நிரந்தர வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்க

நிரந்தர வேலை மற்றும் பதவி உயர்வு கிடைக்க



படைத்தல், அளித்தல், காத்தல் போன்ற மூன்று தொழில்களையும் செய்யக்கூடியவர்களாக தான் முப்பெரும் தேவர்கள் திகழ்கிறார்கள். அதில் நம்முடைய வாழ்க்கையை வாழ்வதற்கும் நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய பிரச்சனைகளில் இருந்து நம்மை காப்பதற்கும் உதவக்கூடிய தெய்வமாக திகழ்ந்தவர் தான் மகாவிஷ்ணு. மகாவிஷ்ணுவை வழிபாடு செய்வதற்கு பலவிதமான வழிபாட்டு முறைகள் இருந்தாலும் அவருக்கென்றே உருவான விஷ்ணு சகஸ்ரநாமம் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக திகழ்கிறது. இதில் மகாவிஷ்ணுவை போற்றக்கூடிய ஆயிரம் திருநாமங்கள் இருக்கின்றன என்றும் ஒவ்வொரு திருநாமத்தை நாம் உச்சரிக்கும் பொழுதும் ஒவ்வொரு விதமான பலன்களை நம்மால் பெற முடியும் என்றும் கூறப்படுகிறது. அந்த வகையில் நிரந்தர வேலை கிடைக்கவும் வேலையில் பதவி உயர்வு உண்டாகவும் கூற வேண்டிய விஷ்ணு சகஸ்ர நாமத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.பீஷ்மர் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது மகாவிஷ்ணுவை நினைத்து அவரை வணங்கும் விதமாக கூறப்பட்டது தான் விஷ்ணு சஹஸ்ரநாமம். இதில் விஷ்ணுவின் ஆயிரம் திருநாமங்கள் இருக்கின்றன. இந்த திருநாமங்களை அனுதினமும் பாராயணம் செய்வது என்பது மிகவும் சிறப்பு. இயலாதவர்கள் இந்த விஷ்ணு சகஸ்ர நாமத்தை தினமும் கேட்கவாவது செய்ய வேண்டும். விஷ்ணு சஹஸ்ர நாமத்தை அனுதினமும் பாராயணம் செய்பவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கை சிறப்பாக அமையும். அவர்களுக்கு வேண்டிய அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அந்த வகையில் நிரந்தர வேலை கிடைக்கவும், பதவி உயர்வு உண்டாகும் கூற வேண்டிய நாமத்தை பற்றி இப்பொழுது பார்ப்போம். – Advertisement -நன்றாக படித்திருக்கிறோம் இருப்பினும் நம்முடைய படிப்பிற்கேற்ற வேலை கிடைக்கவில்லை, அப்படியே வேலை கிடைத்தாலும் அந்த வேலை நிரந்தரமான வேலையாக இருப்பதில்லை, எப்பொழுது வேண்டுமானாலும் அந்த வேலையில் இருந்து வெளியே வருவதற்குரிய வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது, என்ன செய்வது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்கள் தினமும் தங்களுடைய மனதிற்குள் விஷ்ணு சகஸ்ர நாமத்தில் இருந்து பெறப்பட்ட இந்த ஒரு திருநாமத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி கூறுவதன் மூலம் மகாவிஷ்ணுவின் அருளால் விரைவிலேயே அவர்களுக்கு நிரந்தரமான நல்ல வேலை கிடைக்கும்.மந்திரம்” விசிஸ்டாய நமஹ “ – Advertisement – வேலையில் சேர்ந்து விட்டோம், நமக்கு அனைத்து விதமான தகுதிகளும் இருக்கிறது, கடினமாக உழைக்கிறோம், இருப்பினும் நம்முடைய வேலையில் எந்தவித முன்னேற்றமும் உண்டாகவில்லை, பதவி உயர்வு ஏற்படவில்லை, நம்மை விட பின்தங்கி இருப்பவர்களுக்கு பதவி உயர்வு ஏற்பட்டுவிட்டது என்று நினைப்பவர்கள் இதே விஷ்ணு சகஸ்ர நாமத்தில் வரக்கூடிய இந்த ஒரு நாமத்தை அனு தினமும் மகாவிஷ்ணுவை நினைத்து கூறிக் கொண்டே இருப்பதன் மூலம் விரைவிலேயே அவர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பதவி உயர்வு கிடைக்கும்.மந்திரம்” த்ருடாய நமஹ “இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் சிவ மந்திரம்காக்கும் கடவுளாக திகழக்கூடிய மகாவிஷ்ணுவிடம் நாம் எதைக் கேட்டாலும் அவர் நமக்கு அருள்வார். அதிலும் அவருக்குரிய சிறப்பு மிகுந்த நாமங்களை கூறி கேட்கும்பொழுது அவர் விரைவிலேயே மனமகிழ்ந்து நாம் வேண்டியதை நமக்கு அருள்வார் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top