ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறை ஏகாதசி என்று இரண்டு ஏகாதசி வரும். இந்த இரண்டு ஏகாதசியிலும் நாம் பெருமாளை வழிபாடு செய்ய வேண்டும். அதிலும் கிருஷ்ண ஜெயந்தி முடிந்த பிறகு வரக்கூடிய முதல் தேய்பிறை ஏகாதசி என்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஏகாதசியாக திகழ்கிறது. அதோடு மட்டுமல்லாமல் இந்த ஏகாதசி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வருவது கூடுதல் சிறப்பை தருகிறது. அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஏகாதசியில் பெருமானை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.விரதங்களிலேயே மிகவும் சிறப்பு மிகுந்த விரதமாக ஏகாதசி விரதம் திகழ்கிறது என்று நம் அனைவருக்கும் தெரியும். அப்படிப்பட்ட ஏகாதசி விரதத்தை யார் ஒருவர் தொடர்ச்சியாக மேற்கொள்கிறார்களோ அவர்களுடைய கர்ம வினைகள் முற்றிலும் நீங்குவதோடு மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் பரிபூரண அருளை பெறுவார்கள். மேலும் வைகுண்டம் செல்வதற்குரிய வாய்ப்புகளும் அவர்களுக்கு உண்டாகும். அப்படிப்பட்ட சிறப்பு வாய்ந்த ஏகாதசி செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரும் பொழுது நம்முடைய பணம் தொடர்பான அனைத்து கஷ்டங்களும் தீர்வதற்குரிய சிறந்த தீர்வைத் தரும். – Advertisement -இவ்வளவு சிறப்பு மிகுந்த செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி நாள் அன்று காலையிலேயே பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்கக்கூடிய பெருமாளின் படத்தை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பெருமாளுக்கு துளசி மாலை சாற்றி நெய் தீபம் ஏற்றி வைத்து பின்வரும் இந்த மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். இந்த மந்திரத்தை கூறுவதற்கு முன்பாக எந்த வித திரவ உணவுகளையும் எடுத்து இருக்கக் கூடாது. அதாவது வெறும் வயிற்றில் தான் இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.விரதம் இருப்பவர்களாக இருக்கும் பட்சத்தில் அவர்களின் விரத நிலையை பொறுத்து இந்த மந்திரத்தை கூறலாம். மேலும் இந்த மந்திரத்தை நாம் 11 முறை கூறுவதன் மூலம் நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான வறுமையும் சரித்திரமும் முற்றிலும் நீங்கும். மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெற முடியும். மேலும் கடன் பிரச்சினைகள், பணம் தொடர்பான பிரச்சனைகள் என்று அனைத்தும் தீரும். – Advertisement – மந்திரம்” ஓம் நிரஞ்ஜநாய வித்மஹேநிராபாஸாய தீமஹி தந்நோஸ்ரீநிவாஸஹ் ப்ரசோதயாத் “இதையும் படிக்கலாமே: காரிய தடையை நீக்கும் மந்திரம்அதிசக்தி வாய்ந்த செவ்வாய்க்கிழமையோடு சேர்ந்து வரக்கூடிய தேய்பிறை ஏகாதசி நாளன்று பெருமாளை நினைத்து இந்த மந்திரத்தை கூறுபவர்களுக்கு அவர்களுடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய வறுமையும், தரித்திரமும் முற்றிலும் நீங்கும். மகாவிஷ்ணு மற்றும் மகாலட்சுமியின் அருளால் செல்வநிலை உயரும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam