இன்றைய ராசிபலன் – 16 செப்டம்பர் 2024

இன்றைய ராசிபலன் – 16 செப்டம்பர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். நிறைய எதிர்பாராத பண வரவு சேமிப்பை உயர்த்தும். உறவுகளுக்குள் இருந்து வந்த மன சஞ்சலம் நீங்கும். கடன் சுமை குறையும். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை பெறுவீர்கள். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்பவும் சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலைகளும் அரக்க பறக்க நடக்கும். நாலு பேர் வேலையை மொத்தமாக நீங்களே செய்து முடித்து விடுவீர்கள். மேலதிகாரிகளிடம் பாராட்டும் கிடைக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மன நிறைவு இருக்கும். கணவரின் ஆதரவு கிடைக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் குறையக்கூடிய நாளாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகளிலிருந்து முழுமையாக விடுவீர்கள். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். பிள்ளைகளுடைய எதிர்காலத்தைப் பற்றி நிறைய சிந்தித்துக் கொண்டே இருப்பீர்கள். அனாவசியமாக அடுத்தவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சோம்பேறித்தனத்தை ஒதுக்கி வைத்து விட்டு, வேலையை பார்க்க வேண்டும். நேரத்தை அனாவசியமாக வீணடிக்க கூடாது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். அடுத்தவர்களுடைய பேச்சை கேட்காதீர்கள். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். வாழ்க்கை துணையிடம் சண்டை போட வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சோர்வு நிறைந்த நாளாக இருக்கும். உடல் அசதி இருக்கும். வேலையை சரியான நேரத்தில் செய்து முடிக்க முடியாத சூழ்நிலை நிலவும். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். வயதானவர்கள், வீட்டில் இருப்பவர்களை அனுசரித்து செல்ல வேண்டும். உங்கள் குழந்தைகளிடமும் அல்லது மாமியார் மருமகள் இப்படி உறவுகளிடமும் சண்டை போட்டு வாக்குவாதம் செய்யக்கூடாது ஜாக்கிரதை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் சரியாக கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் கோர்ட் கேஸ் வழக்குகளை இன்று முயற்சி செய்து பாருங்கள். பிரச்சனைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் உண்டாகும். தடைப்பட்டு இருந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்க துவங்கும். வேலை தேடி காத்துக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். புது வேலை க்கு சேருவது, புது வேலையை தொடங்குவது போன்ற முயற்சிகளை தாராளமாக மேற்கொள்ளலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். வேலை செய்யும் இடத்திலும் உங்களுக்கு நல்ல முன்னுரிமை கொடுக்கப்படும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும் இந்த நாள் இனிய நாளாக அமையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்கள் இன்று உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மனதில் சந்தோஷத்திற்கு ஒரு துளி அளவும் குறைவு இருக்காது. நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்க கூடிய திறமையும் தைரியமும் தன்னம்பிக்கையும் உங்களிடத்தில் இருக்கும். நிறைய எதிரிகளோடு போட்டி போட்டு ஜெயிப்பீர்கள். குடும்ப பிரச்சனைகளில் மட்டும் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மனைவியிடம் சண்டை போட வேண்டாம்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கை நிறைந்த நாளாக இருக்கும். நிறைய பிரச்சனைகள் வந்தாலும், நிறைய எதிரிகளால் தொல்லை வந்தாலும் அதை எல்லாம் சமாளிக்க ஒரு வழியை கண்டுபிடித்து விடுவீர்கள். சமியோத புத்தி உங்களுக்கு இன்று சிறப்பாக செயல்படும். கலைஞர்களுக்கு இன்று முன்னேற்றம் அடையக்கூடிய நாளாக இருக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று தாமதத்தோடு உங்களுடைய வேலையை தொடங்குவீர்கள். எல்லா வேலையிலும் ஒரு அலட்சியம் இருக்கும். இதனாலேயே சின்ன சின்ன இழப்புகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. சின்ன விஷயத்தை கூட இன்று நீங்கள் அலட்சியமாக நினைக்க கூடாது. அலுவலகத்திற்கு ஐந்து நிமிடம் தானே லேட்டா போறோம், அப்படின்னு பேசக்கூடாது. ஐந்து நிமிடத்தையும் சரியாக கடைபிடிக்க வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று குழப்பங்களுக்கு தெளிவு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நல்லது கெட்டதை பிரித்து பார்க்கும் அளவுக்கு உங்களுக்கான பக்குவம் வெளிப்படும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். தொழிலில் சின்ன சின்ன இடர்பாடுகள் வரலாம் கவனம் தேவை.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பு நிறைந்த நாளாக இருக்கும். போன வாரம் நிலுவையில் வைத்த வேலையை எல்லாம் இன்று செய்து முடித்து விடுவீர்கள். மேனேஜரிடம் நல்ல பெயரும் வாங்குவீர்கள். நிதி நிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். இருந்தாலும் சமாளிக்கக்கூடிய தெம்பு உங்களிடத்தில் இருக்கும். ஆரோக்கியத்தில் வந்த முன்னேற்றம் உங்களை இன்று சுறுசுறுப்பாக வைக்கும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top