இன்றைய ராசிபலன் – 16 அக்டோபர் 2024

இன்றைய ராசிபலன் – 16 அக்டோபர் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நன்மைகள் அதிகரிக்க கூடிய நாளாக இருக்கும். பெரிதாக பிரச்சனைகள் இருக்காது. அனாவசியமாக வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளவும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்தவும். பிள்ளைகளுடைய போக்கை கவனித்துக் கொள்ளுங்கள். வியாபாரம் கொஞ்சம் மந்தமாக தான் இருக்கும். என்று மழையின் காரணமாக உங்களுடைய வியாபாரம் கொஞ்சம் முடங்கி போகும்
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். குடும்பத்தோடு ஒன்றாக இணைந்து நேரத்தை கழிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும். இது மழை நேரம். ஆகவே வெளியிடங்களுக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து நேரத்தை கழிப்பீர்கள். சில பேருக்கு உடல் ஆரோக்கியத்தில் பிரச்சனை வரலாம். கொஞ்சம் ஜாக்கிரதியாக இருங்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று கட்டாயத்தின் பேரில் சில பேருக்கு வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். மழையால் சின்ன சின்ன தடங்கல்கள் தாமதங்கள் ஏற்படும். கொஞ்சம் டென்ஷன் ஆகாமல் பொறுமையோடு உங்களுடைய வேலையை செய்யுங்கள். ஆரோக்கியத்திலும் பயணத்திலும் கூடுதல் கவனம் இருக்கட்டும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று புரிதல் நிறைந்த நாளாக இருக்கும். நட்புகள் உறவுகள் பற்றியும் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்வீர்கள். வேலையிலும் தொழிலிலும் பெருசாக பிரச்சனை இருக்காது. அதிகமாக தண்ணீர் வரக்கூடிய இடத்தில் வசிப்பவர்கள் கொஞ்சம் கவனத்தோடு நடந்து கொள்ளுங்கள்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்து மனமகிழ்ச்சி அடைவீர்கள். பொது சேவையில் உங்களை நீங்களே ஈடுபடுத்திக் கொள்வீர்கள். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மழையின் காரணமாக வியாபாரம் மந்தமாக செல்லும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். எவ்வளவு சிக்கல்களை எதிர்கொண்டாலும் உங்களுடைய கடமைகளை சரிவர செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவழிக்க வாய்ப்புகள் அமையும். சுப செலவுகள் உண்டாகும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. உங்களுடைய உடைமைகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். யாரை நம்பியும் பணம் காசு கைமாத்தாக கொடுக்காதீங்க. நீண்ட தூர பயணத்தை தவிர்த்துக் கொள்ளவும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்ய வேண்டாம். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு ஆசை படாதீர்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்றைய நாள் அமைதியாக செல்லும். பெருசாக எந்த பிரச்சினையும் இருக்காது. கூடுமானவரை வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுங்கள். மழையின் காரணமாக தண்ணீர் தேங்கி இருக்கும் இடத்திற்கு அருகில் செல்ல வேண்டாம். குழந்தைகளையும் கவனத்தோடு பார்த்துக் கொள்ளவும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அதிக ஆர்வம் இருக்கும். அடுத்தவர்களுக்கு சேவை செல்வதில் உங்களுடைய நேரத்தை செலவு செய்வீர்கள். வீட்டில் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகும். கணவன் மனைவி மனசு விட்டு பேச நேரம் கிடைக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். செலவை கொஞ்சம் குறைத்துக் கொள்ளுங்கள். சேமிப்பில் அக்கறை காட்டுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சுகமான நாளாக இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். வழக்கத்தை விட வேலை பளு என்று ரொம்ப ரொம்ப குறைவாக இருக்கும். ஆனால் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு மட்டும் ஓய்வு கிடைக்காது. ஒன்றுக்கு இரட்டிப்பான வேலை இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களுக்கு உயர்வு ஏற்படும். தொழிலில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மழையால் பாதிப்பு உண்டாகக் கூடிய பொருட்களை எல்லாம் ஜாக்கிரதையாக கையாள வேண்டும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். கொட்டும் மழையில் வெளியிடங்களுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை சில பேருக்கு வரும். மேலதிகாரிகளின் பிரஷர் கொஞ்சம் இருக்கும். முன் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் நிதானமாக கையாளுங்கள்.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam

Scroll to Top