– Advertisement –
ஒருவர் தன்னுடைய வாழ்க்கையில் சிறப்பான வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நினைத்தால் முதலில் அவருக்கு விரும்பிய வேலை கிடைக்க வேண்டும். அரசாங்க வேலையாக இருந்தாலும் தனியார் வேலையாக இருந்தாலும் அவர்கள் விரும்பிய வேலை கிடைத்தால் தான் அந்த வேலையில் அவர்களால் சிறப்பாக செயல்பட்டு நல்ல முன்னேற்றத்தை பெற முடியும். பலருக்கும் இன்றைய காலகட்டத்தில் படித்த படிப்பிற்கேற்ற வேலை கிடைக்காமல் கிடைத்த வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் சிலரோ வருட கணக்கில் அரசாக வேலையை செய்ய வேண்டும் என்ற ஆசையில் வேறு வேலைக்கு சேராமல் அரசாக வேலையை பற்றி மட்டுமே சிந்தித்து பரீட்சை எழுதி அதற்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி வேலை தொடர்பான அனைத்து வேண்டுதல்களும் நிறைவேற வேண்டும் என்றால் விநாயகப் பெருமானின் எந்த மந்திரத்தை கூறி வழிபாடு செய்ய வேண்டும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
விரும்பிய வேலை கிடைக்க விநாயகர் மந்திரம்
தொட்ட காரியம் அனைத்தும் துலங்க வேண்டும். வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வார்கள். மிகச்சிறந்த கடவுளாக திகழ்கிறார். அப்படிப்பட்ட விநாயகப் பெருமானை வேண்டிக்கொண்டு நாம் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும் என்று கூறப்படுகிறது. வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற வேண்டுமென்றால் அதற்குரிய வழிபாட்டு முறைகளும் மந்திரங்களும் இருக்கின்றன. அதைப்பற்றி தெரிந்து கொள்வோம்.
– Advertisement –
பொதுவாக வேலை தொடர்பான வேண்டுதல் நிறைவேற வேண்டும் என்றால் சூரிய பகவானையோ அல்லது முருகப்பெருமானையோ வழிபாடு செய்ய வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி சூரிய பகவானின் அம்சம் பொருந்திய விநாயகராக திகழ்ந்தவர் வெள்ளெருக்கு விநாயகர். வெள்ளெருக்கால் செய்யப்பட்ட சிறிய அளவிலான விநாயகரை தான் இந்த வழிபாட்டிற்கு நாம் பயன்படுத்த வேண்டும். இந்த வழிபாட்டை நாம் என்றைக்கு வேண்டுமானாலும் ஆரம்பிக்கலாம்.சதுர்த்தி திதியில் செய்ய ஆரம்பித்தால் அதற்கு இன்னும் நல்ல பலன்கள் கிடைக்கும்.
சதுர்த்தி திதி அன்று வெள்ளெருக்கு விநாயகர் சிறிய அளவில் இருந்தாலும் அந்த விநாயகரை வாங்கிக் கொள்ளுங்கள். இந்த விநாயகரை வீட்டு பூஜை அறையில் தான் வைக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையும் இல்லை. வீட்டில் சற்று உயரத்தில் இருக்கக்கூடிய எந்த பொருளின் மீது வேண்டுமானாலும் நாம் வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். முதலில் விநாயகரை வாங்கி வந்தவுடன் மஞ்சள் கலந்த தண்ணீரில் அவரை சுத்தம் செய்து கொள்ளுங்கள்.
– Advertisement –
காலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு பின்வரும் இந்த மந்திரத்தை 11 முறை உச்சரிக்க வேண்டும். தொடர்ச்சியாக 48 நாட்கள் விநாயகர் பெருமானுக்கு இந்த மந்திரத்தை விநாயகர் பெருமானை நோக்கி 11 முறை கூறும்பொழுது விநாயகப் பெருமானின் அருளால் விரைவில் விரும்பிய வேலை கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
“ஓம் ஸ்ரீ சிவ சூரிய நாராயண சுவாமினே நமஹ”
இதையும் படிக்கலாமே: ராஜயோகம் தரும் முருகன் மந்திரம்
மந்திரத்தை மட்டும் கூறினால் மாங்காய் பழுக்காது என்று கூறுவார்கள். அந்த வகையில் மந்திரத்தை மட்டும் உச்சரித்தால் வேலை கிடைக்காது. உச்சரிப்பதோடு வேலை தொடர்பான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கு விநாயகப் பெருமானின் அருளால் கண்டிப்பான முறையில் நினைத்த வேலை கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam