இன்றைய ராசிபலன் – 13 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 13 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கையில் எடுத்த காரியத்தை முடித்தே ஆக வேண்டும். அயராது உழைப்பீர்கள். உங்களுடைய கஷ்டம் வீண் போகாது. துவக்கத்தில் முயற்சிகள் தோல்வி அடைவது போல இருந்தாலும், இறுதியில் வெற்றி உங்களுக்கே நல்லது நடக்கக்கூடிய நாள் இன்று. வாழ்க்கையில் நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கக்கூடிய நாள்.
ரிஷபம்
ரிஷப ராசி காரர்களுக்கு இந்த நாள் நல்ல செயல்கள் நடக்கக் கூடிய நாளாக இருக்கும். உங்கள் கையால் அடுத்தவர்களுக்கு நல்லது செய்வீர்கள். கடவுள் உங்களுக்கான நல்லதை நடத்தி வைப்பான். கவலை படாதீங்க. நீண்ட நாள் பிரச்சனைகள் இன்ற சரியாகும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் தீரும். நிதி நிலைமை சீராகும். பண்டிகை நாட்களை இனிமையாக கொண்டாட தேவையான வருமானம் கைக்கு வந்து சேரும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். யாராவது ஒருவர் வந்து உங்களை கோபப்படுத்திக் கொண்டே இருப்பார்கள். அதனால் உங்களுடைய வேலையில், கவனத்தை முழுமையாக செலுத்த முடியாது. சின்ன சின்ன அலைச்சல்கள் இன்று இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் கொஞ்சம் வேலை சுமை அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்தவும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு வேலையிலும் அலட்சியம் இருக்கக் கூடாது. மனதை ஒருநிலைப்படுத்திக் கொள்ளுங்கள். உறவுகளோடு, அளவோடு பேசி பழகுங்கள். எது நல்லது எது கெட்டது, எந்த முடிவு சரி எந்த முடிவு தவறு, என்பதை உங்களால் இன்று எடுக்க முடியாது. ஆகவே இன்று அதிகமாக சிந்திக்காதிங்க. வாழ்க்கையை போன போக்கில் விட்டு விடுங்கள். இறை வழிபாடு மட்டும் செய்யுங்கள் போதும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வாழ்க்கையை புரிந்து கொள்ளக்கூடிய அனுபவங்களை பெறுவீர்கள். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். உறவுகளின் பிரிவு கொஞ்சம் வருத்தத்தை கொடுக்கும். சில பேருக்கு வெளிநாட்டில், வெளியூரில் வேலை கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. மற்றபடி நிதி நிலைமைக்கு பிரச்சனை இல்லை. தேவைக்கு ஏற்ப பணம் கையில் புழங்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் நிறைந்த நாளாக இருக்கும். வரக்கூடிய பிரச்சனைகளை எதிர்த்துப் போராடுவீர்கள். எதற்கும் பயப்பட மாட்டீர்கள். வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். வீட்டில் இருக்கும் பெண்களுக்கு உறவுகளால் பிரச்சனைகள் வரும். சமாளிக்க சின்ன போராட்டம் செய்துதான் ஆக வேண்டும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். எல்லா வேலையும் அது பாட்டுக்கு தானாக நடக்கும். நேரத்திற்கு சாப்பிடுவீங்க. நேரத்திற்கு தூங்குவீங்க. இந்த விடுமுறை நாளை சந்தோஷமாக கழிப்பீர்கள். இன்று மாலை குழந்தைகளுடன் குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு சென்று என்ஜாய் பண்ணுவீங்க. கொஞ்சம் சுப செலவு ஏற்படும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கும்‌. வேலையிலும் தொழிலிலும் பெருசாக டென்ஷன் இருக்காது. விடுமுறை நாள் என்பதால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் கொஞ்சம் கூடுதல் வேலை இருக்கும். சில பேருக்கு உடல் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பு உள்ளது. அதில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத பணம் கையை வந்து சேரும். உங்களுடைய கடன் பிரச்சனைக்கும் ஒரு முடிவு கட்டுவீர்கள். உறவுகளோடு இருந்து வந்த மனசங்கடம் விலகும். கணவன் மனைவிக்குள் ஒற்றுமை ஏற்படும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். வியாபாரம் வேலை எல்லாம் சுமூகமாக செல்லும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த தொகை, கையை வந்து சேரும். எதிரிகளும் நண்பர்களாக மாறுவார்கள். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். குடும்பத்தோடு கோவிலுக்கு செல்லக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். ஆன்மீக சுற்றுலா செல்ல பிளான் செய்யலாம். குடும்பத்தில் தடைப்பட்டு வந்த சுப காரிய பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வேலையில் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மறதி இருக்கும். சின்ன சின்ன வேலைகளை கூட சரியாக செய்ய முடியாது. இதனால் சின்ன டென்ஷனும் வரும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த வேண்டும். அடுத்தவர்களை உதாசீனப்படுத்தி பேசக்கூடாது. தலைகனம் இருக்கக் கூடாது. செலவை குறைக்க வேண்டும்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top