– Advertisement –
பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்ற பழமொழியை கூற கேள்விப்பட்டிருக்கிறோம். பணத்தைக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய பழமொழிகள் பல இருக்கின்றன. ஏன் நம் வள்ளுவரே இந்த உலகத்தில் நாம் வாழ வேண்டும் என்றால் நமக்கு பணம் என்பது வேண்டும் என்று கூறியிருக்கிறார். அந்த அளவிற்கு பணத்திற்கு அதிக அளவு முக்கியத்துவம் இந்த உலகத்தில் இருக்கிறது. பணம் இருந்தால் எதை வேண்டுமானாலும் வாங்கலாம், யார் வேண்டுமானாலும் வருவார்கள் என்று பணத்திற்குரிய முக்கியத்துவம் இந்த காலகட்டத்தில் அதிகமாகவே இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை ஈர்ப்பதற்கும் நிலையாக வைத்திருப்பதற்கும் சொல்ல வேண்டிய ஒரு மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
ஒருவர் கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் பணமானது நல்ல வழியில் சுப விரயங்களாக செலவானால் அதனால் நமக்கு நன்மைகளே உண்டாகும். ஆனால் பலருக்கும் அது வீண்விரயமாக செலவாகி சம்பாதித்த பணத்திற்குரிய மதிப்பே இல்லாமல் போய்விடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தாங்கள் சம்பாரித்த பணத்தை நல்ல முறையில் செலவு செய்ய வேண்டும் என்று நினைத்தாலும், அவர்களால் செய்ய இயலாத சூழ்நிலை உண்டாகிறது. இதற்கு தெய்வத்தின் அருளும் நமக்கு பரிபூரணமாக வேண்டும்.
– Advertisement –
அதேபோல் ஒருவர் ஒரு வழியில் சம்பாதித்துக் கொண்டிருக்கிறார், அந்த பணவரவு என்பது அவருடைய குடும்பத்திற்கு போதுமானதாக இல்லை, வேறு ஏதாவது ஒரு வழியில் அதிக அளவில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். அந்த முயற்சி வெற்றி அடைய வேண்டும் என்றாலும் அதற்கு தெய்வத்தின் அருள் என்பது வேண்டும். பணம் நம் கையில் வருவதற்கும் தெய்வத்தின் அருள் வேண்டும். வந்த பணம் நம்மிடமே தங்குவதற்கும் தெய்வத்தின் அருள் என்பது வேண்டும். பணம் இல்லை என்றால் பண தேவைக்காக கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அதனால் வீட்டில் நிம்மதி இல்லாத ஒரு நிலை ஏற்படும்.
அதனால் நம்முடைய தேவைக்கு ஏற்றவாறு பணவரவு என்பது நமக்கு வரவேண்டும். அப்படி வருவதற்கும் நம்மிடம் சேமிப்பாக உயர்வதற்கும் நாம் நம்முடைய முயற்சியோடு சேர்த்து தெய்வ வழிபாட்டிலும் ஈடுபட வேண்டும். விடாமுயற்சியுடன் கடினமாக உழைப்பதோடு மட்டுமல்லாமல் தெய்வ வழிபாட்டிலும் ஈடுபடுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் பணவரவில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அந்த வகையில் நாம் செய்யக்கூடிய தெய்வ வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது பார்க்கப் போகிறோம்.
– Advertisement –
இந்த வழிபாடு என்பது அம்பாளுக்குரிய வழிப்பாடாக திகழ்கிறது. பெண் தெய்வத்திடம் நாம் எந்த ஒரு வேண்டுதலை வைத்தாலும் அது விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. அப்பாவிடம் கேட்பதைவிட அம்மாவிடம் உரிமையாக கேட்போம். அதேசமயம் நாம் கேட்கும் அந்த பொருளை அம்மாவும் விரைவிலயே நமக்கு செய்து கொடுத்துவிடுவார் என்பது நம்முடைய வாழ்வியலில் நாம் பார்க்கும் விஷயம். அதே போல் தான் ஆண் தெய்வத்தை விட பெண் தெய்வத்திடம் நாம் வைக்கும் வேண்டுதல் என்பது விரைவிலேயே நிறைவேறும். அந்த வகையில் பண வரவை அதிகரிப்பதற்கும் வீண்விரயம் ஏற்படாமல் இருப்பதற்கும் அம்பாளுக்கு நாம் கூற வேண்டிய மந்திரத்தை பார்ப்போம்.
பல அற்புதமான சக்திவாய்ந்த வார்த்தைகளை உபயோகப்படுத்தி நாம் உச்சரிக்கும் மந்திரம் என்பது நம்முடைய வாழ்க்கையில் பல நன்மைகளை ஏற்படுத்தும். இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூற வேண்டும். காலையில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் விளக்கேற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த மந்திரத்தை தினமும் 108 முறை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. மாத தொடக்கத்திலோ அல்லது வெள்ளிக்கிழமையிலோ பௌர்ணமி, அமாவாசை போன்ற தினங்களிலோ இந்த மந்திரத்தை 108 முறை கூறலாம். இயன்றவர்கள் தினமும் கூறுவது நல்ல பலனைத் தரும்.
– Advertisement –
மந்திரம் ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் கோமதியே நமஹ
இதையும் படிக்கலாமே:ஒவ்வொரு நாளும் சிறப்பாக அமைய மந்திரம்
எளிமையான இந்த ஒரு வரி மந்திரத்தை முழுமனதோடு அம்மனை நினைத்து 108 முறை கூறுபவர்களுக்கு அம்மனின் அருளால் பணவரவில் இருக்கக்கூடிய அனைத்து விதமான பணம் ரீதியான பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி அதிக அளவில் பண வரவு உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam