நவராத்திரி நாட்களில் கூற வேண்டிய புவனேஸ்வரி மந்திரம்

நவராத்திரி நாட்களில் கூற வேண்டிய புவனேஸ்வரி மந்திரம்



முப்பெரும் தேவியரின் சங்கமமாக திகழக்கூடியவர் புவனேஸ்வரி தாயார் என்றும், அந்த புவனேஸ்வரி தாயார் அவதரித்து அசுரனை வதம் செய்த விழாவை தான் நவராத்திரி என்றும் கூறுகிறோம். முப்பெரும் தேவியரின் சங்கமமாக திகழக்கூடிய புவனேஸ்வரி தாயாரை யார் ஒருவர் முழு மனதோடு வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு முப்பெரும் தேவியர் அருள் பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதனால் நவராத்திரி நாட்களில் முதல் மூன்று நாட்கள் துர்க்கை, இரண்டாவது மூன்று நாட்கள் லட்சுமி, மூன்றாவது மூன்று நாட்கள் சரஸ்வதி என்று பாகுபாடு பார்க்காமல் நவராத்திரி நாட்கள் முழுவதுமே புவனேஸ்வரி தாயாரை வழிபாடு செய்யும்பொழுது முப்பெரும் தேவியரின் அருளை நம்மால் பரிபூரணமாக பெற முடியும்.அந்த வகையில் நாம் நவராத்திரி திருவிழா நடைபெறக்கூடிய நாட்களில் புவனேஸ்வரி தாயை வழிபாடு செய்வதோடு புவனேஸ்வரி தாய்க்குரிய பீஜ மந்திரத்தை கூறும் பொழுது புவனேஸ்வரி தாயார் மனமகிழ்ந்து நம்முடைய நியாயமான கோரிக்கையை நிறைவேற்றி வைப்பார்கள். அந்த மந்திர வழிபாட்டை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். – Advertisement -புவனேஸ்வரி மந்திரம்செப்டம்பர் மாதம் 22ஆம் தேதியிலிருந்து அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி வரை நவராத்திரி திருவிழா என்பது நடைபெறுகிறது. இந்த நவராத்திரி திருவிழா நடைபெறக்கூடிய நாட்களில் நாம் புவனேஸ்வரி தாயாரின் இந்த ஒரு மந்திரத்தை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுபவர்கள் அசைவத்தை தவிர்த்திருக்க வேண்டும். குளித்து இருக்க வேண்டும். காலையில் மட்டும் குளித்து இருந்தால் போதும் மாலையில் குளிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்த மந்திரத்தை மாலை 6 மணியிலிருந்து இரவு 11 மணிக்குள் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம்.வீட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்து முழு மனதோடு பிரார்த்தனை செய்து உங்களுடைய நியாயமான கோரிக்கையை முன்வைத்து விட்டு பின்வரும் புவனேஸ்வரி தாயாரின் மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும். ஒரு வேளை பெண்களுக்கு தீட்டு சமயமாக இருக்கும் பட்சத்தில் அவர்கள் பூஜை அறைக்கு செல்லாமல் வேறு இடத்தில் அமர்ந்து புவனேஸ்வரி தாயாரை மனதார நினைத்து கோரிக்கையை முன்வைத்து பிறகு இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். – Advertisement – பெண்களுக்கு தீட்டு தடை கிடையாது. அதேபோல் பூஜை அறையில் அமர்ந்து தான் செய்ய வேண்டும் என்ற இடத்தடையும் கிடையாது. நாம் வேலை செய்யும் இடத்திலும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். ஆலயத்திற்கு சென்றும் இந்த மந்திர வழிபாட்டை செய்யலாம். இந்த மந்திரத்தை 10 நிமிடம் மனதார நிறுத்தி நிதானத்துடன் புவனேஸ்வரி தாயாரை நினைத்து கூற வேண்டும்.மந்திரம்” ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் புவனேஸ்வர்யை நமஹ “இதையும் படிக்கலாமே: பித்ரு காயத்ரி மந்திரம்மிகவும் சக்தி வாய்ந்த இந்த புவனேஸ்வரி மந்திரத்தை நவராத்திரி நாட்களில் தொடர்ச்சியாக கூறி வருவதன் மூலம் வைத்த கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top