– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் வேலை தலைக்கு மேலே இருக்கும். ஒரு வேலையை முடித்தால், அடுத்த வேலை வரிசை கட்டி நிற்கும். உடல் சோர்வு இருக்கும். தேவையற்ற மன குழப்பங்களால் நிம்மதி குறையும். இந்த வாரத்தை கடந்து செல்ல உங்களுக்கு அதிக பொறுமை தேவை. வேலையிலும் தொழிலிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். குடும்பத்தில் சுப செலவுகள் இருக்கும். சில பேருக்கு சொத்து சுகம் வாங்கக்கூடிய யோகம் கூட இருக்கு. நீண்ட தூர பயணம் நன்மையை கொடுக்கும். இந்த வாரம் சனிக்கிழமை ஹனுமன் கோவிலுக்கு செல்வது நன்மையை தரும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். குடும்ப உறுப்பினர்களுடன் கோபத்தை காட்டக் கூடாது. பொறுமையாக நடந்து கொள்ளுங்கள். மற்ற படி வேலையிலும் தொழிலிலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். நல்ல பெயர் கிடைக்கும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கூடுதல் கவனம் தேவை. எந்த ஒரு கையெழுத்தும் இல்லாமல் பணம் கொடுக்காதீங்க. பணம் வாங்காதீங்க. ஷேர் மார்க்கெட்டில் உள்ளவர்கள் ஜாக்கிரதையாக முதலீடு செய்யவும். திங்கட்கிழமை சிவன் வழிபாடு நன்மையை தரும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நன்மை நடக்கக்கூடிய வாரமாகத்தான் இருக்கும். வேலையிலும் தொழிலிலும் நினைத்தபடி நல்ல விஷயங்களை செய்து முன்னேற்றம் அடைவீர்கள். சில பேருக்கு ப்ரோமோஷன் கிடைக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கைகூடி வரும். இடமாற்றம் ஏற்படலாம். கணவன் மனைவிக்குள் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து நடப்பது நல்லது. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை துர்க்கை அம்மன் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சுப காரியங்கள் நடக்கக்கூடிய வாரமாக இருக்கும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். சுப செலவுகள் ஏற்படும். சந்தோஷம் இரட்டிப்பாகும். குடும்ப பிரச்சனைகள் தீரும். ஆனால் வேலையிலும் தொழிலிலும் சின்ன சின்ன பிரச்சனைகள் வர துவங்கும். நீங்கள் நினைத்த வேலையை நினைத்த நேரத்தில் முடிக்க முடியாத சூழ்நிலை உண்டாகும். இந்த வாரத்தில் வரும் பிரச்சனைகளை தவிர்க்க வேண்டும் என்றால், சோம்பேறித்தனத்தை கைவிட வேண்டும். சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். செவ்வாய்க்கிழமை முருகர் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனது தெளிவடைய கூடிய வாரமாக இருக்கும். நீண்ட நாள் இருந்து வந்த குழப்பங்கள் விளக்கும். யார் நல்லவர்கள், யார் கெட்டவர்கள் என்பதை புரிந்து கொண்டு வாழ்க்கையை நடத்திச் செல்கிறீர்கள். சகோதர சகோதரி உறவு பலப்படும். வீட்டில் உறவுகளுக்கும் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். வேலையிலும் தொழிலிலும் எச்சரிகையாக இருக்க வேண்டும். யாரிடம் ஆவது ஏமாறுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மூன்றாவது நபரை பற்றி புறம் பேசாதீர்கள். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் இந்த வாரம் தப்பிக்கலாம். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். புதன்கிழமை விநாயகர் வழிபாடு செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் நிறைய நன்மை நடக்கக்கூடிய வாரமாகவே இருக்கும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த தடைகள் விலகும். எதிரிகள் எல்லாம் நண்பர்களாக மாறுவார்கள். பணத்தை சேமிப்பதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். சொத்து சுகம் வாங்கக்கூடிய வாய்ப்புகளும் இருக்கிறது. பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்த வேண்டும். கலைத்துறையினருக்கு இந்த வாரம் நிறைய நன்மைகள் நடக்கும். பிள்ளைகளுடைய போக்கில் பெற்றவர்கள் கவனம் செலுத்த வேண்டும். தினமும் சூரிய நமஸ்காரம் செய்வது உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மகிழ்ச்சி நிறைந்த வாரமாக இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் எல்லாம் தானாக உங்களை விட்டு விலகும். தேவையற்ற எதிரிகளும் உங்களை விட்டு விலகி விடுவார்கள். தொழிலை விரிவு படுத்த தேவையான முயற்சிகளை மேற்கொள்ளலாம். வெற்றி காண்பீர்கள். சின்ன சின்ன தள்ளுவண்டி கடை வைத்திருப்பவர்கள் முதல், பெரிய வியாபாரம் செய்பவர்கள் வரை இந்த வாரம் நல்ல லாபம் கிடைக்கக்கூடிய வாய்ப்புகள் அமையும். கமிஷன் தொழில் கைநிறைய பணத்தை கொடுக்கும். உறவுகளோடு அனுசரித்து நடக்க வேண்டும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வெள்ளிக்கிழமை அம்மன் வழிபாடு உங்களுக்கு நன்மையை செய்யும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் கொஞ்சம் நிதிநிலைமை மோசமாக இருக்கும். கையில் இருக்கும் பணமும் செலவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறது. மருத்துவ செலவு, தேவையற்ற செலவுகள் சேமிப்பை கரைத்து விடும். கொஞ்சம் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் சில பேருக்கு உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சங்கடங்கள் ஏற்படும். தொழிலை முன்னேற்ற பாதையில் நடத்த முடியாது. சில பேர் கடனுக்கு பொருட்களை வாங்கி ஏமாற்றவும் வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினமும் கால பைரவர் வழிபாடு செய்வது உங்களுக்கு நல்லது.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இந்த வாரம் முழுவதும் போராடி போராடி வெற்றி காண்பீர்கள். ஒரு வேலையை எடுத்தால் அது உடனடியாக முடியாது. இருந்தாலும் விடாமுயற்சியை கைவிடமாட்டீர்கள். எல்லா விஷயத்திலும் ஜெயித்தே ஆக வேண்டும் என்று கடினமாக உழைப்பீர்கள். கவலைப்படாதீங்க இந்த வார இறுதியில் நீங்கள் நினைத்தது எல்லாம் நல்லபடியாக நடந்து முடியும். தினம்தோறும் குலதெய்வ வழிபாடு உங்களுக்கு நன்மையை கொடுக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் முழுவதும் அதிர்ஷ்டம் நிறைந்த வாரமாக தான் இருக்கும். நீங்கள் உங்கள் இஷ்டத்திற்கு என்ன விஷயம் செய்தாலும் அது உங்களுக்கு சாதகமாக தான் அமையும். போன போக்கில் நிறைய நல்லதையும் செய்வீர்கள். ஆனால் உங்களுடைய வாழ்க்கை முறையில் எந்த ஒரு விளம்பரமும் இருக்காது. உங்களை பார்த்து, நாலு பேர் உங்களைப் போல வாழ வேண்டும் என்று சொல்லுவார்கள். அந்த அளவுக்கு இந்த வாரம் உங்களுக்கு மட்டுமே சொந்தமான வாரமாக இருக்கும். வேலையிலும் தொழிலிலும் சாதித்து காட்டுவீர்கள். உங்களை அவமானப்படுத்தியவர்கள் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். பெயர் புகழ் பாராட்டு குவியும். தினமும் மகாலட்சுமியை நினைத்து வழிபாடு செய்யுங்கள் மேலும் நல்லது நடக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இந்த வாரம் நிதானத்தோடு நடந்து கொள்ள வேண்டும். எந்த விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. பெரியவர்களின் பேச்சு, அனுபவ சாலிகளின் பேச்சை தட்டிக் கழிக்க கூடாது. பணத்தை முதலீடு செய்வதிலும் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். பிள்ளைகளுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துங்கள். குடும்ப விஷயத்தை கொஞ்சம் அக்கறையோடு கவனித்துக் கொள்ளுங்கள். அலட்சியமாக இருந்தால் சில பல பொருள் இழப்பு, உறவுகள் இழப்பும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. தினம்தோறும் பெருமாள் வழிபாடு செய்வது நன்மையை தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இந்த வாரம் அனுசரணையோடு நடந்து கொள்ள வேண்டும். யாரிடமும் போட்டி பொறாமைகள் போடக்கூடாது. கடன் வாங்குவதை தவிர்த்துக் கொள்ளுங்கள். செலவுகளையும் குறைத்துக் கொள்ளுங்கள். தொழிலில் இந்த வாரம் முதலீடு செய்ய வேண்டாம். இருக்கும் வேலையை சரிவர செய்தால் போதும். புதிய முயற்சிகளையும் செய்ய வேண்டாம். புது நண்பர்களை சேர்த்துக் கொள்ள வேண்டாம். குறிப்பாக மாணவர்கள் கல்வியில் அதிக ஆர்வம் காட்ட வேண்டும். அலைச்சல் இருக்கும். உடல் சோர்வு இருக்கும். ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். தினமும் ராமர் வழிபாடு உங்களுக்கு நன்மையை தரும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam