நித்ய சுபம் – தமிழ் ஜோதிட தளம்

வைகாசி மாத பண வசிய மந்திரம்

வைகாசி மாத பண வசிய மந்திரம்



தமிழ் வருடமாக இருந்தாலும் ஆங்கில வருடமாக இருந்தாலும் ஒவ்வொரு வருடத்திலும் வரக்கூடிய 12 மாதங்களும் சிறப்பு மிகுந்த மாதங்களாகவே திகழ்கின்றன. ஒவ்வொரு மாதத்திலும் ஒவ்வொரு விதமான தெய்வம் சிறப்பு பெற்ற தெய்வமாக திகழும். அந்த மாதத்தில் பணவரவை அதிகரிப்பதற்காக சில தெய்வங்களின் மந்திரங்களை நாம் கூற வேண்டும். அந்த வகையில் வைகாசி மாதம் என்பது மே மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று பிறந்திருக்கிறது. மிகவும் சிறப்பு வாய்ந்த வைகாசி மாதம் குபேரருக்கு உகந்த வியாழக்கிழமை பிறந்திருப்பதால் இந்த மாதத்தில் பண வரவை அதிகரிப்பதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி தான் இந்த மந்திரம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம். பண வசிய மந்திரம்வைகாசி மாதம் என்பது மிகவும் சிறப்பு மிகுந்த மாதமாக திகழ்கிறது. இந்த மாதத்தின் முதல் நாளை நாம் விஷ்ணுபதி புண்ணிய காலம் என்று கூறுவதும் உண்டு. மேலும் இந்த மாதத்தில் தான் வைகாசி விசாகம் வரும். இதோடு மட்டுமல்லாமல் அக்னி நட்சத்திர தோஷம் பூர்த்தி அடைவதும் வைகாசி மாதத்தில் தான். தோஷம் நிவர்த்தி அடைய கூடிய வைகாசி மாதத்தில் நமக்கு இருக்கக்கூடிய பண தோஷத்தை நீக்கி பணவரவை அதிகரிப்பதற்கு கூற வேண்டிய மந்திரத்தை பற்றி பார்ப்போம். – Advertisement -இந்த மந்திரத்தை வைகாசி மாதத்தின் முதல் நாளில் இருந்து அந்த மாதம் முடியும் வரை தினமும் கூற வேண்டும். ஐந்து நிமிடம் இதற்காக ஒதுக்கினால் போதும். பெண்களுக்கு ஏற்படக்கூடிய தடைகள் எதுவும் இதற்கு கிடையாது என்பதால் பெண்களும் தொடர்ச்சியாக இந்த மாதம் முழுவதும் இந்த மந்திரத்தை கூறலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் கூறலாம். காலை 4 மணியிலிருந்து இரவு 11 மணி வரை இருக்கக்கூடிய எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இந்த மந்திரத்தை நாம் கூறலாம். வீட்டு பூஜை அறையில் அமர்ந்து கொண்டு தான் கூற வேண்டும் என்று இல்லை. எந்த இடத்தில் இருந்து கொண்டு வேணாலும் கூறலாம். அசைவம் சாப்பிட்டு இருந்தாலும் இந்த மந்திரத்தை கூறலாம். ஒரே ஒரு நிபந்தனை முழு மனதோடு ஒரு இடத்தில் அமர்ந்து கூற வேண்டும்.மந்திரம்“ஸ்ரீம் குபேர வசி வசி வசி” – Advertisement – இந்த எளிமையான ஒரு வரி மந்திரத்தை தினமும் 5 நிமிடம் முழு மனதோடு குபேரரை நினைத்து நாம் கூறும் பொழுது குபேர பகவானின் அருளை நம்மால் பெற முடியும். குபேர பகவானின் அருளை நாம் பெற்றுவிட்டோம் என்றால் கண்டிப்பான முறையில் மகாலட்சுமி தாயாரின் அருளையும் நம்மால் பெற முடியும். இதன் மூலம் செல்வ செழிப்பு அதிகரிக்கும். பணவரவு உண்டாகும். எவ்வளவு பெரிய கஷ்டமான சூழ்நிலையில் இருந்தாலும் அந்த கஷ்டம் நீங்குவதற்குரிய வருமானம் வந்து சேரும். பணவரவில் இருக்கக்கூடிய தடைகள் அனைத்தும் விலகும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.இதையும் படிக்கலாமே:கர்ம வினைகள் நீங்க கூற வேண்டிய மந்திரம்குபேரரின் அருளை பெற்று பண வரவை அதிகரிப்பதற்கு உதவக்கூடிய இந்த எளிமையான மந்திரத்தை தினமும் 5 நிமிடம் கூறி வழிபாடு செய்வதன் மூலம் பணவரவிற்கு எந்தவித பஞ்சமும் இருக்காது என்ற தகவலை கூறி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

எங்கள் சமூக வலைதளப் பக்கங்கள்

YouTube | Facebook | Telegram  | Instagram

0
0
Your Cart
Empty CartYour cart is emptyReturn to Shop
Secure Checkout
Fast Shipping
Easy Returns
I am Online
I am Online