மன பயம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்

மன பயம் நீக்கும் ஆஞ்சநேயர் மந்திரம்

Qries


நாம் ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்வதற்கு முன்பாக பலமுறை யோசித்து அந்த செயலில் ஈடுபடுவோம். முழுமையாக இந்த செயலை செய்யும் பொழுது எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்னும் பட்சத்தில்தான் அந்த செயலில் ஈடுபடுவோம். இருப்பினும் ஒரு சிலருக்கு அந்த செயலை செய்யும் பொழுது பலவிதமான பயம் ஏற்படும். எதிர்மறையான எண்ணங்கள் மனதில் அதிக அளவு ஏற்பட்டு தவறாக நடந்து விடுமோ என்ற பயத்துடனே செயல்படுவார்கள். இது சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே ஏற்படக்கூடிய ஒன்றுதான். அப்படிப்பட்ட தேவையற்ற மன பயத்தையும் எதிர்மறை ஆற்றலையும் நீக்கி தைரியத்துடன் செயலாற்றுவதற்கு கூற வேண்டிய ஆஞ்சநேயரின் மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.மன பயம் நீக்கும் மந்திரம்ஆஞ்சநேயர் என்றதும் நம் நினைவிற்கு வரக்கூடிய பண்புகள் என்றால் அது வீரம், தைரியம், பக்தி, பாசம் போன்றவை தான். இவை அனைத்தும் ஒருவருக்கு கிடைத்துவிட்டால் அவரே இந்த உலகில் சிறந்தவராக திகழ்வார். அப்படி திகழக்கூடிய ஆஞ்சநேயரை நாம் சரணாகதி அடைந்து விட்டால் நமக்கும் அவருடைய பண்புகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வந்துவிடும். அந்த வகையில் மன பயத்தை நீக்கி தைரியத்துடன் வாழ்வதற்கும், ஆஞ்சநேயர் நம் உடனேயே இருந்து நமக்கு அருள்புரிவதற்கும் நாம் உச்சரிக்க வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இப்பொழுது பார்க்க போகிறோம். – Advertisement -ஆஞ்சநேயரை வழிபாடு செய்வது என்பது மிகவும் உகந்த செயலாகவே கருதப்படுகிறது. யாரொருவர் ஆஞ்சநேயரை வழிபாடு செய்கிறார்களோ அவர்களுக்கு காரிய தடைகள் நீங்கும். வெற்றிகள் உண்டாகும். எதிரிகளால் ஏற்படும் பிரச்சனைகள் தீரும். சனீஸ்வர பகவானால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் விலகும். வீரம் உண்டாகும். மன தைரியமும் மனதெளிவும் ஏற்படும். பயம் என்ற பேச்சுக்கே இடமில்லாமல் போகும். இப்படி நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம்.சூரியனை எந்தவித பயமும் இல்லாமல் பழமாக கருதி உண்ணச் சென்றவர் தான் ஆஞ்சநேயர் என்று புராணங்களில் கூறப்பட்டிருக்கிறது. அப்படிப்பட்ட தைரியமான வீரமான ஆஞ்சநேயரை நாம் வழிபாடு செய்யும்பொழுது நாமும் தைரியத்துடன் வீரத்துடன் செயல்படலாம். சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுடைய மனதில் எப்பொழுதெல்லாம் பய உணர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் ஆஞ்சநேயரின் இந்த ஒரு மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே இருப்பதன் மூலம் மன பயம் முற்றிலும் நீங்கும். மேலும் அவர்கள் செல்லக்கூடிய காரியங்களில் தைரியத்துடன் ஈடுபட்டு வெற்றியை அடைவார்கள். – Advertisement – மந்திரம்“ஆஞ்சநேய ஆஞ்சநேய ஆஞ்சநேய பாஹிமாம்ஹனுமந்த ஹனுமந்த ஹனுமந்த ரக்ஷாமாம்”இதையும் படிக்கலாமே: தடங்கல் விலகி வெற்றி உண்டாகமனதில் பலதரப்பட்ட சிந்தனைகளை போட்டு குழப்பிக் கொண்டு இருப்பவர்களும், தேவையற்ற எண்ணங்களில் மனதை அலைபாய விட்டு கொண்டிருப்பவர்களும் அவை அனைத்தையும் நீக்கிவிட்டு ஆஞ்சநேயரின் இந்த மந்திரத்தை மனதிற்குள் கூறிக் கொண்டே இருப்பதன் மூலம் ஆஞ்சநேயரின் அருளால் அவர்கள் செய்யக்கூடிய அனைத்து காரியங்களிலும் வெற்றிகள் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top