வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு | Vetriyai tharum murugan valipadu

வெற்றியைத் தரும் முருகன் வழிபாடு | Vetriyai tharum murugan valipadu

Qries

– Advertisement –

கலியுக தெய்வமாக திகழக்கூடியவர் முருகப்பெருமான். அப்படிப்பட்ட முருகப்பெருமானிடம் நாம் எந்த கோரிக்கை வைத்தாலும் அந்த கோரிக்கையை அவர் உடனே நிறைவேற்றி தருவார் என்று கூறப்படுகிறது. அதிலும் குறிப்பாக முழுமனதோடு நாம் வேண்டக்கூடிய ஒவ்வொரு வேண்டுதலும் முருகப்பெருமானின் அருளால் நடந்தேறும் என்று தான் கூற வேண்டும். நம்முடைய பக்தி உண்மையாக இருக்கிறதா என்பதற்காக சோதனை வைத்தாலும் நம்முடைய வேண்டுதலை நிறைவேற்றக்கூடியவராகவே முருகப்பெருமான் திகழ்கிறார். அப்படிப்பட்ட முருகப்பெருமானை எந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் வெற்றிகள் கிடைக்கும் என்றுதான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
முருகப்பெருமானை வழிபடுவதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. குறிப்பாக வெற்றிகள் கிடைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் கண்டிப்பான முறையில் முருகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானை சரணாகதி அடைந்து வேலுண்டு வினையில்லை என்ற கூற்றுக்கு இணங்க அவரையும் அவர் கையில் இருக்கக்கூடிய வேலையும் மனதார நினைத்துக் கொண்டு நாம் மேற்கொள்ளும் வழிப்பாடானது நமக்கு வெற்றிகளை குவித்து தரும். அப்படிப்பட்ட முருகப்பெருமான் வழிபாட்டை பற்றி தான் இப்பொழுது நாம் பார்க்க போகிறோம்.
– Advertisement –

இந்த வழிபாட்டை செவ்வாய்க்கிழமை அன்றுதான் ஆரம்பிக்க வேண்டும். காலையிலேயே எழுந்து சுத்தமாக குளித்து முடித்துவிட்டு வீட்டு பூஜை அறையில் இருக்க கூடிய முருகப்பெருமானின் உருவப்படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். பிறகு முருகப்பெருமானுக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு மந்திரத்தை 21 முறை கூற வேண்டும்.
இயன்றவர்கள் அருகில் இருக்கக்கூடிய முருகப்பெருமானின் ஆலயத்திற்கு சென்று முருகப்பெருமானை ஆறு முறை வலம் வந்து தீபம் ஏற்றி வைத்து இந்த மந்திரத்தை கூறலாம். முதல் நாள் மட்டும் ஆலயத்திற்கு சென்று கூறிவிட்டு அதற்குப் பிறகு தொடர்ச்சியாக 48 நாட்கள் வீட்டிலேயே தீபம் ஏற்றி வைத்தும் இந்த மந்திரத்தை கூறலாம்.
– Advertisement –

எந்த ஒரு முயற்சியை நாம் செய்வதாக இருந்தாலும் அந்த முயற்சியில் தடைகள் ஏற்படுகிறது என்றாலோ, நமக்கு கஷ்டத்திற்கு மேல் கஷ்டம் வந்து கொண்டிருக்கிறது, துன்பங்கள் துரத்திக் கொண்டு இருக்கின்றன என்பவர்களும், செய்யக்கூடிய எந்த ஒரு காரியமாக இருந்தாலும் அந்த காரியத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறது என்றாலும், முக வசீகரம் ஏற்பட வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்யும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியை மட்டுமே தழுவுகின்றன வெற்றி அடையவில்லை என்பவர்களும் இந்த மந்திரத்தை முழுமனதோடு முருகப்பெருமானை நினைத்து கூற வேண்டும்.
மந்திரம்
தீப மங்கள ஜோதீ நமோநமதூய அம்பல லீலா நமோநமதேவ குஞ்சரி பாகா நமோநம …… அருள்தாராய்
– Advertisement –

இந்த மந்திரத்தை பிரம்ம முகூர்த்த நேரத்தில் கூறுவது என்பது மிகவும் சிறப்பு. அவ்வாறு கூறும் பொழுது முருகப்பெருமானுக்கு வாசனை மிகுந்த மலர்களையோ அல்லது செவ்வரளி பூக்களையும் சூட்டிவிட்டு 21 முறை அந்த மலர்களால் அர்ச்சனை செய்தவாறு இந்த மந்திரத்தை கூற வேண்டும். மேலும் முருகப்பெருமானுக்கு தங்களால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் மேற் சொன்ன அனைத்து பலன்களும் நமக்கு கிடைக்கும்.
இதையும் படிக்கலாமே நினைத்ததெல்லாம் நடக்க வாராகி அம்மன் மந்திரம்
மிகவும் எளிமையான இந்த மூன்று வரி மந்திரத்தை முருகப்பெருமானை மனதார நினைத்துக் கொண்டு கூறுபவர்களுக்கு அவர்களுடைய முயற்சிகளில் வெற்றிகள் என்பது கண்டிப்பான முறையில் ஏற்படும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top