இன்றைய ராசிபலன் – 15 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 15 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். சின்ன சின்ன தொல்லைகள் கூடவே இருக்கும். ஒரு வேலையையும் நிம்மதியாக செய்ய முடியாது. அதற்காக இந்த நாளை ஒதுக்கி வைக்கவும் முடியாது. என்ன செய்வது. கொஞ்சம் அனுசரித்து தான் செல்ல வேண்டும். பொறுமை காக்க வேண்டும். முன்கோபத்தை குறைக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று காலை நேரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். வேலையில் டென்ஷன் இருக்கும். எப்படியோ பிரச்சனைகளை எல்லாம் கடந்து வெற்றியை அடைந்து விடுவீர்கள். இன்று மாலை சந்தோஷமாக நேரத்தை கழிப்பீர்கள். வீட்டில் இருப்பவர்களோடு சேர்ந்து வெளியிடங்களுக்கு ஷாப்பிங் செல்ல வாய்ப்புகள் இருக்கிறது. சுப செலவுகள் ஏற்படும். பண்டிகையை கொண்டாட எல்லா வேலைகளையும் துவங்குவீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். சில பேருக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும். வேலை தொழில் எல்லாம் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும். ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளுடைய போக்கை கொஞ்சம் கவனித்துக் கொள்ளுங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். வராத சம்பளம் வந்து சேரும். சில பேருக்கு தீபாவளி போனஸ் கூட வரும். என்ஜாய் பண்ணுவீங்க. வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். மேலதிகாரிகளோடு வாக்குவாதம் செய்ய வேண்டாம். வியாபாரத்தில் தெரியாத புதிய நபருக்கு கடன் கொடுக்காதீங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். நீண்ட நாள் பிரச்சனைகள் சரியாகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். விவசாயிகளுக்கு சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. ஜாக்கிரதியாக இருந்து கொள்ளுங்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வெளியில் அதிகமாக சாப்பிட வேண்டாம்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் நிறைந்த நாளாக இருக்கும். புதுசாக எல்லா வேலைகளையும் சுலபமாக கற்றுக் கொள்வீர்கள். திறமையை உயர்த்திக் கொள்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் சில பேருக்கு ப்ரோமோஷன், பதவி உயர்வும் கிடைக்கும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கும். தொழிலை விரிவுபடுத்த புதிய முதலீடுகள் கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று கையில் எடுத்த காரியத்தை முடித்தே ஆகவேண்டும் என்று ஒற்றைக்காலில் நிற்பீர்கள். அதற்காக நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடல் அசதியும் ஏற்படும். மனசோர்வும் ஏற்படும். இருந்தாலும் எதையும் கவனத்தில் கொள்ளாமல் உங்களுடைய மனசு இலக்கை நோக்கி மட்டும் தான் செல்லும். நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவிக்கு இருந்து வந்த மன கசப்பு சரியாகும். கைக்கு வர வேண்டிய பணம் வந்து சேரும். மனைவிக்கு பிடித்தமான பொருட்களை வாங்கி பரிசளிப்பீர்கள். இன்று சுகமான நாளாக இருக்கும். வேலை தொழில் எல்லாம் எப்போதும் போல மும்முரமாக செல்லும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். சுறுசுறுப்பாக உங்களுடைய வேலையை துவங்குவீர்கள். வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் குவியும். எதிர்பார்த்த சம்பள உயர்வு கிடைக்கும். குழந்தைகளுடைய படிப்பு விஷயத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். பெரியவர்களுடைய ஆரோக்கியத்திலும் கவனம் செலுத்தவும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று புதிய முதலீடு செய்ய வேண்டாம். பணம் சம்பந்தப்பட்ட பரிவர்த்தனையில் கவனமாக இருக்க வேண்டும். யாரையும் நம்பி கடன் கொடுக்காதீங்க. மற்றபடி குடும்பத்தில் சந்தோஷத்திற்கு குறைவிருக்காது. செய்யும் வேலைகள் நீங்கள் நினைத்ததை விட நல்லபடியாக செல்லும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று உற்சாகத்தோடு, சந்தோஷத்தோடு இருப்பீர்கள். நீங்கள் மட்டும் அல்ல, உங்களை சுற்றி இருப்பவர்களையும் இன்று சந்தோஷமாக வைத்துக் கொள்வீர்கள். கொஞ்சம் வீண் செலவு ஏற்படும். வேலையில் சின்ன சின்ன டென்ஷன் வந்து போகும். தொழிலில் பெருசாக லாபம் இல்லை என்றாலும், நஷ்டம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் இல்லை.
மீனம்
மீன் ராசிக்காரர்கள் இன்று உதவி செய்து உபத்திரவம் அடைவீர்கள். ஐயோ பாவம் என்று உதவி செய்ய போக, பிரச்சனை உங்கள் தலையிலேயே வந்து முடியும். உதவி செய்த புண்ணியம் உங்களை வந்து சேரும். கூடவே டென்ஷனும் வரும் பார்த்துக்கோங்க. இன்று அடுத்தவர்களுக்கு உதவி செய்வதற்கு முன் ஒன்றுக்கு பலமுறை சிந்திக்கவும். வேலையில் கவனம் தேவை. எந்த விஷயத்திலும் பொய் சொல்லாதீங்க. நேர்மையாக நடந்து கொள்ளுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top