வேண்டுதலை நிறைவேற்றும் அபிஜித் நட்சத்திர மந்திரம்

வேண்டுதலை நிறைவேற்றும் அபிஜித் நட்சத்திர மந்திரம்



அபிஜித் நட்சத்திரத்தின் ரகசியத்தை பலரும் அறிந்திருப்போம். அப்படிப்பட்ட அற்புதமான அபிஜித் நட்சத்திர நேரத்தில் நாம் செய்யக்கூடிய எந்த ஒரு வழிப்பாடும், பரிகாரமும், வேண்டுதலும் விரைவிலேயே வெற்றியைத் தரும் என்றே கூறலாம். அபிஜித் நட்சத்திர நேரத்தில் நமக்கு எது வேண்டுமோ அதை முழுமனதோடு கிருஷ்ண பகவானிடம் கேட்கும்பொழுது அது நமக்கு விரைவிலேயே கிடைத்துவிடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட அபிஜித் நட்சத்திர நாளில் கிருஷ்ணரையும் பெருமாளையும் நினைத்து கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.அபிஜித் நட்சத்திர மந்திரம்ஒவ்வொரு நாளும் வரக்கூடிய அபிஜித் முகூர்த்தம் எந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதைவிட பல மடங்கு முக்கியத்துவம் வாய்ந்தது தான் 27 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய அபிஜித் நட்சத்திரம். இது வெறும் 24 நிமிடங்கள் மட்டுமே தான் இருக்கும் என்பதால் இந்த நேரத்தை அனைவரும் தவறவிடாமல் சரியாக பயன்படுத்த வேண்டும். நியாயமான எந்த ஒரு வேண்டுதலாக இருந்தாலும் கோரிக்கையாக இருந்தாலும் அது விரைவிலேயே நிறைவேறும் என்று கூறப்படுகிறது. நமக்காகவோ அல்லது நம்மைச் சார்ந்தவர்களுக்காகவோ நன்மைகள் நடைபெற வேண்டும் என்று நினைத்து தான் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. – Advertisement -அபிஜித் நட்சத்திரம் என்பது செப்டம்பர் மாதம் நான்காம் தேதி இரவு 11:31 மணிக்கு ஆரம்பித்து 11:55 மணி வரை இருக்கிறது. இந்த நேரத்தில்தான் நாம் இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். இந்த மந்திர வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நியாயமான ஏதாவது ஒரு வேண்டுதலை முன்வைத்து செய்ய வேண்டும். வேண்டுதலை வைக்காமல் இந்த மந்திர வழிபாட்டை செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி வேண்டுதல் வைக்காமல் நாம் இந்த மந்திர வழிபாட்டை செய்யும் பொழுது கிருஷ்ண பரமாத்மாவே நம்முடன் நமக்காக வந்து நம்முடைய தேவைகளை பூர்த்தி செய்வார் என்று கூறப்படுகிறது.சரியாக அபிஜித் நட்சத்திர நேரம் வரும் சமயத்தில் வீட்டு பூஜை அறையில் இந்த மந்திர வழிபாட்டை செய்ய வேண்டும். அவ்வாறு வீட்டு பூஜை அறையில் செய்பவர்கள் கிருஷ்ணரின் படம், சிலை அல்லது பெருமாளின் படம், சிலைக்கு முன்பாக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு இந்த மந்திரத்தை கூறுவது சிறப்பு. ஒருவேளை பூஜை அறைக்கு செல்ல முடியாத சூழ்நிலையில் இருப்பவர்கள் வீட்டில் ஏதாவது ஒரு இடத்தில் அமர்ந்து கொண்டு இந்த நேரத்தில் இந்த மந்திரத்தை கூறலாம். – Advertisement – இந்த மந்திரத்தை கூறுவதற்கு எந்தவித தீட்டும் தடையாக இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மந்திரத்தை 27 முறை நிறுத்தி நிதானத்துடன் கூற வேண்டும். இந்த மந்திரத்தை சரியாக அபிஜித் நட்சத்திர நேரம் ஆரம்பித்த பிறகு கூற ஆரம்பித்து அபிஜித் நட்சத்திர நேரம் முடிவதற்குள் கூறி முடித்து விட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.மந்திரம்” ஸ்ரீ ஹரி கேசவ மாதவ ஜெகன்நாதாய கோவிந்தாய ஜெய ஜெய நமஹ “இதையும் படிக்கலாமே:27 நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய அபிஜித் நட்சத்திர நேரத்தில் இந்த முறையில் பெருமாளின் நாமத்தை கூறி வழிபாடு செய்பவர்களுக்கு அவர்களுடைய வேண்டுதல் விரைவில் நிறைவேறும் என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top