
– Advertisement –
இன்று ஏப்ரல் மாதத்தின் முதல் நாள். இன்றைய நாளில் தொழில் செய்பவர்களும் வியாபாரம் செய்பவர்களும் புதிதாக கணக்கு தொடங்குவார்கள். இதற்காக பலரும் பலவிதமான ஆலயங்களுக்கு சென்று வழிபாடுகளை மேற்கொள்வார்கள். ஒரு சிலர் தாங்கள் தொழில் செய்யும் ஸ்தாபனத்தில் அனைவரையும் அழைத்து பூஜை போட்டு புது கணக்கு தொடங்குவார்கள். எப்படி தொடங்கினாலும் அந்த வருடம் முழுவதும் லாபம் பெற வேண்டும் என்ற வேண்டுதலை தான் முன்வைப்பார்கள். அப்படி லாபம் அதிகரிப்பதற்கு புது கணக்கு தொடங்கிய நாளில் கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருக
தொழில் வியாபாரம் செய்யக்கூடிய ஒவ்வொரு நபரும் தங்களுடைய தொழிலும் வியாபாரத்திலும் நல்ல லாபம் உண்டாக வேண்டும் என்றுதான் ஆசைப்படுவார்கள். அப்படி நல்ல லாபம் பெற வேண்டும் என்றால் அவர்கள் தயாரிக்க கூடிய பொருட்கள் விற்பனை ஆக வேண்டும். அப்பொழுதுதான் அவர்களுக்கு லாபம் உண்டாகும். அவர்கள் தயார் செய்த பொருட்களை வாங்குவதற்குரிய ஆட்கள் அவர்களை தேடி வர வேண்டும். இப்படி பலவிதமான விஷயங்கள் இருக்கின்றன. இவை அனைத்தையும் சரி செய்து முறையாக கடைப்பிடிப்பதற்கு பல விதமான தொழில் ரகசியங்களும் வியாபார நுனுக்கங்கள் இருந்தாலும் தெய்வத்தின் அருள் என்பதும் வேண்டும். அப்படி தெய்வத்தின் அருளை பெற்று தொழிலில் சிறந்து விளங்குவதற்கு புது கணக்கு தொடங்கக்கூடிய நாளில் வழிபாடுகளை செய்வார்கள்.
– Advertisement –
அப்படி புது கணக்கு தொடங்கிய நாளில் வழிபாடு செய்து புது கணக்கை ஆரம்பித்த அன்றைய நாள் இரவு படுக்கச் செல்லும் பொழுது அந்த தொழிலை நடத்துபவர் 27 முறை இந்த ஒரு மந்திரத்தை கூறினால் போதும் அவர்கள் தொழிலிலும் வியாபாரத்திலும் நல்ல பணவரவும் தன வரவும் உண்டாகும். அதன் மூலம் அவர்களின் லாபமும் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. இதை பூஜை அறையில் அமர்ந்து கூற வேண்டும் என்று எந்த நிபந்தனையும் கிடையாது. படுக்கச் செல்வதற்கு முன்பாக அமைதியாக அமர்ந்து முழு மனதோடு நிறுத்தி நிதானத்துடன் 27 முறை மட்டும் கூறினால் போதும். இயன்றவர்கள் அந்த மந்திரத்தை 27 முறை நோட்டில் எழுதலாம்.
இப்படி இந்த மந்திரத்தை கூறுவதன் மூலம் வியாபாரம் சிறந்து விளங்குவதோடு மட்டும் அல்லாமல் பண வசியம் உண்டாகும், வியாபார வசியம் உண்டாகும், நம் தொழிலிலோ வியாபாரத்திலோ நமக்கு இருக்கக்கூடிய எதிரிகள் நம்மை விட்டு விலகிச் செல்வார்கள் இப்படி கூறிக் கொண்டே செல்லலாம்.
– Advertisement –
மந்திரம்
“பணமஸ்து தனமஸ்து வியாபார ஆகர்சன வசிய வசிய”
இதையும் படிக்கலாமே:பங்குனி சங்கடஹர சதுர்த்தி நாளன்று கூற வேண்டிய விநாயகர் மந்திரம்
முழு மனதோடு இந்த ஒரு மந்திரத்தை இன்று மட்டும் இரவு படுக்கச் செல்வதற்கு முன் கூறி படுப்பவர்களுக்கு அவர்களுடைய தொழில் மற்றும் வியாபாரத்தில் லாபம் பெருகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam