
– Advertisement –
ஒருவருடைய வாழ்க்கையில் லட்சுமி கடாட்சம் ஏற்பட்டு விட்டால் அவருக்கு எந்தவித கஷ்டமும் இருக்காது, துன்பமும் இருக்காது, துயரமும் இருக்காது. அவர்கள் தொட்ட காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் உண்டாகும். செல்வத்திற்கு மேல் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும். வீட்டில் இருக்கக் கூடிய அனைவருக்கும் நல்ல காலம் பிறந்துவிடும் என்றே கூறலாம். அப்படிப்பட்ட லட்சுமி கடாட்சத்தை பெறுவதற்கு உச்சரிக்க வேண்டிய சிவ மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
லட்சுமி கடாட்சம் தரும் சிவ மந்திரம்
மகாலஷ்மிக்கு ஐஸ்வர்யத்தை வழங்கிய தெய்வமாக சிவபெருமான் திகழ்கிறார். மேலும் குபேரருக்கு குபேர பதவியை தந்தவராகவும் சிவபெருமான்தான் திகழ்கிறார். அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்கியவராக சிவபெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட சிவபெருமானை நாம் மாசி மாதத்தில் வழிபாடு செய்வதன் மூலம் அளவில்லா நன்மைகள் நமக்கு கிடைக்கும். அதிலும் குறிப்பாக சிவபெருமானின் மந்திர வழிபாட்டை நாம் செய்யும் பொழுது அதீத பலன் உண்டாகும்.
– Advertisement –
பொதுவாக சிவபெருமானை வழிபாடு செய்வதற்கு உகந்த நாட்களாக சோமவார நாளும், பிரதோஷ நாளும், சிவராத்திரி நாளும் திகழ்கிறது. சோமவாரம் என்பது வாராவாரம் வரக்கூடிய திங்கட்கிழமையை குறிக்கும். பிரதோஷம் என்பது மாதத்தில் இரண்டு முறை வரக் கூடியதாக இருக்கும். சிவராத்திரியும் மாதத்தில் இரண்டு முறை வரும். இருப்பினும் மாசி மாதத்தில் வரக்கூடிய சிவராத்திரியை தான் நாம் மகா சிவராத்திரி என்று கூறுகிறோம். அந்த வகையில் சிவபெருமானுக்குரிய விசேஷ நாட்களும் தொடர்ச்சியாக மாசி மாதத்தில் வருகிறது. அதனால் மூன்று நாட்களும் நாம் தொடர்ச்சியாக இந்த முறையில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக சிவபெருமானை வழிபாடு செய்யும்பொழுது நம் வாழ்வில் பலவிதமான அற்புதங்கள் நிகழும்.
மாசி மாதத்தில் வரக்கூடிய 24ஆம் தேதி சோமவாரம் ஆகவும், 25ஆம் தேதி பிரதோஷமாகவும், 26 ஆம் தேதி மகா சிவராத்திரி ஆகவும் வருகிறது. அதனால் தொடர்ச்சியாக இந்த மூன்று நாட்களும் சிவபெருமானின் இந்த ஒரு மந்திரத்தை 1008 முறை உச்சரிப்பவர்களுக்கு லட்சுமி கடாட்சம் உண்டாகும். மகாலட்சுமியின் அருளால் அனைத்து விதமான செல்வ செழிப்பும் ஏற்படும். மற்ற இரண்டு நாட்களில் கூற இயலவில்லை என்பவர்கள் கூட மகாசிவராத்திரி நாளில் 1008 முறை கூற வேண்டும். ஒரு வேளை 1008 முறை கூற இயலவில்லை என்னும் பட்சத்தில் மகாசிவராத்திரி நாளன்று இரவு 11 மணியிலிருந்து 12 மணிக்குள் 108 முறையாவது இந்த மந்திரத்தை கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் சிவபெருமானின் பரிபூரண அருளை பெறுவதோடு மகாலட்சுமியின் அருட்பார்வையும் நம் மீது படும். இதன் மூலம் நாள்பட்ட வறுமை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.
– Advertisement –
மந்திரம்
“ஓம் சர்வ சர நமசிவாய”
இதையும் படிக்கலாமே:மகா சிவராத்திரியில் கோவிலுக்கு வாங்கி தர வேண்டிய பொருட்கள்
அனைத்து விதமான செல்வங்களையும் பெற்று சிறப்புடன் வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் முழுமனதோடு இந்த மந்திரத்தை சிவபெருமானை நினைத்து கூறினால் போதும். அவர்கள் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam