இன்றைய ராசிபலன் – 14 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 14 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று பொறுமையோடு நடந்து கொள்வீர்கள். எந்த பிரச்சினையாக இருந்தாலும் அதை நின்று நிதானமாக யோசித்து பிரச்சனைக்கான முடிவை எடுப்பீர்கள். சொந்த பந்தங்களோடு ஒற்றுமை நிலவும். நிதி நிலைமை சீராகும். வேலை தொழில் எல்லாம் சுமூகமாக செல்லும். நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்வது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். தொழிலை விரிவுபடுத்தலாம். வேலையில் மேலதிகாரிகளோடு கொஞ்சம் அனுசரணையாக செல்ல வேண்டும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ள வேண்டும். மற்றபடி குடும்பம் குழந்தைகள் என்று இன்றைய நாள் நேரத்தை சந்தோஷமாக செலவு செய்வீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோக வாழ்க்கை கிடைக்கும். நீங்கள் எங்கு சென்றாலும், உங்களுக்கு மதிப்பு மரியாதையும் கிடைக்கும். நல்லது, சந்தோஷம் இரட்டிப்பாகும். ஆனால் நீங்கள் அடுத்தவர்களிடம் பழகும் போது ஜாக்கிரதையாக பழக வேண்டும். குடும்ப விஷயங்களை அனாவசியமாக அடுத்தவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். முன்பின் தெரியாத நபர்களை முழுசாக நம்பாதீங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். இன்றைய நாள் வீட்டு வேலையை சமாளிப்பதில் பெண்களுக்கு சிரமம் இருக்கும். பிள்ளைகளை கவனமாக பார்த்துக் கொள்ளுங்கள். நீண்ட தூர பயணத்தின் மூலம் அலைச்சல் ஏற்படும். நிதிநிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மனமகிழ்ச்சி அடைவீர்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைக்கும், மனது நிறைவாக இருக்கும். சுப செலவுகள் ஏற்படும். வேலையில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். தொழிலில் இருந்து வந்த முன்னேற்ற தடை விலகும். தொழிலை விரிவுபடுத்த வங்கிக் கடன் கிடைக்கும். நண்பர்களின் மூலம் நல்ல ஆலோசனையை பெற்று நல்வழியில் நடப்பீர்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தனம் தானியம் நிறைந்த நாளாக இருக்கும். வருமானம் அதிகரிக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பரப் பொருள் அத்தியாவசிய பொருளை வாங்குவீர்கள். மனைவி பிடித்தமான பொருளை வாங்கி பரிசளிப்பீர்கள். சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவு ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் பொறுமையாக இருக்க வேண்டும். இருக்கும் வேலையில் தக்க வைத்துக் கொள்வதே புத்திசாலித்தனம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இரட்டிப்பு வருமானம் இருக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமையை சீர்படுத்திக் கொள்வீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான சேமிப்பை உயர்த்துவீர்கள். சொத்து சுகம் வாங்கக்கூடிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். நீண்ட நாள் இழுபறியாக இருந்து வந்த கோர்ட் கேஸ் வழக்கு உங்களுக்கு சாதகமாக அமையும். நல்லதே நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வேலை பளு கொஞ்சம் அதிகமாக இருக்கும். வெற்றியை தேடி நீங்கள் ரொம்ப தூரம் ஓட வேண்டிய சூழ்நிலை இருக்கும். உடல் அசதி ஏற்படும். சின்ன சின்ன பிரச்சனைகள் கூட பெரிய பாரத்தை கொடுப்பது போல உணர்வீர்கள். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளி வைத்துக் கொள்ளவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதையும் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். பெரிய மனிதர்களின் சந்திப்பு உங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்துக் கொடுக்கும். எதிர்கால சிந்தனை மேலோகும். கணவன் மனைவிக்குள் இருந்த அன்பு மேலும் அதிகரிக்கும் வீட்டில் நிம்மதி பிறக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற சிந்தனைகள் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும். லேசான கவலை வேலையில் கவனக்குறைவை ஏற்படுத்தும். உங்களை பின்னடைய செய்யும். சின்ன சின்ன டென்ஷன், உடல் சோர்வை உண்டு பண்ணும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். மனதை அமைதியாக வைத்துக் கொள்ள பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று பத்து நிமிடம் அமர்ந்து வரவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். சின்ன சின்ன வியாபாரிகளுக்கு கூட இந்த எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்க காத்துக் கொண்டிருக்கிறது. கை தொழில் செய்பவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். குடும்பத்தில் பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும்.
மீனம்
மீனம் ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். இன்றைய நாள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்க விரும்புவீர்கள். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி ஏற்படும். சின்ன சின்ன செலவுகள் இருக்கும். சுப செலவுகள் தான் கவலைப்படாதீங்க. வண்டி வாகனங்களில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். மேலதிகாரிகளை கொஞ்சம் அனுசரித்து சென்றால், வேலையில் நிம்மதி அடையலாம்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top