கிரிவலம் பலன்கள் |  திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் |  கிரிவலம் வரலாறு

கிரிவலம் பலன்கள் | திருவண்ணாமலை கிரிவலம் பலன்கள் | கிரிவலம் வரலாறு

Qries


பக்தியோடு பக்தர்களால் சுற்றிக் கும்பிடப்படும் நிகழ்வு மலைவலம் அல்லது கிரிவலம் எனப்படும். கிரி என்றால் மலை ; வலம் என்றால் சுற்றுதல் என்ற பொருள். அதனால் மலையை சுற்றி வருவதை கிரிவலம் என்ற பெயர். புராண காலம் முதல் இன்று வரை கிரிவல யாத்திரை திருவண்ணாமலைக்கு சிறப்பை சேர்க்கிறது. “நினைத்தாலே முக்தி தரும்” தலம் திருவண்ணாமலை. பஞ்சபூத தலங்களுக்குள் இது நெருப்புக்குரிய தலம். இங்கு மலையே இறைவனின் சொரூபமாக உள்ளது. திருவண்ணாமலை தலத்தைச் சுற்றி 1008 லிங்கங்கள் புதைந்து இருப்பதாகக் கூறப்படுகிறது. திருவண்ணாமலை ஈசனை மனதில் தினமும் நினைத்தால் நிச்சயம் முக்தி கிடைக்கும் என்று மார்க்கண்டேய முனிவரிடம் நந்தி பகவான் அருளியுள்ளார். திருவண்ணாமலை தலத்தில் தான் முதன் முதலில் லிங்க வழிபாடு தொடங்கியது. மகா சிவராத்திரி தொடங்கியது இந்த தலத்தில் தான் என்று புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. மலையில் உள்ள குகைகளில் சித்தர்கள், யோகிகள் தவம் செய்தனர். பின் குகைகளிலேயே இறைவனுடன் கலந்து ஜீவசமாதி நிலை அடைந்தனர். இதனால் அம்மலையில் சக்தி அதிர்வலைகள் அதிகமாகி மலையைச் சுற்றி வருவதால் இறை அருளும் மகான்களின் ஆசியும் பக்தர்கள் பெறுகின்றனர் என்பது பக்தர்களின் நம்பிக்கை. மலையின் அமைப்பு அருணாச்சல மலையானது 2668 அடி உயரத்துடனும் 14 கிலோமீட்டர் சுற்றளவுடன் காட்சியளிக்கிறது. மலையைச் சுற்றிலும் எண்கோண வடிவில் எட்டு சிவலிங்கங்கள் அமைந்துள்ளன. அவைகள் இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், மற்றும் ஈசான்ய லிங்கம் என்பனவாகும். இத்திருக்கோயிலின் கிழக்குக் கோபுரம் 217 அடி உயரம் – தமிழகத்திலேயே உயர்ந்து விளங்குகிறது. தெற்கு கோபுரம் – திருமஞ்சன கோபுரம், மேலக்கோபுரம் – பேய்க்கோபுரம், வடக்குக் கோபுரம் – அம்மணியம்மாள் கோபுரம் என்றழைக்கப்படுகிறது. இத்தகைய பெருமைகளைக் கொண்ட , ஆதிப்பரம்பொருளாக விளங்கும் அண்ணாமலையின் அடிவாரத்தைச் சுற்றி கால்நடையாக வலம் வரும்போது சுற்றியுள்ள மூலிகைச் சக்தி மிக்க செடிகொடிகளின் காற்றைச் சுவாசிப்பதால் உடல் நலமடைவதோடு மலையின் சக்திமிகு அதிர்வுகள் வாழ்வை நல்விதமாக அமைத்துக்கொள்ள உதவுகின்றன என்பது பக்தர்களின் நம்பிக்கை. அண்ணாமலை கிரிவல மந்திரங்கள்!***************************************** திருவண்ணாமலை கிரிவலத்தின் போது சொல்ல பட அபூர்வ மந்திரங்களையும் அதனால் கிடைக்கும் அபூர்வ பலன்களையும் இதில் காணலாம். இந்த பதிவு சில வருடங்களுக்கு முன் அகத்தியர் விஜயம் நாளிதழில் தொடராக வந்த பதிவை முழுவதுமாக தொகுத்து பதிவிடுகிறேன். அவசியம் படித்து சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். உலகில் பிறந்த 700 கோடி மனிதர்களில் மிகவும் அதிகமான ஆசிகள் பெற்றவர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்து வரும் 7 கோடி பேர் மட்டுமே! ஸ்ரீலங்காவில் வாழ்ந்து வருபவர்கள் கூட அவ்வளவாக ஆசைகளைப் பெறவில்லை; ஆமாம்! நினைத்த உடனே அண்ணாமலைக்கு பயணிக்கும் சுதந்திரம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்களுக்கு மட்டுமே இருக்கின்றது; அப்போ கேரளா, கர்னாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வாழ்ந்து வருபவர்களுக்கு இந்த ஆசைகள் கிடையாதா? என்று நீங்கள் கேட்கலாம்;அவர்களது மொழியில் அண்ணாமலை கிரிவலம் பற்றிய செய்திகள் மிகவும் குறைவு; கடந்த 100 ஆண்டுகளில் ஏராளமான திசை திருப்பல்கள் அவர்களிடையே ஆன்மீகத்தினுள் நிகழ்ந்துள்ளது; ஷீர்டி சாய்பாபா 1008 முறைக்கும் மேல் கிரிவலம் வந்திருக்கின்றார் என்ற செய்தியே நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? விசிறிச்சாமியார் என்ற யோகிராம்சுரத்குமார் சுவாமிகள் 10,000 தடவைக்கும் மேல் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பது முழு உண்மை; ஷேசாத்ரி சுவாமிகள் 1,00,000 தடவைகள் அண்ணாமலை கிரிவலம் வந்திருக்கின்றார் என்பதும் அண்ணாமலை சத்தியம்; இவைகளெல்லாம் வேண்டுமென்றே மறைக்கப்பட்ட ஆன்மீக ரகசியங்கள்; இம்மகான்களின் உபதேசங்களை நாம் ஒவ்வொருவரும் பின்பற்றுவோம்; அதே சமயம்,இம்மகான்கள் ஏன் அண்ணாமலையில் ஆயுள் முழுவதும் வாழ்ந்தார்கள்? அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை சராசரி மனிதர்களாகிய நாம் ஒவ்வொருவரும் உணர வேண்டும் என்பதற்காகவே . . . !!! சென்ற நூற்றாண்டு வரை தமிழ்நாட்டில் வாழ்ந்த அனைவருக்கும் இப்போது இருக்கும் இணைய வசதி இல்லை; ஆனால்,ஓலைச்சுவடிகள், தாத்தா மற்றும் தாத்தாவின் அப்பாவின் உபதேசம் போன்றவைகளால் அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளை உணர்ந்து கிரிவலம் வந்துள்ளார்கள்; மனிதனாக பிறந்த நாம் புண்ணிய ஆத்மாவாக இருந்தால் பணம் சம்பாதிக்கவும்,சொத்துக்கள் சேர்த்து,சொகுசாக வாழவும்,காம சுகத்தை அனுபவித்து திளைக்கவும் தான் வாழ்ந்து வருகின்றோம்;பாவவாக இருந்தால்,கடனுடன் காலம் பூராவும் போராடவும்,வாழ்க்கைத் துணையுடன் சண்டை போடவும், தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக் கொண்டு வாழ்ந்து இருக்கிறோம்; நம்மை இதற்காக ஈசன் இந்த பூமிக்கு அனுப்பவில்லை; அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி முடிவதற்குள் 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்லவே பிறவியைப் பரம்பொருள் நமக்குக் கொடுத்துள்ளார்; ஆன்மீக பூமியான பாரத நாட்டில் 1,00,00,000 ஆலயங்கள் உள்ளன; உலகம் முழுவதும் இருந்த ஆலயங்களின் மொத்த எண்ணிக்கை 1000 கோடி ஆகும்; அவைகளில் பெரும்பாலானவை மறைக்கப்பட்டுள்ளன; அகஸ்தீஸ்வரம் தான் இன்றைய ஆஸ்திரேலியா; பிள்ளைப்பண் தான் பிலிப்பைன்ஸ்; முற்காலத்தின் அயனீஸ்வரம் தான் இன்றைய அயர்லாந்து; ஒவ்வொரு முறையும் அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும் ஒரு மந்திரத்தை ஜபிக்க வேண்டும்; அப்படி 14 கி மீ தூரம் நடந்தே ஜபிக்கும் போது நமது ஜபத்தின் எண்ணிக்கை 1,00,000 ஐக் கடந்துவிடும்; இதனால்,அந்த மந்திரத்திற்கு உயிர் வந்துவிடும்; உயிர் உண்டான மந்திரமானது, நமக்கு