
– Advertisement –
நம்முடைய வாழ்க்கையை நடத்துவதற்கு நமக்கும் மிகவும் முக்கியமாக தேவைப்படக்கூடியது என்றால் அது பணம்தான். பணம் இல்லாவிட்டால் நம்மால் நம்முடைய வாழ்க்கையை வாழவே முடியாது. பணம் தான் பலவிதமான பிரச்சனைக்கும் காரணமாக திகழ்கிறது. ஒருவர் சிறப்பாக வாழ்கிறார் என்பதற்கு பணமே எடுத்துக்காட்டாக திகழ்கிறது. அவருடைய உண்மையான குணம் என்னவென்று தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் ஒருவரிடம் பணம் இருந்து விட்டால் அவரே உயர்ந்தவர் என்று கூறக்கூடிய காலமாக தான் இந்த காலம் திகழ்கிறது. அப்படிப்பட்ட காலத்தில் ஏற்ப பண வரவை அதிகரிப்பதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
பணம் குவிய மந்திரம்
பணத்தை சம்பாதிப்பது என்பது மிகப்பெரிய விஷயம். அப்படி பணத்தை நாம் சம்பாதித்தாலும் அந்த பணமானது நம்மிடம் வந்து சேர வேண்டும். மேலும் அது நம்மிடமே தங்க வேண்டும். அப்பொழுதுதான் அந்த பணத்தால் நமக்கு நன்மைகள் உண்டாகும். பலரும் கஷ்டப்பட்டு பணத்தை சம்பாதிக்கிறார்கள். ஆனால் ஏதோ ஒரு சூழ்நிலையில் ஏதோ ஒரு காரணத்திற்காக அது தங்கள் கையில் தங்காமல் வீண்விரயமாக சென்று கொண்டே இருக்கும். அப்படிப்பட்டவர்களும் இந்த மந்திரத்தை கூறும்பொழுது பணம் அவர்கள் கையில் தங்க ஆரம்பிக்கும்.
– Advertisement –
பணத்திற்கு அதிபதியாக திகழக்கூடியவர்கள் மகாலட்சுமி, குபேரர் போன்றவர்கள் தான். இவர்களின் அருளை நாம் பரிபூரணமாக பெரும்பொழுது நமக்கு பணவரவு என்பது அதிகரிக்கும். இது அனைவரும் அறிந்ததுதான். அந்த வகையில் வியாழக்கிழமை என்பது குபேர பகவானுக்கு உரிய கிழமையாக திகழ்கிறது. அதிலும் சித்திரை மாதத்தில் வரக்கூடிய முதல் வியாழக்கிழமை என்பது மிகவும் சிறப்பு மிகுந்ததாகவே கருதப்படுகிறது. அன்றைய நாளில் குபேர பகவானை நினைத்து நாம் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறினால் போதும். எப்பேர்பட்ட வறுமையான சூழ்நிலையில் இருந்தாலும் அந்த வறுமை நிலை மாறி பணத்தை சம்பாதிப்பதற்குரிய வழி உண்டாகும். பணத்தை சம்பாதிப்பதோடு அந்த பணம் நம்மிடம் தங்குவதற்குரிய பாக்கியமும் நமக்கு கிடைக்கும்.
ஏப்ரல் மாதத்தின் 17ஆம் தேதி இரவு 8 மணியில் இருந்து 9 மணிக்குள் வீட்டு பூஜை அறையில் ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். பிறகு வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொண்டு பின்வரும் இந்த மந்திரத்தை மூன்று முறை மட்டும் கூறினால் போதும். இப்படி கூறி முடித்த பிறகு முழு மனதோடு பணவரவு அதிகரிக்க வேண்டும், பணம் கையில் தங்க வேண்டும், பணம் சேமிப்பாக உயர வேண்டும் என்று முழு மனதோடு வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த தீபம் குறைந்தது அரை மணி நேரம் எரிந்தால் போதும். பிறகு குளிர வைத்து விடலாம்.
– Advertisement –
மந்திரம்
“ஓம் யக்ஷராஜாய வித்மஹேவைஸ்ரவ ணாய தீமஹி!தந்நோ குபேர ப்ரசோதயாத்…”
இதையும் படிக்கலாமே:விசுவாவசு வருடம் சிறப்பாக அமைய
தெய்வத்தை நாம் சாதாரணமாக வழிபாடு செய்வதை விட அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி வழிபாடு செய்யும் பொழுது அந்த மந்திரத்தில் இருக்கக்கூடிய மந்திர சொற்கள் நம்முடைய வாழ்க்கையை மேலும் சிறப்பு மிகுந்ததாக மாற்றும். முழு நம்பிக்கையுடன் குபேரரின் இந்த மந்திரத்தை சித்திரை முதல் வியாழக்கிழமை அன்று கூறுவதன் மூலம் பணவரவு அதிகரிக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam