வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்

வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்

Qries





– Advertisement –

துடிப்பான தெய்வமாக திகழக்கூடிய தெய்வங்களுள் ஒருவராக இருப்பவர்தான் வாராகி அம்மன், வாராகி அம்மனை முழு மனதோடு சரணாகதி அடைந்து வழிபாடு செய்ய ஆரம்பித்து விட்டோம் என்றால் நாம் செய்யக்கூடிய ஒவ்வொரு நல்ல காரியத்திற்கும் நமக்கு நல்லவிதமான பலன்களை வாரி வழங்குவார்கள் என்று கூறலாம். யாருக்கும் எந்த கஷ்டமும் தராமல் நாம் உண்டு நம் வேலை உண்டு என்று நியாயமான முறையில் வாழ்க்கையை நடத்திச் செல்லக்கூடிய ஒவ்வொருவருக்கும் வாராகி அம்மன் அஷ்டலஷ்மியாக இருந்து அருள் பாலிப்பார் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட வாராகி அம்மனின் எந்த மந்திரத்தை கூறினால் வேண்டிய வரம் கிடைக்கும் என்று தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.
வேண்டிய வரம் கிடைக்க வாராஹி மந்திரம்
ஒவ்வொரு தெய்வத்திற்கும் உகந்த நாட்கள் என்று சில நாட்கள் இருக்கும். அந்த நாட்களில் அந்த தெய்வத்திற்குரிய மந்திரத்தை கூறி நாம் வழிபாடு செய்யும்பொழுது அந்த தெய்வத்தின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். மேலும் அந்த மந்திரத்தை கூறி நாம் வழிபாடு செய்து விட்டு என்ன வரம் கேட்டாலும் அந்த வரத்தை அந்த தெய்வம் நமக்கு அருளும் என்று கூறப்படுகிறது. அதனால் தான் மந்திர உச்சாடல் என்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாக திகழ்கிறது. அந்த வகையில் வாராகி அம்மனின் மந்திரத்தை பற்றி இப்பொழுது தெரிந்து கொள்வோம்.
– Advertisement –

இன்று வாராகி அம்மனை வழிபாடு செய்வதற்கு மிகவும் உகந்த நாளாக கருதப்படுகிறது. காரணம் இன்று வளர்பிறை பஞ்சமி. வளர்பிறை பஞ்சமியான இன்று நாம் என்ன வரம் வேண்டி வாராகி அம்மனை வழிபாடு செய்தாலும் அந்த வரத்தை மிகவும் எளிதில் பெறுவதற்கு வாராகி அம்மனுக்குரிய ஒரு மந்திரம் இருக்கிறது. அந்த மந்திரத்தை முழுமனதோடு மூன்றே மூன்று முறை மட்டும் இன்று இரவு 12 மணிக்குள் யாரொருவர் கூறுகிறார்களோ அவர்களுக்கு கண்டிப்பான முறையில் வாராகி அம்மனின் அருளால் அவர்கள் வேண்டிய வரம் கிடைக்கும் என்றே கூறலாம்.
இதற்கென்று தனியாக எந்தவித பூஜை முறைகளும், வழிபாட்டு முறைகளும் கிடையாது. வீட்டு பூஜை அறையில் அமர்ந்துதான் இந்த மந்திரத்தை கூற வேண்டும் என்று கூட இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் வடக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ள வேண்டும் என்பது மட்டுமே குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை 108 முறை, 1008 முறை சொல்ல வேண்டும் என்ற அவசியம் கூட கிடையாது. மூன்றே மூன்று முறை முழு மனதோடு மனம் முழுவதும் வாராகி அம்மனின் உருவத்தை பதிய வைத்து வாராகி அம்மனை முழு மனதோடு நினைத்துக் கொண்டு இந்த மந்திரத்தை கூறினால் போதும். வாராஹி அம்மனின் அருளால் நாம் வேண்டிய வரம் நமக்கு கிடைக்கும்.
– Advertisement –

மந்திரம்
“ஓம் ஐம் வாராகி தேவியே நமஹ”
இதையும் படிக்கலாமே:புது கணக்கு தொடங்கிய நாளில் கூற வேண்டிய மந்திரம்
மிகவும் எளிமையான அதேசமயம் அதிசக்தி வாய்ந்த இந்த ஒரு மந்திரத்தை இன்று இரவுக்குள் மூன்று முறை வாராகி அம்மனை நினைத்து கூறுபவர்களுக்கு வாராகி அம்மனின் அருளால் வேண்டிய வரம் கிடைக்கும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

– Advertisement –








Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top