வழிகாட்டும்; நம்மை பாதுகாக்கும்; இங்கே ஆன்மீகத்தில் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தேவையான மந்திரத்தை கொடுத்திருக்கின்றோம்; முறைப்படி தீட்சை பெற்றவர்கள், உண்மையான ஆன்மீக குருவை அடைந்தவர்கள், முற்பிறவியிலேயே குரு ஸ்தானத்திற்கு வந்துவிட்டவர்களுக்கு இங்கே தரப்பட்டிருக்கும் மந்திரங்கள் சாதாரணமானதாகத் தோன்றும்; பவுர்ணமி அன்றுதான் அண்ணாமலை கிரிவலம் செல்வது வழக்கமாக இருக்கின்றது; அதை விடவும் மிகவும் உயர்வான கிரிவலம் தேய்பிறை சிவராத்திரி அன்று கிரிவலம் தான்; தவிர,உங்களுக்கு எப்போதெல்லாம் விடுமுறை கிடைக்கின்றதோ அப்போதெல்லாம் கிரிவலம் செல்லலாம்; அஷ்டமி,கரிநாள் என்று எதையும் ஒதுக்க வேண்டாம்; எல்லா நாட்களிலும் கிரிவலம் செல்லலாம்; காலை,மதிய நேரத்தில், மாலையில், இரவில், நள்ளிரவில், பின்னிரவில்,அதிகாலையில் என்று எப்போதும் கிரிவலம் செல்லலாம்;மழை பெய்யும் போதும், அக்னிநட்சத்திர நாட்களிலும், கடுங்குளிர் காலத்திலும் கிரிவலம் செல்லலாம்; சிவனை அப்பாவாக, நண்பனாக, மகனாக நினைக்கும் ஒவ்வொருவருக்கும் அண்ணாமலை கிரிவலம் ஒரு கடமை; 100 முறைக்கு மேல் அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்தவர்களுக்கு அண்ணாமலையார் என்ற அருணாச்சலேஸ்வரர் இங்கேதான் மனித ரூபத்தில் வாழ்ந்து வருகிறார் என்பதை உணருவார்கள்; ஒவ்வொரு முறையும் கிரிவலம் ஆரம்பிக்கும் போதும்,கழுத்தில் 108 ஐந்து முக ருத்ராட்சங்கள் உடைய மாலையை அணிவது நல்லது; *முதல் முறை கிரிவலம் செல்லும் போது:******************************************* * *ஓம் அகத்தீசாய நமஹ**ஓம் அருணாச்சலாய நமஹ*($ நம் அனைவருக்கும் தலைமை குரு அகத்தியர்;இவர் தான் பூமி முழுவதும் தமிழ் மொழியைப் பரப்பினார்; எனவே,குருவின் அருள் நமக்குத் தேவை; $3,00,00,000 தடவை ஓம்நமச்சிவாய என்று ஜபித்தால் என்ன புண்ணியமோ அது ஒரே ஒரு முறை ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஓம் அண்ணாமலையே நமஹ என்றோ ஒரே ஒரு முறை ஜபித்தாலே கிட்டிவிடும்) *இரண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:**************************** ******************** *ஓம் ஆதிகவசம் சிவகவசம்**சிவன் பிறந்த பரம கவசம்**ஆதிசிவ கவசாய கட்டு ஸ்வாக* (இது ஒரு கட்டு மந்திரம் ஆகும்;ஏராளமான கட்டு மந்திரங்கள் இருந்தாலும், தலைமை கட்டு மந்திரம் இது; இந்த மூன்று வரிகளும் சேர்ந்தது தான் சிவ கட்டு மந்திரம்; ************************** *சிவயநம- அம்- உம்- சிம்- க்லீம்-ஸ்ரீம்- ஓம்- ரம்- மம்-யம்- ஓம்* ( மந்திரங்களுக்கு உரிய சாபங்கள் உண்டு; அவர்கள் மந்திரங்களை தவறாக பயன்படுத்தாமல் இருக்க அகத்திய மகரிஷி அனைத்து மந்திரங்களுக்கும் சாபம் கொடுத்துள்ளார்; இம்மந்திரத்தை ஒரு லட்சம் தடவை ஜபித்துவிட்டால்,சாப நிவர்த்தி கிடைத்துவிடும்; அதன் பிறகு எந்த மந்திரம் ஜபித்தாலும் அது பலன் தர ஆரம்பிக்கும்) *நான்காம் முறை கிரிவலம் செல்லும் போது;********************************** **************** *நமச்சிவாய* ( $ நமச்சிவாய மந்திரத்தில் இருந்துதான் ஓம் என்ற மந்திரமே உண்டானது என்பது அகத்திய மகரிஷி நமக்கு செய்திருக்கும் உபதேசம் ஆகும்) *ஐந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:********** ************************************* *அருணாச்சல சிவ*($அண்ணாமலையாரின் சிவமந்திரங்களில் இதுவும் ஒன்று; இதை ஜபிக்க அதுவும் கிரிவலப் பாதை முழுவதும் ஜபிக்க நமது முன்னோர்களின் ஆசிகள் மட்டுமே முடியும்) *ஆறாம் முறை கிரிவலம் செல்லும் போது:******************************* ***************** *ஓம் ஆம் ஹெளம் செளம்* ($ அறிந்தும் அறியாமலும் நாம் பஞ்சமாபாதகங்கள் செய்திருக்கின்றோம்; செய்து வருகின்றோம்; இனி ஒரு போதும் செய்யாமல் இருக்க இந்த சிவமஹா மந்திரத்தை ஜபிக்க வேண்டியது நமது கடமை ஆகும்) ஏழாம் முறை கிரிவலம் செல்லும் போது:********************************************** *சிவையை நம *($ அர்த்தநாரீஸ்வர சூட்சும மந்திரம் இது) *எட்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:************************************* *********** *ஓம் ரீங் சிவசிவ*($ சைவ காயத்ரி மந்திரம் இது;இதைப் பற்றி 10,000 பக்கங்களுக்கு ஒரு புத்தகமே எழுதலாம்) *ஒன்பதாம் முறை கிரிவலம் செல்லும் போது:************ ************************************* *சிவாய நம*($ நமது பிறவிகளின் எண்ணிக்கையை குறைக்கும் மஹா சிவ மந்திரம் இது) *பத்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:********************************************* ***** *ஓம் நமசிவாய சிவாய நம ஓம்*($ ஹரே ராம,ஹரே க்ருஷ்ண க்ருஷ்ண க்ருஷ்ண ஹரே ஹரே என்ற வைஷ்ணவ மந்திரத்துக்கு இணையான சிவ மந்திரம்;இதை ஜபிக்கும் போது அதுவும் கிரிவலப் பாதையில் ஜபித்து வரும் போது உங்கள் கண்களுக்கு சில தெய்வீக சக்திகளை தரிசிக்கும்) * ஆற்றலை நீங்கள் பெறுவீர்கள். பதினோராம் முறை கிரிவலம் செல்லும் போது;******************************************* ******* *சிவசிவ*($ இந்த மந்திர உச்சரிப்பின் மகத்துவத்தை நாம் உணரவே நமக்கு 12 மனிதப் பிறவிகள் எடுக்க வேண்டும்; அவ்வவ்வ்வளவு மகிமைத்துவம் நிரம்பியது இது;) *பனிரெண்டாம் முறை கிரிவலம் செல்லும் போது:************************************* ***************** *சிவாய சிவாய*($ நமது முற்பிறவி கர்மச்சுமையை இப்பிறவியில் எரிக்கக்கூடிய மந்திரம் இது) *பதிமூன்றாம் முறை கிரிவலம் செல்லும் போது;************ ************************************* *சிவாய நம ஓம்*($ சிவாலயங்களில் மட்டுமே ஜபிக்க அதுவும் ஈசன் மனித உருவில் இருக்க வேண்டிய மந்திரம் .) ************************* *சிவயசிவ*($ இம்மந்திரத்தின் மகிமைகளை விவரிக்க ஒரு வரி;ஒரு பாரா போதாது) *பதினைந்தாம் முறை கிரிவலம் செல்லும் போது:**** ***************************************************** அருணாச்சலாய சிவ நமஹ* 16 ஆம் முறையில் இருந்து 1008 ஆம் முறை வரை கிரிவலம் செல்லும் போது அருணாச்சலேஸ்வரரே உங்களுக்கு மந்திர உபதேசம் செய்வார்; மறுபிறவி இல்லாத முக்தியை அடைய இதுவே வழி; *ஓம் அகத்தீசாய நமஹ**ஓம் அருணாச்சலாய*

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top