிழக்கு அல்லது வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு கூற வேண்டும். வீட்டு பூஜை அறையிலும் அமர்ந்து கூறலாம், ஆலயத்திலும் அமர்ந்து கூறலாம். சிவபெருமான் மற்றும் நந்தி பகவானுக்கு முன்பாக ஒரு தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறுவது கூடுதல் சிறப்பு வாய்ந்தது. மேலும் இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். எந்த பொருளும் இல்லை என்பவர்கள் ஒரு டம்ளர் சுத்தமான தண்ணீரை கூட வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறலாம். மந்திரத்தை கூறி முடித்த பிறகு நெய்வேத்தியமாக வைத்த பொருளை பிரசாதமாக உண்ண வேண்டும். – Advertisement -மந்திரம்“ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ நந்தீச சித்த சுவாமியே போற்றி”இதையும் படிக்கலாமே:சனி மகா பிரதோஷம் இரவு சொல்ல வேண்டிய மந்திரம்.எப்பொழுதெல்லாம் சிவ வழிபாட்டை செய்கிறோமோ அதற்கு முன்பாக நந்தி வழிபாட்டை செய்து விட்டு பிறகு சிவ வழிபாட்டை செய்யும் பொழுது அந்த வழிபாட்டின் முழுமையான பலனை நம்மால் பெற முடியும். அந்த வகையில் சனி மகா பிரதோஷ நாளான இன்று நந்தி பகவானின் இந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு சிவ அருள் கிடைப்பதோடு அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam