
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில், சிவபுரி
Sivapuri Uchinathar Temple History in Tamil
சிவஸ்தலம்
சிவபுரி உச்சிநாதர் திருக்கோவில்
மூலவர்
உச்சிநாதர் / மத்யானேஸ்வரர்
அம்மன்
கனகாம்பிகை
தீர்த்தம்
கிருபாசமுத்திரம்
தல விருட்சம்
நெல்லி
புராண பெயர்
திருநெல்வாயில்
ஊர்
சிவபுரி
மாவட்டம்
கடலூர்
உச்சிநாதர் கோவில் வரலாறு
நெல் வயல்கள் அதிகமாக உள்ள இடமாதலால் ‘நெல்வாயில்‘ என்று பெயர் பெற்றது.
திருஞானசம்பந்தருக்கு 12 வயதில் திருமணம் நிச்சயமானது. மணமகள், உறவினர் மற்றும் சிவனடியார்கள் 63 பேருடன் சிதம்பரத்திலிருந்து ஆச்சாள்புரம் சிவன் கோவிலுக்கு அவர் சென்றார். செல்லும் வழியில், மதிய நேரம் உச்சிப்பொழுதாகி விட்டதால் பசியின் காரணமாக இவர்கள் அனைவரும் சிவபுரி திருத்தலத்தில் தங்கினர். சம்பந்தர் சிதம்பரத்தில் தங்கியிருந்த காலத்தில் தினமும் இத்தலம் வந்து தரிசனம் செய்துள்ளார்.
திருஞானசம்பந்தர் ஒரு தேவாரப்பதிகம் பாடியுள்ளார்:
மறையினர் மழுவாளினார் மல்கு பிறையினார் பிறையோடிலங்கியநிறையினார் நெல்வயிலார் தொழும் இறைவானரெம் துச்சியரே.
சம்பந்தரும், அவருடன் வந்தவர்களும் பசியுடன் இருப்பதை அறிந்த இத்தல இறைவன், கோவில் பணியாளர் வடிவில் வந்து அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார். இதனால் இத்தல இறைவன் உச்சிநாதர் என்றும் மத்யானேஸ்வரர் என்றும் அழைக்கப்படுகிறார்.
உச்சிநாதர் கோவில் அமைப்பு
மூலவர் சிறிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். லிங்கத் திருமேனியின் பின்புறம் அம்மையப்பர் திருவுருவங்கள் [சிவன் பார்வதி திருவுருவங்கள் திருமண கோலத்தில்] உள்ளன. அம்பிகை ‘கனகாம்பிகை’ என்னும் திருநாமத்துடன் தரிசனம் தருகின்றாள். இப்பகுதி மக்கள் இக்கோவிலை “கனகாம்பாள் கோவில்’ என்று அழைக்கின்றனர். அழகிய சிறிய மூர்த்தங்கள். கிழக்கு பார்த்த ஐந்து நிலை ராஜகோபுரம், ஒரு பிரகாரம், சிவபெருமான் கிழக்கு பார்த்தும், அம்மன் தெற்கு நோக்கியும் அருளுகின்றனர்.
சிறப்புகள்
சிவனின் தேவாரப்பாடல் பெற்ற 276 சிவாலயங்களில் இது 3 வது தேவாரத்தலம் ஆகும்.
அகத்திய முனிவர் வழிபட்ட தலம்.
அருணகிரிநாதர் இத்தலத்து முருகப் பெருமானைத் தமது திருப்புகழில் பாடியுள்ளார்.
பிரார்த்தனை: இக்கோவிலில், குழந்தைகளுக்கு முதல் சோறு ஊட்டினால், காலம் முழுமைக்கும் அந்தக் குழந்தையின் வாழ்வில் உணவுப்பிரச்னை வராது என்ற நம்பிக்கை இருக்கிறது.
நேர்த்திக்கடன்: சிவனுக்கும் அம்மனுக்கும் அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றுகின்றனர்.
Sivapuri Uchinathar Temple Festivals
திருவிழா: வைகாசி விசாகம், நவராத்திரி, கார்த்திகை சோமவாரம்.
Sivapuri Uchinathar Temple Timings
சிவபுரி உச்சிநாதர் கோவில் காலை 6 மணி முதல் 11 வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 7.30 வரையிலும் நடை திறந்திருக்கும்.
Sivapuri Uchinathar Pooja Timings
பூஜை கால அட்டவணை
பூஜை
நேரம்
பால் நைவேத்தியம்
காலை 06.30 மணிக்கு
கால சந்தி
காலை 09.30 மணிக்கு
உச்சிக்காலம்
காலை 11.30 மணிக்கு
சாயரட்சை
மாலை 05.30 மணிக்கு
அர்த்த ஜாமம்
இரவு 07.30 மணிக்கு
Sivapuri Uchinathar Temple Contact Number: 98426 24580 [முத்துக்குமார குருக்கள்]
கோவிலுக்கு எப்படி செல்வது?
சிவபுரி சிதம்பரத்திற்கு தென்கிழக்கே 5 கி. மீ. தொலைவில் உள்ளது. தற்காலத்தில் ‘சிவபுரி’ என்று அழைக்கப்படுகிறது. அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு தெற்கில் 3 கி.மீ. தொலைவில் உள்ளது. சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ. தொலைவில் உள்ளது. ஆட்டோ, காரில் செல்லலாம்.
Sivapuri Uchinathar Temple Address
அருள்மிகு உச்சிநாதர் திருக்கோவில், சிவபுரி அஞ்சல், அண்ணாமலைநகர் வழி, சிதம்பரம் வட்டம், கடலூர் மாவட்டம். 608002.

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam