
– Advertisement –
தொடர்ந்து தினம் தோறும் எவரொருவர் பைரவரை மனதார நினைத்து வழிபாடு செய்கிறார்களோ, அவர்களுடைய மனதில் பயம் என்பது ஒரு துளி கூட இருக்காது. எப்படியேனும் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொள்ளலாம் என்ற துணிச்சல் இருக்கும். அதற்கான அனுகிரகத்தை நிச்சயம் பைரவப்பெருமான் வழங்கி விடுவார்.
பைரவர் வழிபாடு செய்வதற்கு அஷ்டமி திதி மிக மிக உகந்த திதி. அதிலும் வளர்பிறை அஷ்டமி திதியில், பைரவரை வழிபாடு செய்தால், வாழ்வில் செல்வ வளம் உயரும். வாழ்க்கையில் மென்மேலும் முன்னேற்றம் இருக்கும் என்பது நம்பிக்கை. நாளைய தினம் புதன்கிழமை, பிப்ரவரி 5ஆம் தேதி அஷ்டமி திதியானது வரவிருக்கிறது. இந்த நாளில் பைரவரை எந்த முறைப்படி வழிபாடு செய்யலாம். எந்த மந்திரத்தை சொல்லி வழிபாடு செய்தால் மன பயம் நீங்கும் என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.
– Advertisement –
வளர்பிறை அஷ்டமி திதி வழிபாடு மற்றும் மந்திரம்
நாளைய தினம் அதிகாலை வேலையிலேயே எழுந்து சுத்தபத்தமாக குளித்து விடுங்கள். பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு பைரவரை மனதார நினைத்து “ஓம் பம் பைரவாய நமஹ ! ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ ! ஓம் ஸ்வர்ண ஆகர்சன பைரவாய நமஹ! ” என்ற மந்திரத்தை 27 முறை சொல்லுங்கள். பைரவா என்னுடைய வாழ்க்கைக்கு காவல் தெய்வமாக நீயே நிற்க வேண்டும் என்று பைரவரிடம் சொல்லிவிடுங்கள்.
பிறகு உங்களுடைய அன்றாட வேலையை துவங்குங்கள். பைரவர் வழிபாடு என்றாலே மாலை நேரம் செய்வது தான் சிறப்பு. நாளை மாலை 6 மணிக்கு மேல் வீட்டு பக்கத்தில் இருக்கும் சிவன் கோவிலுக்கு செல்ல வேண்டும்.
– Advertisement –
அந்தக் கோவிலில் இருக்கும் பைரவர் சன்னிதானத்தில் இரண்டு மண் அகல் விளக்குகளில், நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றி வைத்துவிட்டு, உங்களுடைய வேண்டுதலை பைரவரிடம் சொல்லுங்கள். உங்கள் வீட்டு பக்கத்தில் ஸ்வர்ணாகர்ஷண பைரவர் இருந்தால் நாளைய தினம் ஸ்வர்ணாகர்ஷண பைரவருக்கு விளக்கு போட்டு வேண்டுதல் வைப்பது மிகவும் நல்லது. நாளைய தினம் பைரவருக்கு சிவப்பு நிற பூக்களை வாங்கிக் கொடுப்பது மிகவும் சிறப்பான பலனை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
பைரவர் என்று சொன்னாலே நம் நினைவிற்கு வருவது நாய் தான். வீதியில் சுற்றி திரியும் நாய்களுக்கு உங்களால் முடிந்த உணவுப் பொருட்களை வாங்கி தானமாக கொடுக்கவும். அஷ்டமி திதி அன்று மட்டும் நாய்களை மதித்து உணவு போட்டு, மற்ற நாட்களில் அந்த நாய்களை அடித்து விரட்டுவது ரொம்ப ரொம்ப தவறு. நாய்கள் உங்களை எதுவும் செய்யாத வரை, அந்த நாய்களை நீங்கள் துன்புறுத்தவே கூடாது ஜாக்கிரதை.
இதையும் படிக்கலாமே: சகல தெய்வங்களின் அருளை பெற
ஏவல் பில்லி சூனியம் எதிரி தொல்லை மனபயம் கண் திருஷ்டி இதிலிருந்து எல்லாம் விடுபடுவதற்கு மேலே சொல்லப்பட்டிருக்கும் இந்த மந்திரம் ஒரு வரம். 27 முறை சொல்ல முடியவில்லை என்றாலும், 8 முறையாவது நாளை தினம் இந்த மந்திரத்தை சொல்லுங்கள். பூஜை செய்ய முடியாது. கோவிலுக்கு செல்ல முடியாது எதுவாக இருந்தாலும் சரி, சுத்தபத்தமாக குளித்துவிட்டு உடல் சுத்தத்தோடு, மனசுத்தோடு பைரவரை மனதில் நிறுத்தி இந்த மந்திரத்தை சொன்னாலும் உங்களுக்கான பலன் கிடைக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.
– Advertisement –

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam