ஒருவருக்கு எவ்வளவு பணம் இருந்தாலும் தைரியம் இருந்தாலும் வீரம் இருந்தாலும் கல்வி அறிவு என்ற ஒன்று இருந்தால்தான் அவரால் சரியான நேரத்தில் சரியான விதத்தில் பிறரிடம் பேசவோ பழகவோ இயலும். அப்படிப்பட்ட கல்வி அறிவை தரக்கூடிய தெய்வமாக தான் சரஸ்வதி தேவி திகழ்கிறார். கல்வியறிவை மட்டுமல்லாமல் சாமர்த்திய தனத்தையும் புத்தி கூர்மையையும் தரக்கூடிய ஒரு அற்புதமான கடவுளாக தான் சரஸ்வதி தேவி திகழ்கிறார். அப்படிப்பட்ட சரஸ்வதி தேவியை வழிபாடு செய்வதற்கு உகந்த தினமாக தான் விஜயதசமி தினம் திகழ்கிறது. அன்றைய நாளில் சரஸ்வதி தேவியை நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.விஜயதசமி சரஸ்வதி மந்திரம்சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அன்றாடம் தங்களுடைய வாழ்க்கையில் ஏதாவது ஒரு புதிய விஷயத்தை கற்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள். கற்றுக் கொண்ட அந்த புதிய செயலை பின்பற்றுவதும் பின்பற்றாமல் கைவிடுவதும் அவரவர்களின் கையில் தான் இருக்கிறது. அதனால் தான் நம்முடைய முன்னோர்கள் கல்வி கரையில கற்பவர் நாள் சில என்று கூறி இருக்கிறார்கள். அப்படிப்பட்ட கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய நாளாக தான் விஜயதசமி நாள் திகழ்கிறது. – Advertisement -அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி விஜயதசமி கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் பலரும் தங்களுடைய குழந்தைகளுக்கு வித்யாரம்பம் செய்து வைப்பார்கள். நாக்கில் தேனால் சரஸ்வதியின் மந்திரத்தை எழுதுவது, நெல்லில் குழந்தைகளின் கையைப் பிடித்து அ,ஆ போன்றவற்றை எழுதுவது, குழந்தைகளை பள்ளிக்கூடத்தில் சேர்ப்பது, கல்வி தொடர்பாக புதிதாக ஏதாவது ஒரு முயற்சியை தொடங்குவதாக இருக்கும் பட்சத்தில் அன்றைய தினத்தில் தொடங்குவது என்று பலவிதமான சரஸ்வதி தொடர்பான அறிவுத்திறனை அதிகரிப்பது தொடர்பான செயல்களில் ஈடுபடுவார்கள். அப்படி நாம் ஆரம்பிக்கக்கூடிய அந்த செயல்கள் நமக்கு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால் அதற்கு கண்டிப்பான முறையில் சரஸ்வதி தேவியின் அருள் என்பது வேண்டும். சரஸ்வதி தேவியின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு மந்திரமாக தான் இந்த மந்திரம் திகழ்கிறது.விஜயதசமி நாளன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து குளித்து முடித்துவிட்டு விஜயதசமி வழிபாட்டை செய்யக்கூடியவர்கள் இந்த மந்திரத்தை குறைந்தபட்சம் 10 நிமிடமாவது கூறவேண்டும். முழுமனதோடு சரஸ்வதி தேவியை நினைத்து இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை கூறும் பொழுது ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு ஸ்பூன் அளவிற்கு தேனை சரஸ்வதி தேவிக்கு நெய்வேத்தியமாக வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூற வேண்டும். இயன்றவர்கள் இந்த மந்திரத்தை 108 முறை கூறி சரஸ்வதி தேவிக்கு வாசனை மிகுந்த மலர்களால் அர்ச்சனை செய்யலாம். வழிபாட்டை நிறைவு செய்த பிறகு அந்த தேனை வீட்டில் இருக்கக் கூடிய அனைவரும் பிரசாதமாக எடுத்துக் கொள்ள வேண்டும். – Advertisement – மந்திரம்” ஓம் சரதேச வித்மஹேபிரம்மபத்னிச தீமஹிதன்னோ வாணி பிரசோதயாத் “இதையும் படிக்கலாமே: எதிர்பாராத பண வரவை தரும் மந்திரம்சிறப்பான அறிவுத்திறனை பெற்று வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று நினைக்கக் கூடிய ஒவ்வொரு நபரும் விஜயதசமி நாளன்று இந்த மந்திரத்தை கூறி சரஸ்வதி தேவியை வழிபாடு செய்ய அனைத்து நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam