Thoppukaranam in Tamil – How to do தோப்புக்கரணம்?


Thoppukaranam in Tamil
பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்! எதற்காக போடுகிறோம் என்ற காரணங்கள் நமக்கு தெரிவதில்லை? அதில் உள்ள காரணங்கள் மறைபொருளாக வைக்கப்பட்டுள்ள ரகசியங்கள் என்னவென்று பார்ப்போம்:
இடகலை என்னும் நாடி வலதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது. அதேபோல் பிங்கலை என்னும் நாடி இடதுகால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு மேலே ஏறுகிறது.
இந்த இரு நாடிகளும் மேலேறி வரும் பொழுது மூலாதாரத்தில் ஒரு பின்னல் போட்டும், இதயத்தில் ஒரு பின்னல் போட்டும், புருவமத்தியில் ஒரு பின்னல் போட்டும் இருக்கிறது. வலது கால் பெருவிரலில் இருந்து வரும் இடகலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி இடது பக்கமாகவும், இடது கால் பெருவிரலில் இருந்து புறப்பட்டு வரும் பிங்கலை என்னும் நாடி புருவமத்தியில் மாறி வலது பக்கமாகவும், புருவமத்தியில் மாறி மாறி நெற்றிப் பொட்டு வழியாக மூளைப் பகுதிக்குச் செல்கிறது.
சுழுமுனை என்னும் நாடியானது மூலாதாரத்திலிருந்து ஆரம்பித்து எல்லா நாடிகளுக்கும் ஆதாரமாக இருக்கும் நடு துவாரத்தில் உட்புறமாக சஞ்சாரம் செய்து மேல் நோக்கிச் சென்று இரு புருவமத்தியிலுள்ள ஆக்கினை பகுதியைப் பற்றி நிற்கும்.
நெற்றிப் பொட்டில் நாம் இரு கைகளையும் மடக்கி விரல்களால் குட்டிக் கொள்ளும் போது அந்த இடங்களில் உள்ள பின்னல் நரம்புகளில் அந்த அதிர்வு பரவி சரீரத்தில் பின்னி வரும் நரம்புகளில் ஒரு துடிதுடிப்பை உண்டாக்குகிறது. அந்த துடிதுடிப்பு மூலாதாரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் குண்டலினி சக்தியில் இந்த அசைவு பதிகிறது.
அதற்கு பிறகு இரண்டு காதுகளையும் பிடித்துக் கொண்டு தோப்புக்கரணம் போடும் போது குண்டலினி சக்தியில் அசைவை ஏற்படுத்துகிறது. பல தடவை தொடர்ந்து தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தியை தூண்டி மேலே எழ வைக்கிறது.
தோப்புக் கரணம் போடும் பொழுது குண்டலினி சக்தி மூலாதாரத்திலிருந்து எழுந்து சுழுமுனை நாடி வழியாக புருவமத்தியில் கொண்டு வந்து நிறுத்திவிடுகிறது. ஜப்பானில் ஜென் புத்த மதத்துறவிகள் இந்த தோப்புக் கரணத்தை குண்டலினி சக்தியை கிளப்புவதற்கு உபயோகப்படுத்துகிறார்கள்.
நம்முள் உறங்கிக் கிடக்கும் சக்தியை எழுப்ப தோப்புக்கரணம் போடுகிறோம். இந்த தோப்புக் கரணத்தை பிள்ளையாருக்கு மட்டும் ஏன் போட வேண்டும்? பிள்ளையார் சிலை முன் ஏன் போட வேண்டும் என்பதை பார்ப்போம்:
? மனிதர்களுடைய உடலில் ஆறு ஆதாரங்கள் உள்ளன. ஒவ்வொரு ஆதாரத்திற்கும் ஒரு தெய்வசக்தி உண்டு. ஒவ்வொரு ஆதாரத்திலும் உள்ள தெய்வ சக்தியின் அருள் நமக்குக் கிடைத்தால் அந்த ஆதாரத்தை விழிப்படையச் செய்து அதன் சக்தியை நாம் பெற முடியும்.
ஆறு ஆதாரங்களும் அந்த ஆதாரங்களுக்கு உரிய தெய்வசக்திகளும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

ஆதாரம்
தெய்வ சக்திகள்

மூலாதாரம்
விநாயகர்

சுவாதிட்டானம்
பிரம்மா

மணிபூரகம்
விஷ்ணு

அநாகதம்
ருத்திரன்

விசுக்தி
மகேஸ்வரன்

ஆக்கினை
சதாசிவன்

இந்த ஆறு ஆதார தெய்வ சக்திகளின் அருளால் கிடைப்பது தான் சகஸ்ரார சித்தி ஆகும். மேற்கண்ட காரணங்களால் தான் பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் போடுகிறோம்!

How to Do Thoppukaranam in Tamil?
தோப்புக்கரணம் போடும் முறை
தோப்புக்கரணத்தை முறையாகப் போடுவது எப்படி என்று கீழே கொடுக்கப்பட்டுள்ளன:

முதலில் நம்முடைய தோள்பட்டை அளவுக்குக் கால்களை பிரித்துவைத்து நிற்க வேண்டும்.
இடது கையால் வலது காது மடலையும், வலது கையால் இடது காது மடலையும் பிடிக்க வேண்டும்.
கட்டைவிரல் வெளியேயும், ஆள்காட்டி விரல் உட்பக்கம் இருக்க வேண்டும்.
வலது கை, இடது கையின் மேல் இருக்க வேண்டும்.
தலையை நேராக வைத்து, மூச்சுக் காற்றை உள்ளிழுக்க வேண்டும்.
நம்மால் எந்த அளவு சிரமம் இல்லாமல், உட்கார முடியுமோ அந்த அளவு உட்கார வேண்டும்.
பின்பு மூச்சுக் காற்றை வெளியிட்டவாறே, அப்படியே எழுந்து நிற்கவேண்டும்.
இதன் மூலம் நமது தண்டுவடத்தின் மூலாதாரத்தில் சக்தி உருவாகும்.

 
Also, read

சிவாலய ஓட்டம் – Sivalaya Ottam Story, Temples List in Tamil


Sivalaya Ottam
? சைவ-வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் வகையில் குமரியில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வு சிவாலய ஓட்டம் ஆகும். இவ்வழிபாடு மாசி மாதம் நடைபெறுகிறது. சிவராத்திரியின் முதல் நாள் ஆயிரக்கணக்கான பக்தர்கள் காவி உடை அணிந்து, “பத்மனாதபுரத்தைச் சுற்றியுள்ள பன்னிரு சைவத் திருத்தலங்களையும் 24 மணி நேரத்தில் ஓடி வலம் வருகின்றனர்”.
? சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்கள் குறிப்பிட்ட காலத்திற்கு முன்பே மாலை அணிந்து விரதம் மேற்கொள்கின்றனர். மேலும் இவ்வோட்டத்தில் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்கின்றனர். கையில் ஓலை விசிறியுடனும் ஒரு சிறிய பண முடிச்சுடனும் ஓடுகின்றனர்.
? சிவாலய ஓட்டத்தில் ஓடும் பக்தர்கள் ஏகாதசி விரதம் இருப்பவர்கள். இவர்கள் தீயினால் சுடப்பட்ட பொருள்களை சாப்பிட மாட்டார்கள். இளநீர், நுங்கு, வாழைப்பழம் ஆகியவற்றை மட்டுமே சாப்பிடுவர். சைவ, வைணவ ஒற்றுமையை உணர்த்தும் வகையில் சிவனை தரிசிக்க வரும் பக்தர்கள் விஷ்ணுவின் நாமத்தை ‘கோவிந்தா! கோபாலா!!’ எனச் சொல்லி ஓடுவர்.
? பக்தர்கள் புனிதப் பயணம் செல்லும் போது, கையில் விசிறி ஏந்திச் செல்வது சமண மதத்திலுள்ள ஒரு வழக்கம். மேலும் திருநந்திக்கரையில் உள்ள குடவரைக் கோவில், திற்பரப்பில் உள்ள குகைக் கோவில், பன்னிப்பாக்கம் அருகில் உள்ள பாதச் சுவடு திருமலையில் கல்லிலே பொறிக்கப்பட்டுள்ள கண்கள் ஆகியவை இவ்வோட்டம் சமண சமயத்திலிருந்து வந்ததை உறுதி செய்வதாய் உள்ளது.
? குமரி மாவட்டம் தமிழகத்துடன் இணையும் முன்பு அன்றைய திருவிதாங்கூர், கொச்சியுடன் (இன்றைய கேரளா) இணைந்திருந்தது. அப்போது, தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு ஆகிய 4 தாலுகாக்கள் இருந்தன. இதில் தோவாளை, அகஸ்தீஸ்வரம் ஆகிய இரண்டையும் நாஞ்சில் நாடு என்றும், கல்குளம், விளவங்கோடு ஆகிய இரண்டையும் ‘வேணாடு’ என்றும் அழைத்து வந்தனர். வேணாட்டின் தலைநகரமாக தற்போது பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் விளங்கியது.
Also read: மகா சிவராத்திரி விரதம் மற்றும் மந்திரங்கள்
Sivalaya Ottam Temples List in Tamil
? கல்குளத்தை சுற்றி 12 சிவாலயங்கள் உள்ளன.

திருமலை மகாதேவர் கோவில்
திக்குறிச்சி மகாதேவர் கோவில்
திற்பரப்பு மகாதேவர் கோவில்
திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில்
பொன் மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில்
திருப்பன்றிப்பாகம் சிவன் கோவில்
கல்குளம் நீலகண்ட சுவாமி கோவில்
மேலாங்கோடு சிவன் கோவில்
திருவிடைக்கோடு சடையப்பமகாதேவர் கோவில்
திருவிதாங்கோடு மகாதேவர் கோவில்
திருப்பன்றிக்கோடு மகாதேவர் கோவில்
திருநட்டாலம் சங்கர நாராய ணர் கோவில்

? இந்த 12 சிவாலயங்களுக்கும் சிவராத்திரி தினத்தில் பக்தர்கள், ‘கோபாலா….. கோவிந்தா….’ என அழைத்தவாறு நடந்தும், ஓடியும் சென்று வழிபடுவார்கள். சிலர், சைக்கிள், மோட்டார் சைக்கிள், கார், வேன் போன்ற வாகனங்களில் சென்று தரிசனம் செய்வார்கள். இந்த சிவாலய ஓட்டம் புதுக்கடை அருகே உள்ள முன்சிறை, திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்குகிறது. அங்கிருந்து 9 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திக்குறிச்சி மகாதேவர் கோவிலுக்குச் செல்வர்.
? பின்னர் அங்கிருந்து அருமனை, களியல் வழியாக 14 கிலோமீட்டர் தொலைவில் உள்ள திற்பரப்பு மகாதேவர் கோவிலுக்கு சென்று, அங்கிருந்து குலசேகரம் கான்வென்ட் சந்திப்பு வழியாக 8 கி.மீ தொலைவில் உள்ள திருநந்திக்கரை சிவன் கோவில் செல்வார்கள்.
? பின்னர், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்றிப்பாகம் சிவன்கோவில், பத்மநாபபுரம் என்று அழைக்கப்படும் கல்குளம் நீலகண்ட மகாதேவர் கோவில் செல்வார்கள். 12 சிவாலயங்களில் இங்கு மட்டும் தேவி வடிவில் சிவன் உள்ளார்.
? அங்கிருந்து, மேலாங்கோடு சிவன்கோவில், தென்கரை வில்லுக்குறி வழியாக, திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், அங்கிருந்து கோழிப்போர்விளை, பள்ளியாடி திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில் சென்று இறுதியாக நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் சிவாலய ஓட்டம் நிறைவு செய்யப்படுகிறது. இதில் பக்தர்கள் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை சுற்றி வருவார்கள்.
? இந்த 12 சிவாலயங்களில் 11 சிவாலயங்களில் பக்தர்களுக்கு திருநீரு வழங்கப்படும். 12வது சிவாலயமான திருநட்டாலத்தில் மட்டும் பக்தர்களுக்கு சந்தனம் வழங்கப்படுகிறது. திருநட்டாலம் கோவிலில் சுவாமி சிவன்-விஷ்ணு என சங்கரநாராயணர் வடிவத்தில் எழுந்தருளியுள்ள நிலை சைவ, வைணவ ஒற்றுமையை பறைசாற்றுவதாக உள்ளது.
Sivalaya Ottam Story in Tamil
? சிவாலய ஓட்டம் எதற்காக நடத்தப்படுகிறது என்பதற்கு சரியான காரணம் தெரியவில்லை. இருப்பினும் 2 விதமான கருத்துகள் கூறப்படுகின்றன. அவற்றில் 3 தத்துவங்களை நிலைப்படுத்தும் பீமன் கதை தான் ஏராளமான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டு வருகிறது.
? பாண்டவர்களின் முதல்வரான தர்மபுத்திரனுக்கு ராஜகுரு யாகம் ஒன்றை நிறைவேற்ற புருஷ மிருகத்தின் (வியாக்ரபாத மகரிசி) பால் தேவைப்பட்டது. அந்த ராட்சத மிருகத்துக்கு சிவன் மீது மிகுந்த பக்தியும், விஷ்ணு மீது மிகுந்த வெறுப்பும் உண்டு. பீமனின் அகந்தையை அடக்கவும், வியாக்ரபாத மகரிசிக்கு, சிவனும், விஷ்ணுவும் ஒன்று என பாடம் புகட்டவும் நினைத்து மகாவிஷ்ணு, பீமனிடம் பால் கொண்டுவர கட்டளையிட்டார்.
? அத்துடன் 12 உத்திராட்சங்களை பீமனின் கையில் கொடுத்து, உனக்கு ஏதாவது ஆபத்து வந்தால், இதில் ஒன்றை கீழே போட்டுவிடு என்று சொல்லி அனுப்பி வைத்தார். பீமன் தயக்கத்துடன் உத்திராட்சங்களை வாங்கிவிட்டு புறப்பட்டான். பீமன் அடர்ந்த காட்டை அடையும்போது அங்கு புருஷ மிருகம் கடும் தவத்தில் இருந்தது.
? அப்போது, பீமன், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பியபடி பால்பெற முயற்சி செய்தான். கோவிந்தா என்ற வார்த்தையை கேட்டவுடன் புருஷ மிருகத்துக்கு சிவலிங்கம், விஷ்ணுவாக தெரிய, தவம் கலைந்து விடுகிறது.
? சிவபூஜையில் புகுந்த பீமனை புருஷ மிருகம் கோபத்துடன் துரத்திச் சென்று பிடித்துக் கொண்டது. உடனே பீமன் ஒரு உத்திராட்சத்தை அந்த இடத்தில் போட்டான். உடனே அந்த இடத்தில் ஓரு சிவலிங்கம் உருவாகியது. புருஷ மிருகம் ஆழ்ந்த சிவநெறி செல்வர் என்பதால் லிங்க பூஜையை தொடங்கி விடுகிறது.
? சிறிது நேரம் கழித்து பீமன் மீண்டும், ‘கோவிந்தா, கோபாலா’ என குரல் எழுப்பி பால் பெற முயன்ற போது புருஷ மிருகம் மீண்டும் துரத்தி சென்று பற்றிக்கொள்ள, அடுத்த உத்திராட்சத்தை அங்கு போட்டுவிட்டு ஓடிவிட்டார்.
? இவ்வாறு 12 உத்திராட்சங்களும், 12 சைவ தலங்களை உருவாக்கி விடுகிறது. 12-வது உத்திராட்சம் போடும் போது பீமனின் ஒரு கால் வியாக்ரபாத மகரிசிக்கு சொந்தமான இடத்திலும், மறு கால் வெளியிலும் இருந்தது. உடனே, பீமன் அதனுடன் வாதம் செய்தான்.
? இந்த வழக்கில் நீதி தேவனான தரும புத்திரன், தனது தம்பி என்றும் பாராமல் புருஷ மிருகத்துக்கு சாதகமாக நீதி வழங்கினார். பீமனுடைய உடலில் பாதி, புருஷமிருகத்துக்கு சொந்தம் என அறிவிக்கிறார். இறுதியில் யாகம் நிறைவேற புருஷமிருகம் பால் வழங்குகிறது. பீமனுடைய கர்வம் ஒடுக்கப்பட்டது. புருஷ மிருகத்தின் மீது இருந்த அவதூறுகளும் களையப்படுகிறது. இவ்வாறு “பீமன் ஓடியதை நிறைவு கூறும் வகையில் இன்றும் பக்தர்கள் கோவில்களுக்கு ஓடிச்சென்று” வழிபடுகிறார்கள்.
மற்றொரு கதை: சூண்டோதரன் என்ற அரக்கன் சிவன் மீது மிகுந்த பக்தி கொண்டவனாக இருந்தான். அவன் சிவனை வேண்டி திருமலையில் (முதல் சிவாலயம்) கடும் தவம் புரிந்தான். அவனது தவத்தை மெச்சிய சிவன் அரக்கன் முன் தோன்றி வேண்டிய வரம் தருவதாக கூறினார். உடனே அந்த அரக்கன், ‘நான் யாருடைய தலையை தொட்டாலும் அவன் சாம்பலாகி விட வேண்டும்’ என்ற வரத்தைக் கேட் டான்.
? சிவனும் அந்த வரத்தைக் கொடுத்தார். உடனே அரக்கன் வரம் உண்மையிலேயே தனக்கு தரப்பட்டதா? என்பதை அறிய சிவனின் தலையை தொடமுயன்றான். உடனே, சிவன் அங்கிருந்து, ‘கோபாலா, கோவிந்தா’ என்று அழைத்தவாறு ஒவ்வொரு இடமாக ஓடி ஒளிகிறார்.
? இறுதியில் நட்டாலத்தில் விஷ்ணு, மோகினி அவதாரம் எடுக்கிறார். மோகினியின் அழகில் மயங்கிய அரக்கனை அவன் கையால் அவனது தலையை தொடச் செய்து அழிக்கிறார், விஷ்ணு. இவ்வாறு சிவன் ஓடி ஒளிந்த 12 இடங்களில் சிவன் கோவில் எழுப்பப்பட்டதாகவும், நட்டாலத்தில் சிவனை விஷ்ணு காத்ததால் அங்கு இருவருக்கும் கோவில் எழுப்பப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
? இவ்வாறு, “சிவன் ஓடிய ஓட்டத்தை நினைவு கூறும் வகையில் தான் சிவாலய ஓட்டம் நடப்பதாக வரலாறு கூறுகிறது”.
? சிவாலய ஓட்டத்தில் கலந்துகொள்ளும் பக்தர்களுக்கு அருமனை, களியல், திற்பரப்பு, குலசேகரம், பொன்மனை உள்ளிட்ட பகுதிகளில் கிழங்கு, கஞ்சி, கடலை போன்ற உணவுகளும், சுக்குநீர் உள்ளிட்ட நீர் உணவுகளும் வழங்கப்படுகிறது.
? இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகம் மட்டுமல்லாது கேரளாவில் இருந்தும் அதிக பக்தர்கள் கலந்து கொள்வது மிகச் சிறப்பானதாகும். பக்தர்களின் கோரிக்கையை ஏற்று சிவாலய ஓட்டத்திற்கு தமிழக அரசு மகா சிவராத்திரி அன்று உள்ளூர் விடுமுறையும் அறிவித்துள்ளது.
நன்றி: சந்திரசேகரன் கோபாலகிருஷ்ணன்

கணபதி ஹோமம் – Ganapathi Homam in Tamil


Ganapathi Homam in Tamil
கணபதி ஹோமம்
கணபதி ஹோமம் புதிய தொழில்கள் துவங்கும் போது நடத்தப்படும். உடல், மனம், ஆன்மிக அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கி வாழ்வில் வெற்றி கிடைக்கும். பொருளாதாரம், படிப்பு, ஆரோக்கியம் போன்ற அம்சங்களில் உள்ள தடைகள் நீங்கும். மற்ற ஹோமங்களை துவக்குவதற்கு முன்பு கணபதி ஹோமம் செய்ய வேண்டும்.
கணபதி ஹோமத்திற்க்கு பயன்படுத்தும் பொருட்களின் பலன்கள்
மகாகணபதியின் அருளைப் பெறக் கணபதி ஹோமம் மிகவும் முக்கியமானது. வெள்ளிக்கிழமை, சதுர்த்தி ஆகிய நாட்களில் விடியற்காலையில் ஹோமம் செய்வது விசேஷம். அஷ்டத்திரவியம், தேங்காய்த்துண்டு ஆகியவை அதற்குச் சிறந்த ஹோமத்திரவியங்கள்.

1000 தேங்காய்க் கீற்றினால் ஹோமம் செய்ய செல்வம் வளரும், உண்டாகும்.
ஸத்துமா, நெல் பொரி, திரிமதுரம் ஆகியவை ஸர்வ வச்யம் நல்கும். திரிமதுரம் கலந்த நெல்பொரி கல்யாண ப்ராப்தியைத் தரும்.
நெல் கலந்த அன்னம், நெய் ஆகியவை விருப்பத்தை ஈடேற்றும்.
தேன் தங்கம் தரும்.
நெய்யில் நனைத்த அப்பம் மந்திர சித்தி, ராஜ வச்யம் தரும்.
மோதகம் போரில் வெற்றி, நினைத்ததை தரும்.
மட்டை உரிக்காத தேங்காய் (1 மண்டலம்) மந்திர சித்தி நல்கும்.
தாமரை செல்வ வளர்ச்சி தரும்.
வெண்தாமரையால் வாக்கு சித்தி ஏற்படும்.
அறுகம்புல் குபேர சம்பத்து தரும்.
வில்வ இலை, தேங்காய், அவல், மிளகு ஆகியவை ஸர்வ வசியம் தரும்.

Ganapathi Homam Procedure
கணபதி ஹோமம் செய்முறை
அனுக்ஞை சுக்லாம்பரதரம்… சாந்தயேஓம் பூ … பூர்புஸ்ஸுவரோம்
சங்கல்பம்:
சுபே சோபனே …. பரமேச்வர ப்ரீத்யர்த்தம்நக்ஷ்த்ரே – ராசௌ ஜாதஸ்ய ஸ குடும்பஸ்யக்ஷேமஸ்தைர்ய வீர்ய விஜய ஆயு: ஆரோக்யஐச்வர்ய அபிவ்ருத்த்யர்த்தம் ஸர்வாரிஷ்ட சாந்த்யர்த்தம்ஸர்வாபீஷ்ட ஸித்த்யர்த்தம் மஹா கணபதி ஹோமம் கரிஷ்யே.
(தேங்காய் ஒன்றினை உடைத்து, மூங்கில் இலை போல் மெல்லியதாகக் கீறி, வெல்லச் சர்க்கரை, தேன், நெய் ஆகியவை சேர்த்து 8 கீற்றுக்களை ஹோமத்திற்கு வைத்துக் கொள்க. மீதி உள்ளது மஹாகணபதிக்கும் துர்க்கைக்கும் நிவேதனம். கொட்டாங்கச்சிகளை, மூல மந்திரம் ஜபித்துக் கொண்டு அக்னிக்குத் தெற்கிலும், வடக்கிலும் கண்கள் போல வைக்கவும். மட்டைகளை யானையின் துதிக்கை போல் அக்னியின் சுற்றுப்புறத்தில் வைக்கவும்.
எட்டுத்திரவியங்கள்
கொழுக்கட்டை, அவல், பொரி, ஸத்துமா, கரும்புத்துண்டு, தேங்காய்க் கீற்று, எள், வாழைப்பழம் ஆகியவை. (அறுகம்புல்லாலும் ஹோமம் செய்ய வேண்டும்)
1. பூர்ப்புவஸ் ஸுவரோம் என்று அக்னியைப் பிரதிஷ்டை செய்க. (அதற்கு முன், அக்னியைத் தாபிக்க வேண்டிய இடத்தில் அரிசிமாவால் ஒரு சாண் அளவு தரையில் சதுரமாக மண்டலம் செய்து இரு தர்ப்பைகளால் கிழக்கு நோக்கியும், வடக்கு நோக்கியும் முறையே 3 கோடுகள் வரைந்து நீரைத் தொட்டு, தர்ப்பையைத் தென்மேற்கில் போட்டு மறுபடியும் ஜலத்தைத் தொடுக).
2. அருகில் கும்பத்தில் வருணனை ஆவாகித்துப் பூசை செய்க. அக்னிக்கு வடகிழக்கில் தீபம் வைத்து அதில் துர்க்கை ஆவாஹனம் 16 உபசார பூஜை செய்க.
3. பரிஷேசனம்
அதிதே அநுமன்யஸ்வ அநுமதே அநுமன்யஸ்வஸரஸ்வதே அநுமன்யஸ்வ தேவ ஸவித: ப்ரஸுவ
4. அக்னியில் தியானம் செய்து, ஹோம குண்டத்தின் 8 திசைகளிலும் பூஜை செய்க. (கிழக்கிலிருந்து வரிசையாக ஒவ்வொரு திசையிலும்)
இந்த்ராய நம: அக்னயே நம: யமாய நம:நிர்ருதயே நம: வருணாய நம: வாயவே நம:சோமாய நம: ஈசானாய நம: அக்னயே நம: (அக்னியில்)ஆத்மனே நம: ஸர்வேப்யோ ப்ராஹ்மணேப்யோ நம:
நெய்யில் 15 சமித்தைத் தோய்த்து, அஸ்மின் ஹோம கர்மணி ப்ரஹ்மன் இத்மம் ஆதாஸ்யே என்று கூற, பிரம்மாவானவர், ஓம் ஆதத்ஸ்வ என்று சொல்லியதும், அக்னியில் சேர்க்க. பிரஜாதிபதியை மனதில் நினைத்துக் கொண்டு வடக்கு மூலையிலிருந்து தென் கிழக்காக நெய்யைத் தாரையாக விடுக. எல்லா சமித்துக்களையும் தொடுக. பின்னர் ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று கூறுக. ஸ்வாஹா இந்த்ராய இதம் ந மம (தெற்கிலிருந்து வடகிழக்காக நெய்யை ஊற்றுக). அத ஆஜ்ய பாகோ ஜுஹோதி (வடகிழக்குப் பாதியில்) அக்னயே ஸ்வாஹா, அக்யை இதம் ந மம, என்றும், தென்கிழக்குப் பாதியில் ஸோமாய ஸ்வாஹா, ஸோமாய இதம் ந மம என்றும் நெய்யால் ஹோமம் செய்க. எல்லாத் தோஷங்களுக்கும் பிராயச்சித்தமாக, ஓம் பூர்ப்புவஸ்ஸுவ : ஸ்வாஹா, ப்ரஜாபதய இதம் ந மம என்று நெய் விடுக.
5. அக்னியின் மத்தியில் மகா கணபதியைத் தியானம் செய்க. அஸ்ய ஸ்ரீ மஹா கணபதி மகாமந்த்ரஸ்ய கணக ரிஷி: காயத்ரீச் சந்த : மஹாகணபதிர் தேவதா க்லாம் பீஜம் க்லீம் சக்தி: க்லூம் கீலகம் ஸ்ரீ மஹாகணபதி ப்ரஸாத ஸித்த்யர்த்தே ஹோம விநியோக: (கரநியாஸம், அங்க நியாஸம் செய்க). பூர்ப்புவஸ்ஸுவரோம் என்று திக்பந்தனம் செய்க.
6. தியானம்
பீஜாபூர கதே க்ஷ கார்முகருஜா சக்ராப்ஜ பாசோத்பல வ்ரீஹ்யக்ர ஸ்வவிஷாண ரத்னகலச ப்ரோத்யத் காராம் போருஹ: த் யேயோ வல்லப யா ஸபத்மகரயா ஸ்லிஷ்டோஜ்வலத் பூஷயா விஸ்வோத்பத்தி விபத்தி ஸம்ஸ்தித கரோ விக்நேச இஷ்டார்த்த:
7. பஞ்ச பூஜை
லம் ப்ருதிவ்யாத்மநே கந்தம் ஸமர்ப்பயாமிஹம் ஆகாசாத்மநே புஷ்பம் ஸமர்ப்பயாமியம் வாய்வாத்மநே தூபம் ஆக்ராபயாமிரம் அக்னியாத்மநே தீபம் தர்சயாமிவம் அம்ருதாத்மநே அம்ருதம் மகாநைவேத்யம் நிவேதயாமிஸம் ஸர்வாத்மநே ஸர்வ உபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
(பின் கணபதி மூல மந்திரம் ஜபம் செய்க.)
8. நெய்யால் ஹோமம்
ஓம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் …. க்லௌம் ஸ்வாஹாஓம் ஸ்ரீம் … …. கம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் …. கணபதயே ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் …. வரவரத ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் …. ஸர்வ ஜனம் மே வசம் ஸ்வாஹா ஓம் ஸ்ரீம் …. வசமானய ஸ்வாஹா ஸ்ரீ மகா கணபதயே இதம் ந மம
9. தேங்காய்க் கீற்றால் ஹோமம்
நக்ஷத்ரே – ராசௌ ஜாதஸ்ய – சர்மண: ஸகுடும் பஸ்ய அனுகூலம் ப்ரயச்ச ப்ரயச்ச, ப்ரதிகூலம் நாசய நாசய, ஸம்பதோ வர்தய, வர்தய, வர்தய, ஸர்வத்ர விஜயம் ப்ரயச்ச ப்ரயச்ச,
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் … வசமானய ஸ்வாஹா (8 முறை ஹோமம் செய்க).
10. நெய் ஹோமம்
கணானாம் த்வா கணபதிம் ஹவாமஹே … ஸீதஸாதனம் ஸ்வாஹா (8 முறை சொல்லி ஹோமம்)
11. நெல் பொரியால் ஹோமம்
உத்திஷ்ட புருஷ ஹரித பிங்கல லோஹி தாக்ஷ ஸர்வாபீஷ்டம் தேஹி தேஹி தா பய தா பய ஸ்வாஹா (8 முறை ஹோமம்) அக்னிரூபாய ஸ்ரீ மஹாகணபதயே இதம் ந மம.
12. தேங்காய் மூடியால் ஹோமம்
ஜாத வேத ஸே….துரிதாய க்னி: ஸ்வாஹா (இரு முறை)
13. நெய்யில் தோய்த்த அறுகம்புல்லால் ஹோமம்
மூல மந்திரத்தால் 8 முறை செய்க.
14. 8 திரவியத்தால் ஹோமம்
ஓம் நமோ வ்ராதபதயே நமோ கணபதயே நம: ப்ரமதபதயே நமஸ்தேஸ்து லம்போதராய ஏக தந்தாய விக்னவிநாசினே சிவஸுதாய ஸ்ரீ வரத மூர்த்தயே நமோ நம: ஸ்வாஹா (8 முறை) ஸ்ரீ மஹாகணபதய இதம் ந மம
15. கணேச காயத்ரீ ஜபம் – 10 முறை.
Buy Ganapathi Homam Pooja Items from Amazon:

16. கணேச மாலாமந்திரம் சொல்லி ஹோமம்.
17. கணபதி அதர்வசீர்ஷம் சொல்லி ஹோமம்.
18. உத்தராங்கம்
பூ : ஸ்வாஹா அக்யை இதம்புவ : ஸ்வாஹா வாயவ இதம்ஸுவ : ஸ்வாஹா ஸுர்யாய இதம்
அஸ்மிந் ஹோம கர்மணி மத்யே ஸம்பாவித ஸமஸ்த தோஷ ப்ராயச்சித்தார்த்தம் ஸர்வ ப்ராயச் சித்தார்த்தம் ஹோஷ்யாமி ஓம் பூர்புவஸ்ஸுவ : ஸ்வாஹா ப்ரஜாபதய இதம் ஸ்ரீ விஷ்ணவே ஸ்வாஹா விஷ்ணவே பரமாத்மன இதம் நமோ ருத்ராய பசுபதயே ஸ்வாஹா ருத்ராய பசுபதயே இதம் (நீரால் கைகளை நனைக்க)
19. பூர்ணாஹுதி
அஸ்மின் ஹோமகர்மணி பூர்ணாஹுதிம் கரிஷ்யே
பூர்ணாஹுதி தேவதாப் யோ நம: ஸர்வோபசார பூஜாம் ஸமர்ப்பயாமி
மூலமந்திரம் + வெளஷட்
பூர்ணாஹுதிம் உத்தமாம் ஜுஹோதி ஸர்வம் வை பூர்ணாஹுதி : ஸர்வம் ஏவாப்நோதி அதோ இயம் வை பூர்ணாஹுதி : அஸ்யாமேவ ப்ரதி திஷ்டதி
பூர்ணமத : பூர்ணமிதம் பூர்ணாத் பூர்ணம் உதச்யதே…. அவசிஷ்யதே
ப்ரஹ்மார்ப்பணம் ….. ஸமாதி நா
பிராணாயாமம் செய்க.
20. பரிஷேசனம்
அதிதே அன்வமங்ஸ்தா : அநுமதே அன்வமங்கஸ் தா : ஸரஸ்வதே அன்வ மங்ஸ்தா :தே ஸவித : ப்ராஸாவீ :வருணாய நம : ஸகலாராதனை : ஸ்வர்ச்சிதம்
21. பிரம்ம உத்வாஸனம்
ப்ரஹ்மன் வரம் தே த தா மி ப்ரஹ்மணே நம:ஸகல ஆராதனை ஸ்வர்ச்சிதம்(நான்கு பக்கங்களிலும் உள்ள தர்ப்பைகளை அக்னியில் சேர்க்க).
22. உபஸ்தானம்
ஸ்வாஹா அக்னேர் உபஸ்தானம் கரிஷ்யே அக்னயே நம:மந்த்ரஹீநம் க்ரியாஹீநம் பக்திஹீநம் ஹுதாசனயத் து தம் து மயா தேவ பரிபூர்ணம் தத ஸ்து தேப்ராயஸ்சித்தானி அசேஷானி தப : கர்ம ஆத்மகானி வையாநி தேஷாம் அசேஷாணாம் க்ருஷ்ணாணுஸ்மரணம் பரம் (நமஸ்காரம் செய்க)அக்னிம் ஆத்மனி உத் வாஸயாமி (இதயத்தில் அஞ்சலி செய்க)
23. ரக்ஷ
ப்ருஹத் ஸாம க்ஷத்ரப் ருத் வ்ருத் த வ்ருஷ்ணியம்: த்ரிஷ்டு பௌஜ: ஸுபி தம் உக்ர வீரம் இந்த்ர ஸ்தோமேன பஞ்சதஸேன மத்யம் இதம் வாதேன ஸகரேண ரக்ஷ
24. ஸமர்ப்பணம்
குஹ்யாதி குஹ்ய கோப்தா த்வம் க்ருஹாணா ஸ்மத் க்ருதம் ஹவம்ஸித்தி : பவது மே தே வ த்வத்ப்ரஸதான் மயி ஸ்திராஓம் தத்ஸத் ப்ரஹ்மார்ப்பணம் அஸ்து.

Ganapathi Homam Benefits in Tamil
கணபதி ஹோமம் பலன்கள்
நோய்கள், தொழில் தடங்கள்: குடும்பத்தில் உள்ளவர்களின் நோய்கள், தொழில் தடங்கள், மனக் குழப்பம், எதிர்மறை எண்ணங்கள் விலகி நன்மை உண்டாகும்.
கேது திசை: ஜாதகத்தில் கேது திசையில் இருப்பவகள் அக்கிரகத்தினால் உண்டாகும் பாதிப்பு குறைந்து நன்மைகள் உண்டாகும்.
திருமண தடை: திருமண தடை, வேலையின்மை, தொழில் நஷ்டம் நீங்கி வெற்றியும், சொல்வ சொழிப்பும் வந்து சேரும்.
அக்னி: ஐந்து பஞ்ச பூதங்களில் ஒன்றான அக்னியை கொண்டு கணபதி ஹோமம் செய்யும் பொழுது அக்னியில் இருந்து வெளியாகும் அதிர்வுகள் உடலில் உள்ள சேர்வை நீக்கி புத்துணர்வு அடைய செய்யும்.
கல்வி: குழந்தைகள் கல்வியில் சிறந்த முன்னேற்றம் அடைவார்கள், படிப்பது மனதில் நிற்கும்.
இறை வழி பாதை: இறை வழியில் செல்பவர்களுக்கு ஏற்படும் தடைகளையும், பிரச்சனைகளையும் நீக்கி அவர்களின் பாதையை எளிமையாக்கும்.
துர்மரணங்கள், விபத்துக்கள் தவிர்க்க: ஏதிர்பாராத வித மாக ஏற்படும் துர்மரணங்கள், விபத்துக்கள் இவைகளில் இருந்து பாதுகாக்கபடும்.
தனசேர்க்கை: நச்சரிக்கும் பணக் கஷ்டங்களில் இருந்து விடுபட்டு தனசேர்க்கையும், முன்னேற்றம் ஏற்படும்.
மேன்மை: தொழில் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்களும் மேன்மையுண்டாகும்.
குடும்ப பிரச்சனைகள்: ஆண்டுக்கு ஒருமுறை கணபதி ஹோமம் செய்வதால் குடும்பத்தில் ஏற்படும் தேவையற்ற குடும்ப பிரச்சனைகள் வராமல் தடுப்பு சுவராக கணபதி ஹோமம் இருக்கும்.
நேர்மறை சக்திகள்(Positive Energy): கணபதி ஹோமம் செய்வதால் வீட்டில் உள்ள தீய சக்திகள் என்று அழைக்கப்படும் எதிர்மறை சக்திகள் வெளியேறி, மாறாக நேர்மறை சக்திகள் அதிகமாகும்.

Buy Ganapathi Homam Pooja Items from Amazon:

Sivalingam Saatchi Sonna Kathai – சிவலிங்கம் சாட்சி சொன்ன கதை


Sivalingam Saatchi Sonna Kathai
அந்தக் காலத்தில் காவிரிப்பூம்பட்டினத்தை சேர்ந்த வணிகன் ஒருவன். அவன் பெயர் அரதன குப்தன். மதுரையைச் சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு, மதுரையிலேயே வாழ்ந்து வந்தானாம்.
காவிரிபூம்பட்டினத்தில் வசித்து வந்த அவன் தங்கைக்கும், தங்கையின் கணவருக்கும் தங்கள் மகள் இரத்னாவளியையும் அரதன குப்தனுக்கே மணம் முடித்து விட மனதுக்குள் ஆசை.
எதிர்பாராமல் ஒரு நாள், அரதன குப்தனின் தங்கையும், அவள் கணவரும் இறந்து விட்டதாக காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து தகவல் வர, உடனே புறப்பட்ட அரதன குப்தன், காவிரிப்பூம்பட்டினம் சென்று தங்கையின் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டுவிட்டு திரும்பும்போது, தாய் தகப்பனை இழந்து நின்ற இரத்னாவளியையும் அழைத்துக் கொண்டு மதுரைக்கு புறப்பட்டான்.
வரும் வழியில் திரும்புறம்பயம் என்ற இடத்திலே, ஒரு புன்னைவனம் – அதில் ஒரு வன்னிமரம். அருகில் ஒரு சிவலிங்கம். சற்றுத் தள்ளி ஒரு கிணறு.
கட்டுச்சோறை பிரித்து சாப்பிட்டு விட்டு, அங்கேயே தங்கி விட்டார்கள் இருவரும். காலையில் கண் விழித்த இரத்னாவளி பதறிப்போனாள். கதறி அழுதாள் காரணம். அசைவற்றுக் கிடந்தான் அரதன குப்தன். நள்ளிரவில் நல்ல பாம்பு வந்து கடித்திருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக வருகிறார் திருஞானசம்பந்தர். நடந்ததை அறிந்து அவர் ஈசனிடம் முறையிட, உயிரோடு எழுந்தான் அரதன குப்தன்.
சம்பந்தப்பட்ட விஷயங்கள் எல்லாவற்றையும் இரத்னாவளியிடம் கேட்டுப் புரிந்து கொண்டாராம் சம்பந்தர். அப்புறம் சொன்னாராம்: “ஈசனுக்கு முன்பாகவே இந்தப் பெண்ணுக்கு ஒரு தாலியைக் கட்டி, இவளை உன் மனைவியாகவே ஊருக்கு அழைத்துக் கொண்டு போ.”
மறு பேச்சுப் பேசாமல் மணம் செய்து கொண்டான் அரதன குப்தன். இந்த கல்யாணத்திற்கு சாட்சிகள், அங்கே இருந்த ஒரு வன்னி மரமும், கிணறும், சிவலிங்கமும்தான்.
இருவரும் மதுரை வந்து சேர்ந்தார்கள். கணவனோடு இன்னொரு பெண்ணைக் கண்டு கோபம் கொண்ட முதல் மனைவி, கொதித்துப் போனாளாம். இரத்னாவளி நடந்த விஷயங்களை, உள்ளது உள்ளபடியே சொல்ல, அதைக் கொஞ்சமும் நம்பவில்லையாம் முதல் மனைவி.
வழக்கு சபைக்கு வந்தது. திருமணம் நடந்ததற்கு சாட்சி என்ன என்று எல்லோரும் கேட்டார்கள். “மனிதர்கள் யாரும் இல்லை. சிவலிங்கமும், வன்னிமரமும், கிணறும்தான் சாட்சி” என்று கூறினாள் இரத்னாவளி.
முதல் மனைவி கேலியாக கேட்டாளாம் இப்படி ஒரு கேள்வி:
“ஓகோ! அந்த சிவலிங்கம் இங்கே வந்து சாட்சி சொல்லுமா?”
கூடி இருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்களாம். கூனிக்குறுகிப் போன இரத்னாவளி, கைகூப்பி அழுதாள், தொழுதாள். கண்களில் கண்ணீர் வடியக் கதறினாளாம் இரத்னாவளி.
“ஈசனே!இது என்ன சோதனை? இப்போது எனக்காக இங்கு சாட்சி சொல்ல வருவது யார்? சொல் இறைவா சொல்.”
இரத்னாவளி பெரும் குரல் எடுத்துக் கதறி அழ, அந்த அழுகையை நிறுத்தியது அங்கே கேட்ட ஒரு குரல்:
“நாங்கள் சாட்சி.”
குரல் வந்த திசையில் கூட்டத்தினர் அனைவரும் திரும்பிப் பார்க்க. ஈசன் அங்கே எழுந்தருளி நின்றாராம்!
“ஆம். இவர்கள் திருமணம் நடந்தது உண்மைதான். இரத்னாவளி கல்யாணத்துக்கு சாட்சியாக, கல்யாணம் நடந்த இடமான திரும்புறம்பயத்தில் இருந்த கிணறும், வன்னிமரமும், இலிங்கமும், இன்று முதல், இந்த மதுரை கோவிலில், என் சந்நிதிக்கு ஈசான்ய மூலையில் ‌சாட்சியாக இருக்கும்”
என்று சொல்லி மறைந்தாராம் ஈசன். பார்த்தவர் அனைவரும் பரவசப்பட்டுப் போனார்களாம்.
இப்போதும், மதுரையில் சுவாமி சன்னதிக்கு வெளிப்பிரகாரத்தில் சிவன் சன்னதி மூலையில், வன்னி மரம், கிணறு, சிவலிங்கம் ஆகியவை இருக்கிறது.
கும்பகோணத்திலிருந்து 9 கி.மீ. தூரத்தில் உள்ளது திரும்புறம்பயம். கும்பகோணத்திலிருந்து சாட்சி சொல்ல மதுரை சென்றதால் “சாட்சி நாதர்” என்றும் “சாட்சிநாதசுவாமி” என்றும் பெயர் கிடைத்ததாம் திரும்புறம்பயம் கோவில் சிவனுக்கு.
திருஞானசம்பந்தப் பெருமான் விஷம் தீண்டிய வணிகனை மீட்க பாடிய பதிகம்
(இழந்ததை திரும்பப் பெற, நாக தோஷம் நீங்க, தடைபட்ட திருமணம் இனிதே நடைபெற ஓத வேண்டிய பதிகம்!)
சடையாய்! எனுமால்; “சரண் நீ!” எனுமால்;“விடையாய்!” எனுமால்; வெருவா விழுமால்;மடை ஆர் குவளை மலரும் மருகல்உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
சிந்தாய்! எனுமால்; “சிவனே!” எனுமால்;“முந்தாய்!” எனுமால்; “முதல்வா!” எனுமால்;கொந்து ஆர் குவளை குலவும் மருகல்எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,பிறை ஆர் சடையும், உடையாய்! பெரியமறையார் மருகல் மகிழ்வாய்! இவளைஇறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளைமெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்னமணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
பலரும் பரவப்படுவாய்! சடைமேல்மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!புலரும்தனையும் துயிலாள், புடை போந்துஅலரும் படுமோ, அடியாள் இவளே
வழுவாள்; “பெருமான்கழல் வாழ்க!” எனாஎழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
எரி ஆர் சடையும், அடியும், இருவர்தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!மரியார் பிரியா மருகல் பெருமான்!அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
வயஞானம் வல்லார் மருகல் பெருமான்உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே!
Also, read

Ashtavakra Gita in Tamil – அஷ்டாவக்ர கீதை


Ashtavakra Gita in Tamil
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
நம்மில் பெரும்பாலோர் அமைதியையும் ஆனந்தத்தையும், ஒரு சிலர் உண்மையையும் தேடி அலைபவர்கள், ஆனால் அந்த ரகஸியம் எங்கே இருக்கிறது என்றே தெரியாமல்! ஒரு சிலரே ரகஸியத்தைத் தேடும் தானே அந்த ரகஸியம் என்பதையும் உணர முயல்கிறார்கள். இந்த அடிப்படை ரகஸியத்தை அறிந்துக் கொள்ளும் முயற்சியின் வெளிப்பாடாகத்தான் நம் வாழ்க்கைப் பாதை  அமைகிறது.
ஆன்மிகம் என்பது நம் உண்மையான இயல்பு (சத்) நிலையை உணர வழிகாட்டும் பாதை. இந்த முயற்சியில் நமக்கு வழிகாட்டிகளாக அமைந்துள்ள வேதங்களின் சாராம்ஸங்களை, பிரம்ம தத்துவங்களை கண்மூடித்தனமாக ஏற்றுக்கொள்வது தேவையில்லை, உணர்ந்து ஏற்றுக்கொள்வது சிறந்த வழி. உபநிஷத்துக்கள் இந்தக் கருத்தைதான் பல யுகங்களாக வலியுறுத்தி வருகின்றன.
தன் உண்மை நிலையை உணரத் துடித்த ஒரு மன்னனுக்கு அவரது இளம் குரு ஒரு அற்புத அரிய தத்வ போதனையைத் தந்தார். இதற்காக அந்த மன்னன் பல்வேறு இன்னல்களைத் தாங்கி, தன்னை வறுத்திக்கொண்டு, காத்திருந்து பெற வேண்டியிருந்தது. யார் அந்த மன்னன்? யார் அந்த குரு? என்ன தத்வம் அது?
ஜனகன் (ராமாயண நாயகி சீதா தேவியின் தந்தை) ஒரு நேர்மை தவறாத மன்னன். மிதிலையின் சக்கரவர்த்தி. ராஜரிஷி. சகல சாஸ்த்ரங்களைக் கற்ற பண்டிதன். சனாதன தர்மங்களை கடைபிடித்து ராஜபரிபாலனை செய்துவந்தான். மக்கள் ஆனந்தமாக வாழ்ந்தனர். இந்த மன்னன் வாயிலாக ஒரு அபாரமான தத்துவத்தை உலகத்துக்கு அளித்தார் இவரின் குரு அஷ்டாவக்ர மாமுனி. இது ரிக் வேதத்தின் சாரமான மாண்டூக்கிய உபநிஷத்தில் வெகு அழகாக விவரிக்கப்பட்டுள்ளது. உண்மை என்றால் என்ன என்பதன் நிதர்சன தத்வத்தை மனித குலத்துக்கே விளக்கும் முதல் காவியம் இது.
ஜனகன் ஒரு நாள் தன்னை மறந்து கற்பனை உலகில் சஞ்சரித்துக் கொண்டிருந்தபோது ஒரு சேவகன் ஓடி வந்து ஒரு அதிர்ச்சி தரும் செய்தியைச் சொன்னான். மிதிலை நாட்டை கைப்பற்ற அண்டை நாட்டு அரசன் ஒருவன் படையோடு வந்து விட்டான் என்பதுதான் அது. ‘மன்னா, போருக்காக நம் படைகள் தயார் நிலையில் உள்ளது. நீங்கள் வந்து தலைமை ஏற்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்’ என்றான் சேவகன். குழம்பிப் போன ஜனகனுக்கு ஒன்றும் புரியவில்லை. ‘போரா? இது எப்படி சாத்தியம்? எனக்குத்தான் எதிரிகளே இல்லையே, வந்திருக்கும் எதிரி யார்?’
இருந்தாலும் சுதாரித்துக்கொண்டு போருக்குத் தயாரானான். கடும் போர் நிகழ்ந்தது. எதிரி மிக பலசாலி, திறமைசாலி. போரில் ஜனகன் தோற்றான். வென்ற மன்னன் ‘இந்த நாடு இப்போது எனக்குச் சொந்தம். ஜனகா நீ நல்லவன் அதனால் உன்னைக் கொல்லாமல் விடுகிறேன். ஆனால் நாடு கடத்துகிறேன். எல்லாவற்றையும் விட்டு வெளியேறு’ என்று ஆணையிட்டான். தரும நெறி தவறாத ஜனகன், தோல்வியை ஏற்று நாட்டை விட்டு வெளியேறினான். தனக்கு நேர்ந்த அநீதியை எண்ணிப் பொருமினான். செல்லும் இடம் தெரியாது அலைந்தான். ஒரு காட்டில் தஞ்சம் புகுந்தான். மனச்சோர்வில் புத்தி தடுமாறியது. உண்ண உணவின்றி அலைந்து மயங்கி விழுந்தான்.
மயக்கம் தெளிந்தபோது, ஒரு காட்டுவாசி கும்பலிடம் தான் சிக்கிக் கொண்டுள்ளதை உணர்ந்தான். அவர்களுக்கு ஜனக மன்னனை அடையாளம் தெரியவில்லை. வேறு மொழி பேசினார்கள். புரியவில்லை. வயிறு நிறைய உணவு தந்து மன்னனை ஒரு பலிபீடத்தில் கட்டி நரபலி இடுவதற்கு தயாரானார்கள். ஜனகன் எவ்வளவு மன்றாடியும் அவர்கள் மசிவதாக் தெரியவில்லை. கொடூரமான முகத்தைக் கொண்ட ஒருவன் ஒரு பெரிய கத்தியைக் கொண்டுவந்து ஜனகன் தலைமேல் நிறுத்தி வெட்டுவதற்கு ஓங்கினான். மரண பயத்தில் ஜனகன் கண்களை மூடிக்கொண்டு உரக்க ‘ஐயோ, காப்பாற்ற யாருமே இல்லையா?’ என்று ஓலமிட்டான்.
அடுத்த க்ஷணம் விழித்துப் பார்த்தால், தான் தன் அரண்மனையில்  கட்டிலில் இருந்து கீழே விழுந்து கிடப்பதையும், தன்னைச் சுற்றி தன் சேவகர்கள் கவலையுடன் நிற்பதையும் கண்டான். முதலில் தான் உயிருடன் இருப்பதை உறுதி செய்துகொண்டான். அட, இவ்வளவு நேரம் தான் கண்டது கனவா? அல்லது நிஜமா? அப்படியென்றால் எது நிஜம்? இப்போது எதிரே பார்ப்பது என்ன, சற்று முன் கனவில் பார்த்தது என்ன? எது உண்மை?’ என்று தன் மனதுக்குள் குழம்பிப் போனான். தன் மந்திரிகளை அழைத்துத் தன் அனுபவங்களை விவரித்தான். ‘எது உண்மை?’ என்று அனைவரையும் கேட்டான். யாருக்கும் பதில் தெரியவில்லை. ‘மன்னனின் இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் எவருக்கும் பரிசு அளிப்பதாக அறிவிக்கப்பட்டது. பலர் வந்தனர். ஜனகனை திருப்திப்படுத்தக் கூடிய வகையில் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
மிதிலையின் அருகில் உள்ள ஒரு காட்டில் வாழ்ந்து வந்தார் கஹோத முனி. வேத சாஸ்திரங்கள் கற்றவர். எளிய குருகுல ஆசிரமம் நடத்தி வந்தார். மகப்பேறு வேண்டி தவம் இருந்து புத்ர வரம் பெற்றார். மனைவி சுஜாதா கருவுற்றாள். கஹோத முனி தன் சீடர்களுக்கு பாடம் சொல்லித்தரும் போது சுஜாதாவும் அருகில் இருப்பாள். அவள் கருவில் இருக்கும் சிசுவும் இந்தப் பாடங்களை உன்னிப்பாகக் கேட்டு வந்தது. பரமேஸ்வரன் அருளால் உருவான தெய்வீகக் கருவல்லவா அது, ஞானத்தில் ஜொலித்தது. தன் தந்தை சொல்லித்தரும் பாடத்திலேயே தவறுகளைச் சுட்டிக்காட்ட ஆரம்பித்தது. ஒருநாள் வெகுண்டு போன தந்தை, தனக்கு பிறக்கபோகும் மகவு என்றுகூட பாராமல், ‘அஷ்ட வக்ரங்களோடு’ பிறக்க சாபமிட்டார்.
அஷ்ட வக்ரங்களோடு (உடலில் எட்டு கோணங்கள்) பிறந்த குழந்தைக்கு ‘அஷ்டாவக்ரன்’ என்ற காரணப் பெயரே நிலைத்தது. மனிதர்களில் உள்ள அஷ்ட வக்ரங்களை களைவதற்கு உதவி செய்து வந்ததால் தெய்வப் பிறவியான இவருக்கு அஷ்டாவக்ரர் என்ற புனைப்பெயர் வந்தாகவும் சில புராணங்களில் கூறப்படுகிறது. பெயர் இதுவானாலும் தந்தையை விட சிறந்த புத்திமானாக விளங்கினான் சிறுவன் அஷ்டாவக்ரன். இந்த நிலையில் ஏழ்மையில் வாடிய கஹோத முனி, ஜனக மன்னனின் சந்தேகத்தைப் பற்றிக் கேள்விப்பட்டு, அதைத் தீர்த்து அவன் தரும் பரிசை பெற எண்ணி மிதிலை சென்றார். அங்கே அவரும் தோற்று சிறைச்சாலைக்குச் செல்லவேண்டியாகிவிட்டது.
நாட்கள் பல சென்றன. சென்ற கணவன் நெடுநாளாகியும் திரும்பவில்லையே எனக் கவலையுற்ற சுஜாதா, தன் மகன் அஷ்டாவக்ரனை தன் தந்தையைத் தேட அனுப்பினாள். தன் தந்தையின் நிலையை ஞானத்துள் உணர்ந்த அஷ்டாவக்ரன் மிதிலைக்குச் சென்று ஜனகனின் சந்தேகத்தை தான் தீர்ப்பதாக அறிவித்தான், இதற்கு இரண்டு நிபந்தனைகளையும் விதித்தான். “மன்னன் தன்னை குருவாக ஏற்றுக்கொள்ளவேண்டும் என்றும், சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்” என்பதே இந்த நிபந்தனைகள்.
வயது குறைந்து இருந்தாலும் இவ்வளவு திறமையுடன் பேசும் சிறுவனைக் கண்டு அசந்து போன ஜனகன், அஷ்டாவக்ரனை தன் குருவாக மனதார ஏற்றுக்கொண்டான். கடும் நிஷ்டைகளோடும், நிபந்தனைகளோடும் இந்தப் புதிய குரு-சிஷ்ய பாரம்பரியம் தொடங்கியது. உண்மையை உணரத் துடித்த மன்னன் பல இன்னல்களை ஏற்று, தன்னை வருத்திக் கொண்டு தன் இளம் குருவிடம் பாடம் கற்றான்.
அஷ்டாவக்ரனும் ஜனகனும் பரிமாறிக்கொண்ட கேள்வி பதில்கள்தாம், காலத்தால் அழியாது இன்றும் நம்மிடையே ஆன்மிக பாரம்பரியத்தின் மகுடமாக ஜொலித்துக்கொண்டிருக்கிறது. இளம் குரு மாண்டூக்ய உபநிஷதத்தை போதித்தான். தற்போது நம்மிடையே இருப்பதாகக் கருதப்படும் 108 உபநிஷத்துக்களிலேயே மாண்டூக்ய உபநிஷத்துதான் சிறியது. பன்னிரெண்டு ஸ்லோகங்களை மட்டுமே கொண்டது. ஆனால் மனிதனின் அனுபவ நிலைகள் பற்றிய அடிப்படைத் தத்துவங்களை மிகத் தெளிவாக இந்த உலகிற்கு அளித்துள்ளது இந்த உபநிஷத்து. முதல் முறையாக, இந்த உபநிஷத்துவில் விவரிக்கப்பட்டுள்ள இந்த ப்ரபஞ்சத்தையே ஆட்டிப்படைக்கும் ‘ஓம்’ என்ற பிரணவ மந்த்ரத்துக்கும் மனித உயிர்களுக்கும் இருக்கும் நெருங்கிய பந்தம் பற்றிய விளக்கம் அளித்தார் குரு அஷ்டாவக்ரர். ஜனகனின் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் மட்டுமன்றி இந்த மனித குலமே பயன்பெற அவர் ஒரு கீதையையே படைத்துள்ளார்.

ஜனகனின் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் அஷ்டாவக்ரர் சொல்லித்தந்த பதில்கள் இதோ:
மனிதன் மூன்று நிலைகளில் ஏற்படும் அனுபவங்கள் வழியாக தன்னை சுற்றியுள்ள உலகை தெரிந்துகொள்கிறான். முதல் நிலை விழித்திருப்பது. இது ‘விஸ்னவார’ நிலை. நாம் விழித்திருக்கும்போது நம் ஐம்புலன்கள் மற்றும் மனம் வழியாக நாம் உணரும் அனுபவங்கள். (இதற்கு பிரதிக்க்ஷை அனுபவம் என்று பெயர்).
அடுத்தது கனவு நிலை (இது ‘தேஜச’ நிலை). இந்த நிலையில் ஐம்புலன்கள் வழியாகத் தோன்றும் அனுபவங்கள் அடங்கி விடுகின்றன. மனம் மட்டும் செயல் படுகிறது. மனத்திரையில் பிரதிபலிக்கும் கனவிலும் நமக்கு ஒரு புதிய உலகம் தெரிகிறது. பல விஷயங்களை உணர்ந்து அனுபவிக்க முடிகிறது. ஆனால் கனவு தெளிந்தபின், நாம் விழித்தெழும்போது கனவில் கண்டவை அனைத்தும் மறைந்து விடுகின்றன.
மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலை. (இது ‘பிரக்ஞ’ நிலை). இங்கே ஐம்புலன்களும் மனமும், எண்ணங்களும், புத்தியும் அடங்கிவிடுகின்றன. இந்த நிலையில் நமக்கு என்ன நடந்தாலும் தெரிவதில்லை. நம் உடலையும் கனவுலகையும் விட்டு விலகி நிற்கிறோம். இந்த நிலையிலிருந்து நம்மை தட்டி எழுப்பி மீண்டும் முதல் நிலைக்கு கொண்டுவருவது தெய்வீக சக்தி.
முதல் மூன்று நிலைகளையும் கவனித்து வரும், இந்த மூன்று நிலைகளையும் அனுபவத் தோற்றங்களை ஒளிர்வித்து உணர்த்தும் ‘சாட்சி’ இது. இதுவே ஆத்மன். எப்பொழுதும் ஆழ்ந்த அமைதி நிலையில், ஸூர்யனாக, ஸ்வயப் பிரகாச ஜோதியாக ஒளிர்ந்து, உடல், மனம், எண்ணம், புத்தி ஆகியவைகளை ஒளிர்வித்துக் கொண்டிருக்கும் ஆத்ம ஜோதி. பரப்பிரம்மம். இதைத்தான் உண்மையான ‘நீ’ என்று புரிந்துகொள்ளவேண்டும் என்று ஜனகனுக்கு விளக்கம் அளித்தார்.
அஷ்டாவக்ர முனி தொடர்ந்தார். ‘ஜனகா, உண்மை சொரூபமான ஆத்மனாகத்தான் இந்த மூன்று நிலைகளிலும் ஒளிர்விக்கப்படும் அனுபங்களை உணர்கிறாய். உனக்குள் ஆத்மன் இல்லை. ஆத்மனுக்குள்தான் உடல், மனம், எண்ணம், புத்தி சேர்ந்த கலவை ஒளிர்ந்து உலக அனுபவங்களை உணர்கிறது. ஆகவே ஐம்புலன்கள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ அல்லது உன் மனம், எண்ணங்கள், கற்பனைகள் வழியாக நீ உணரும் அனுபவங்களோ, அதைபற்றிய ஞாபகமோ அல்லது கனவுலகில் நீ உணரும் அனுபவங்களோ எதுவும் நிலையானது அல்ல. இவை அனைத்தும் அனுபவங்களின் அடிபடையில் தோன்றும் தோற்றங்கள். தோன்றி மறைபவை. அவை உண்மை அல்ல. ஆத்மன் ஒன்றுதான் உண்மை. நீ பார்க்கும் இந்த உலகையே ஒளிர்விக்கும் பிரம்மன். ஆத்மனை உணரும்போது உன் உண்மை சொரூபத்தை உணருகிறாய். உன்னைப் படைத்தவனை உணருகிறாய்’.
இந்த உண்மையை உணர இன்னுமொரு ஒரு ரகஸ்யத்தை சொல்கிறேன். நான் விளக்கிய அனுபவ நிலைகளைக் குறிக்கும் ஒரு சொல்லை தவ நிலையில் த்யானிக்கும் போது நீ ஆத்மனை உணரத் தொடங்கலாம். அதுதான் ‘ஓம்’. இந்தச் சொல்லில் நான்கு சப்தங்கள் உள்ளன. அ, உ, ம், அஹ. கடைசி சப்தம் (சப்தமே அல்ல, ஆழ்ந்த அமைதி) பரிசுத்தமான, பூர்ண நிலையை குறிக்கிறது. அனைத்து சப்தங்களையும் தன்னுள் அடக்கியது. இது ஆதி-அந்தம் இல்லா நிலை. அதுதான் ஆத்மன், உண்மையான ‘நீ’. முதல் சப்தம் விழித்திருக்கும் நிலையையும், இரண்டாவது கனவு நிலையையும், மூன்றாவது ஆழ்ந்த உறக்க நிலையையும், நான்காம் நிலை ஆழ்ந்த அமைதியில் ஜோதியாக ஜொலிக்கும் ‘ஆத்ம சொரூபமான உண்மையான உன்னையும்’ குறிக்கிறது.
நீ கேட்ட கேள்விக்கு விடை இதோ. நீ நேரடியாக உன் புலன்களின் வழியாக உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை, கனவில் நீ உணரும் அனுபவங்களும் உண்மை இல்லை. இந்த அனுபவங்களை உணர்விக்கும், ஆத்மஜோதியான ‘நீ’ ஒன்றே உண்மை. ஓங்கார தத்துவத்தை நீ புரிந்துகொண்டால், உன்னையும், உன்னைப் படைத்தவனையும்  புரிந்து கொள்ளலாம் என்று அஷ்டாவக்ர முனி ஜனக சக்ரவர்த்திக்குப் போதித்தார். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்த இந்த சம்பவம் மனித சரித்திரத்தில் ஒரு புதிய சகாப்தத்தை உருவாக்கியது. இந்த ‘தன்னிலை உணரும்’ தத்துவத்தை அருளிய அஷ்டாவக்ர மாமுனியையும் அவரது சீடன் ஜனகனையும் இந்த உலகம் என்றென்றும் மறக்க முடியாது.
அஷ்டாவக்ர மஹாகுருவின் உதவியால் ஜனகராஜன் தன்னை, தன் உண்மை சொரூபத்தை உணரமுடிந்தது. அதனால் அவரை இந்த உலகம் அறிந்துகொள்ள முடிந்தது. இதைப்போல பின்னர் வந்த குருமார்கள் ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் போன்றோர் தங்கள் குருமார்களின் உதவியால் தங்களை உணர்ந்ததால் இந்த உலகிற்கு வேத சாராம்ஸங்களைத் தர முடிந்தது. பல தத்துவ போதனைகளைத் தர முடிந்தது. பல பாரம்பரியங்களை உருவாக்க முடிந்தது. அவர்களை இந்த உலகம் மறக்கவேமுடியாது. மனிதகுல சரித்திரத்தில் நீங்கா இடம் பெற்ற இவர்கள் நம் வழிகாட்டிகள்.
இந்த உண்மை நிலையை, ‘தன்னை’ தானே அறிவது சுலபமான காரியம் அல்ல. உணர்வுகளையும், உள்ளத்தையும், எண்ணத்தையும் பிராணத்தையும் அடக்கி, வேத சாஸ்திரங்களில் வரையறுக்கப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை கலந்த முனைப்புடன் முயற்சி செய்யவேண்டும். முன்காலத்தில் இருந்த குரு பாரம்பரியத்தில் குருமார்கள்  தத்துவ போதனைகளை மட்டுமே அளிப்பர். அவைகளை உணர வழிமுறைகளை சொல்லித்தருவர். ஆனால் சீடர்கள் இவைகளை உள்வாங்கி, தாமாகவே முயற்சி செய்து இந்த மெய்ஞான போதனைகளை உணரவேண்டும்.
கடும் தவம் இருக்க நேரிடும். இது சாதாரணமான காரியம் அல்ல. இதற்கு அவர்களின் பயிற்சி, முயற்சி, முனைப்பு, திறமைகளைப் பொறுத்தே பலன் கிட்டும். இதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். முயற்சி பலன் தராமலும் போகலாம். வாழ்நாளும் முடிந்து போகலாம். அது அந்தக் கால நடைமுறை. ஒரு பிரம்மகுருவின் அருளாசி இருந்தால் மட்டுமே இது சாத்தியம் என்கிறார் மாண்டூக்கிய உபநிஷத்துக்கு பின் காலத்தில் விளக்கம் அளித்த ஸ்ரீ ஆதிசங்கராச்சாரியார்.
ஜனகனைப் போல உண்மைநிலையை உணரத் துடிக்கும் பக்தர்களுக்கு, கிடைக்கரிய இந்த தெய்வீக அருளாசி வழங்கவே காத்திருக்கிறார் பிரம்மகுரு ஸ்ரீ கோடிதாத்தா ஸ்வாமிகள்.

Also, read

கனவில் பாலை கண்டால் என்ன பலன்? பால் பொங்கினால் என்ன நடக்கும்?




நித்ய சுபம் வழங்கும் : கனவில் பாலை கண்டால் என்ன பலன்? பால் பொங்கினால் என்ன நடக்கும்?

https://nithyasubam.in
https://facebook.com/nithyasubamin/

ஜாதக புத்தகம் : https://nithyasubam.in/astrology-pred
உங்களுக்கான ராசி கல் மோதிரம் : https://nithyasubam.in/gem-stone/
உங்களுக்கான ருத்ராக்ஷம் : http://nithyasubam.in/rudhraksham/
திருமண பொருத்தம் : https://nithyasubam.in/marriage-match

மேலும் பல பொருட்கள் / விவரங்கள் அடைய
https://nithyasubam.in

#anmigam #tamilpoetry #vishnupuram #aram #tamilwriters #tamilwriter #tamilquotes #tamilquotespage #tamilquotesforlife #tamilkavithai #tamilkavithaigal #tamilkavidhai #kavithai #kavithaigal #tamilpoem #tamilnovels #tamilbooks #tamilbooklovers #tamillyrics #tamilstatus #jeyamohanquotes #besttamilquotes #thathuvamquotes #tamilmotivation #tamillovers #tamilreaders #thathuvam #venmurasu #tamilpoet#godstory #godhistory #historicaltemple #tamilstory #anmigakathaigal #ancienttemple #mahalakshmijothidam #aanmegastory #anmeegastory #tirunelveli #arupadaiveedugal #jothidam #arupadaiveedu #putharapakiyam #murugandevotionaltamilsongs #murugansongs #murugantemples #nellaitemple #anmigastorytamil #devotionalsong #whatsapp #whatsappstatus #anmeegathagaval #aanmeegam #anmeegam #aanmeegathagaval #palani #siruvapurimurugan #whatsapptamilstatus #samipattuintamil

மயில் ஜோதிடம்,
kp system astrology,
peacock astrology,
1 number rasi palan,
1 rasi palan,
4 number rasi palan,
5 number rasi palan,
7 number rasi palan,
6 thethi piranthavargal,
7 number rashi,
9 number rasi palan,
9 ennil piranthavargal

source

காமாக்னியை அழிக்கும் ஞானாக்னி – Jnanagni destroys Kamagni


Jnanagni Destroys Kamagni in Tamil
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
ஒரு அக்னியை இன்னொரு அக்னியால்தான் அழிக்கமுடியும் முடியும். என்னங்க இது? அக்னியை நீரால் அல்லவா அழிக்கமுடியும் என்று இவ்வளவு நாள் நினைத்துக் கொண்டிருந்தோம்? எப்படி ஒரு அக்னி இன்னொரு அக்னியை அழிக்கும்?
ஆம் நண்பர்களே, ஒரு அக்னியைக் கொண்டுதான் இன்னொரு அக்னியை அழிக்கமுடியும்! வேதங்கள் இதைத்தான் மிடுக்கோடு எடுத்துச் சொல்கிறது. பண்டைய காலத்தில், மனித வாழ்க்கையில் அக்னிக்கு (நெருப்பு) மிகுந்த முக்கியத்துவம் அளிக்கபட்டிருந்தது. அக்னியை குறிக்க பல சொற்றொடர்கள் இருந்து வந்துள்ளதிலிருந்து இதன் முக்கியத்துவத்தை நாம் புரிந்துகொள்ள முடியும். நெருப்பை அதன் பயன்பாட்டின் பல்வேறு தன்மைகளுக்கு ஏற்ப அக்னி, தகன, ஜ்வாலன, சப்தார்சி, பாவக, ஜாதேவேதஸ், ஹுடாசன, வாஹினி போன்ற சொற்கள் அந்தக் காலத்தில் நடைமுறையில் இருந்துள்ளதை புராணங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
ரிக் வேதத்தில், அக்னியை ‘ஓம் அக்னிம்லே புரோஹிதம்’ என்று வர்ணிக்கப்பட்டுள்ளது. ‘யக்ஞத்தை நடத்தும் புருஷர்களுக்கு ஹிதமாக இருக்கும் அக்னியே, உனக்கு அளிக்கப்படும் யக்ஞ வஸ்துக்களை இவர்கள் சார்பாக பரமனிடம் கொண்டு சேர்’, என்பது இதன் பொருள்.

பகவத்கீதையில் அக்னிக்கு என்று தனி மரியாதை தரப்படுகிறது. அஞ்ஞானத்தை அழிக்கும் ஞானாக்னி (ஞான அக்னி) என்று அக்னி வருணிக்கப்படுகிறது. இச்சைகளால் உருவாகும் அக்னி காமாக்னி (காம அக்னி). இது நம் ஐம்புலன்களால் உருவாவது. ஆசைகள், மோகம், ஏக்கம், சிற்றின்பதாகம் போன்றவைகளை உள்ளடக்கியது. அந்த ‘காமாக்னி’யை அழிக்கவல்ல ஒரே மாற்று அக்னி ஞானாக்னி என்று கீதை உபதேசிக்கிறது.
ஐம்புலன்களின் வேட்கைகளுக்கு பலியாகும் நபர்களுக்கு காமாக்னி கொழுந்துவிட்டு எரிக்கிறது. இதை சாதாரணமாக அணைக்கவோ, தணிக்கவோ, அழிக்கவோ முடியாது என்பதை அர்ஜுனனுக்கு விளக்குகிறார் ஸ்ரீ கிருஷ்ணர்:
‘ஆவ்ருதம் ஞானமேதென, ஞானினோ நித்யவாரீனகாம ரூபெய கௌண்டேய, துஷ்பூரே அனலேனச’
‘காமம் என்கிற அணைக்கமுடியாத, தணிக்கமுடியாத இச்சைகளான அக்னியால் உன்னுடைய உண்மையான ஞானம் மூடி மறைக்கப்பட்டுள்ளது. உனக்குள் எரிந்துகொண்டிருக்கும் இந்த காம அக்னிதான் உன் முதல் எதிரி’ என்பது இந்தப் பாடலின் பொருள்.
காம ரூபமாக கொழுந்துவிட்டு எரியும் அக்னியை ‘அனலம்’ என்கிறது இந்த பாடல். அலம் என்றால் ‘போதும்’. அனலம் என்றால் போதாது. எப்போதும் தொடர்ந்து எரிந்துகொண்டே இருப்பதற்காக தனக்கு வேண்டிய எரிபொருள் (இச்சைகள்) தேடி அலையும் விசித்ர அக்னி இந்த காமாக்னி. தணிக்கமுடியாத தாகம் கொண்ட கொடூர அக்னி என்பதைதான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்படி எச்சரிக்கிறார்.
‘அனலம்’ என்கிற இந்த வார்த்தை ‘தணியாத, தணிக்க வழிவிடாத நெருப்பை’ வர்ணிக்கும் ஒரு அழகான சொல். கொழுந்து அணைந்தாலும், தன்னுள் எப்போதும் தழலை (தணல்) தக்கவைத்துக் கொண்டிருக்கும் நெருப்பு இது. எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்துகொண்டு மீண்டும் எரியக் கூடிய வகையில் எரிபொருளான இச்சைகளை தூண்டி, தன் தாகத்தை தீர்த்துக் கொள்ளும் காம அக்னி இது.
நம்முடைய இச்சைகளைப் பற்றி இதை விடக் கடுமையாக எடுத்துச் சொல்லமுடியாது. எவ்வளவு முறை புலன்வழி இச்சைகளைப் பூர்த்தி செய்துக் கொண்டாலும் மேலும் மேலும் தொடர்ந்து நம்மை இச்சைபடத் தூண்டும் தன்மை கொண்டது காம அக்னி. ஒருபோதும் திருப்தி தராதது. பழைய இச்சைகள் தீரும் முன்னரே புதிய இச்சைகளை வரிசையில் தயார் நிலையில் நிற்க வைத்துக் கொள்ளும் தன்மை படைத்தது.
அறுசுவை உணவை உண்டு பசி என்கிற இச்சையை தற்காலிகமாக தீர்த்துக் கொண்டாலும், இன்னும் சிறிது நேரத்தில் மீண்டும் பசி தலை தூக்கி நம்மை உணவை தேடச் சொல்கிறது அல்லவா? இதைப் போலத்தான் அனைத்து வகையான இச்சைகளும், ஒரு முறை ஓரளவு தீர்ந்தாலும் மீண்டும் மீண்டும் பல வகையான இச்சைகளை நாடும் எண்ணங்களை தூண்டச் செய்கிறது. எவ்வளவு முயன்றாலும் காம அக்னியை தற்காலிகமாகவே நாம் திருப்திப்படுத்த முடிகிறது. அதன் தழல் அடுத்த இச்சைகளைக் கொண்டு தூண்டப்பட்டு மீண்டும் கொழுந்து விட்டு எரியக் காத்திருக்கிறது. இந்த காம அக்னிக்கு எரிபொருள் தந்து அந்த குறிப்பிட்ட இச்சையை தற்காலிகமாகப் அவ்வப்போது பூர்த்தி செய்துக் கொண்டாலும் இதிலிருந்து விடுதலை பெறுவதே பெரும்பாடு. நம் வாழ்கையின் மிகப் பெரிய சவால்.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், சில அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் இச்சைகள் வேறு, சந்தோஷத்துக்காக ஏற்படுத்திக் கொள்ளும் இச்சைகள் வேறு என்பதை புரிந்துகொள்ளவேண்டும். முக்கியமில்லாத இச்சைகள் பூர்த்தி செய்யப்படாவிட்டாலும் பெரிய பிரச்சனை ஒன்றும் ஏற்படுவதில்லை. ஆனால் முக்கியம் என்று கருதி அது பூர்த்தி செய்யாமல் போகும்போது காம அக்னியில் மறைந்திருக்கும் தழல் உயிர் கொண்டு அந்த இச்சையை மேலும் தூண்டுகிறது. அந்த நேரத்தில் அந்த இச்சைக்கு நாம் அடிமை ஆகிவிடுகிறோம்.
இந்த அடிமைத்தனத்திலிருந்து எப்படி மீள்வது? எப்படி இந்த காம அக்னியை அழிப்பது? சரி, முழுமையாக அழித்துவிடலாம் என்று அதிகமாக பல்வேறு இச்சைகளை எரிபொருளாக அளித்தாலும் தீக்கொழுந்து அதிகமாகி, சிறிது நேரத்தில் அடங்கினாலும், அடித்தளத்தில் சதா விழித்துக்கொண்டிருக்கும் தழல் அடங்குவதில்லையே. இச்சைகளில் அதிக நாட்டம் இருக்கும் நபர்களுக்கு இந்த நிலை பெரும் பாடாக அமைவதை நாம் கண்கூடாகக் காணமுடிகிறது. இத்தகைய நபர்களுக்கு முக்கியம் என்பதற்கும், சந்தோஷத்துக்கும் என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போகிறது. தொடர்ந்து அனுபவிக்கும் இச்சைகள் முக்கியமாக இல்லாவிட்டாலும் சிறிது காலத்தில் ‘முக்கியமாகி’ விடுகிறது. இதுவே நாளடைவில் பழக்காமாகி சதா இச்சைகளை தொடர்ந்து நாடுகின்றனர் இவர்கள். இதைத்தான் ‘போதை’ என்கிறோம். திருப்தி செய்ய முடிவதில்லை. அதை தவிர்க்கவும் முடிவதில்லை.
ஆக, காம அக்னியை அழிக்கவேண்டுமானால் என்ன செய்ய வேண்டும்?
முதலில் காம இச்சைகளுக்கு அடிப்படைக் காரணிகளை இனம் கண்டுகொள்ள வேண்டும். அனைத்து இச்சைகளுக்கு ஆதி காரணம் ‘நம்முடைய அடிப்படை இயல்பை தெரிந்துகொள்ளாத அறியாமை’ என்று ஆணித்தரமாக கூறுகிறது வேதாந்தம்.
நாம் நினைத்துக் கொண்டிருக்கும் இந்த உடல், மனம், எண்ணங்கள் கொண்ட கலவை அல்ல நாம். இவைகள் அனைத்தையும் உயிர்விக்கும், ஒளிர்விக்கும் நம் அடிப்படை ஸ்வரூபமான தெய்வீகத்தை அடையாளம் கண்டு உணர்வதுதான் நம் வாழ்க்கைத் தத்துவம் என்பது அனைத்து வேதங்களின் சாராம்ஸம். முழு நிறைவும், அமைதியும், ஆனந்தமும் கலந்த ஒரு அதிசயக் கலவையை நாம் சதா தேடி அலைகிறோம். இந்த நிலையை உணரும் வரை நமக்குள் நிறைவு இல்லை என்ற எண்ணம் மேலோங்கி நிற்கிறது. இந்த நிறைவில்லா நிலையை பூர்த்தி செய்துகொள்ளவே நாம் மேலும் வேண்டும் என்று தேடுகிறோம். அமைதி இல்லை என்று நினைக்கும்போது, ‘குறைந்த பட்சம் இச்சைகளையாவது பூர்த்தி செய்துக் கொண்டால் மட்டுமே ஒரு வகை அமைதி, ஆனந்தம்’ என்ற நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம்.
நம்முடைய இந்தத் தவறான அணுகுமுறைக்குக் காரணம் என்ன?
நிறைவும், அமைதியும் ஆனந்தமும் வெளி உலகில் இருப்பதாக நினைக்கிறோம். அதனால் அவைகளை நம் உடல் மனம் எண்ணங்கள் கொண்ட கலவை வழியாக வெளியே தேடுகிறோம். உண்மையில் இவை அனைத்தும் கலந்த தெய்வீகக் கலவையே நம் உண்மை சொரூபம் என்பதை உணராமல்; ஆன்மீகத்தை, தெய்வீகத்தை தேடி அலையும் சாதாரண மனிதப் பிறவிகள் நாம் என்று நினைத்துக் கொண்டு தெய்வீகத்தை வெளியில் தேடுகிறோம். உண்மையில் தெய்வீக பிறவிகளான நாம் மனித உருவில் நம் உண்மை சொரூபத்தை உணர முடியாமல் காமாக்னிக்கு இரையாகி தொடர்ந்து சிக்கல்களில் சிக்குண்டுத் தவிக்கிறோம்!
இச்சை என்கிற காமாக்னி மாயை வடிவில் நம் உண்மை சொரூபத்தை மறைத்துள்ளது என்கிறது வேதாந்தம். நம் உண்மையான சொரூபத்தை புரிந்துகொள்ளும்போது, அந்த மெய்ஞானம், ஞான அக்னியாக உத்பவித்து காம அக்னியை அழிக்கிறது. தெய்வீக ஜோதியான இந்த ஞான அக்னி, காம அக்னியில் எரிந்துகொண்டிருக்கும் எரிபொருளை முழுமையாக எரித்து அழித்து விடுகிறது. அப்போது காமத் தழலுக்கு இடமே இல்லாமல் போகிறது. காம அக்னி அழியும்போது, மாயை விலகுகிறது. “நமக்குள்ளே மறைந்து இருக்கும் முழுநிறைவு, பூர்ண அமைதி, எல்லையில்லா ஆனந்தம் (சத் சித் ஆனந்தம்) ஆகிய மூன்றும் கலந்த கலவையே நாம்” என்கிற உண்மை நிலையை உணரமுடிகிறது. இதுவே ஆத்ம ஞானம்.
‘அந்தர்ஜோதிஹி பஹிர்ஜோதிஹி, பிரத்யக்ஜோதிஹி பராபரஹஜோதிர்ஜோதிஹி, ஸ்வயம்ஜோதிஹி, ஆத்மஜோதிஹி ஷிவோஸ்யஹம்’
‘ஸ்வயம்ஜோதியாக, ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியாக விளங்கும் ஆத்மஜோதி, நம் உள்ளே மறைந்திருக்கும் ஜோதியை உத்பவிக்கச் செய்து, அந்த ஞான ஜோதியை உலகெலாம் பரவசெய்து பராபரத்துடன் ஒன்றசெய்யும் சிவம் நான்’ என்று ஞான அக்னியைப்பற்றி, ஸ்ரீ சங்கரர் தான் எழுதிய ‘பிரம்ம ஞானாவளி’ என்கிற நூலில் வருணித்துள்ளார்.

நண்பர்களே, இந்த ஞானத் தழலை பரம்பொருளிடம் வரமாகப் பெற்ற ரிஷிகளும், ஞானிகளும், மஹாசித்தர்களும், இந்த மானுடம் உய்ய, தங்கள் தீட்சை வழியாக ஞான அக்னியை தங்களிடம் ஆசீர்வாதம் பெரும் ஒவ்வொரிடமும் உத்பவிக்கின்றனர் என்கிறது நம் புராணங்கள். இந்த தெய்வீக பரிமாற்றத்தை அனுபவிக்கும் வெகு சிலரே இதை உணர்கின்றனர். சென்னப்பமலையில் ஐக்கியம் கொண்டுள்ள அருவகுரு ஸ்ரீ கோடிதாத்தாஸ்வாமிகள் இந்த ஞான குரு பரம்பரையில் உதித்தவர். இந்த ப்ரம்மகுரு தன் ப்ரம்ம ஞாலத்தால் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு ஞான அக்னி வரப்ராப்தி அளித்துவருகிறார் இந்த உலகம் தோன்றிய நாள் முதல்.
இந்த ஞான அக்னிதான் ‘ப்ரம்ம ஞானஜோதி’. அனைத்துக்கும் ஆதியான ப்ரம்ம ஸ்வரூபம் என்பதை உணர்தல். இதுவே பிறவிப்பயன். வாழ்வின் மிக உயர்ந்த நிலை. தைதீரிய உபநிஷத் குறிப்பிடும் ‘ப்ரம்மவித்’, ஆத்மஞானக் கல்வி. இதை வரமாகப் பெறுபவன் அடைவதற்கரிய உயர்நிலையை அடைகிறான். (‘ப்ரம்மவித் அப்நோதி பரம்’). ஜோதிகளுக்கெல்லாம் ஜோதியான மஹாகுருவரால் மட்டுமே இந்த வரத்தை அருளமுடியும். அவரால் மட்டுமே பிரம்மஜோதியை உத்பவிக்கமுடியும். இந்த உண்மைத் தத்துவத்தை விளக்கவே, இந்த பிரம்மகுரு இந்த உலகின் 13வது ஜோதிர்லிங்கத்தை சென்னப்பமலையில் உத்பவிக்கச் செய்துள்ளார். காமக்னீயை அழித்து ஞானாக்னியை உணரத் துடிக்கும் அனைவருக்கும் இந்த குரு கிடைக்கரிய ஞான பொக்கிஷம்.
Also, read

Only Spiritual Ethics can Protect Young People in Tamil


Only Spiritual Ethics can Protect the New Generation
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
செல்வத்தை மட்டுமே குறியாகத் தேடும் கலாசாரத்தை ஏற்று உலகமே வேகமாக மாறிவரும் நிலையில் வேத சாஸ்திரங்களில் சொல்லப்பட்டுள்ள ஒழுக்க நெறிமுறை பண்புகள் இந்த நவீன காலத்துக்கு எப்படி பொருந்தும்? என்று என்னைக் கேட்டார் ஒரு இளம் நண்பர். தொடர்ந்து, ‘இது தற்போது இளைய தலைமுறையினர் எழுப்பும் கேள்வி’ என்றார்.
முக்கியமான கேள்வி. பதில் சொல்கிறேன், கவனமாகக் கேள், என்றேன். காலம் காலமாக நம் முன்னோர்கள் பின்பற்றி பயனடைந்து வந்த வேத சாஸ்திரங்களுக்கு, இந்த பாரம்பரிய கலாசார வழிகாட்டிகளுக்கு, ‘இக்கால நடைமுறைக்கு ஒவ்வாத ஒழுக்க நெறிமுறைகள்’ என்று முத்திரை குத்தி, அவைகளை ஏற்றுக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ நம் இளையத் தலைமுறையினர் தயங்குகிறார்கள். அனைத்து கலாசாரங்களும் சங்கமித்து ‘உலகமயமாகி’ வரும் இந்தக் காலத்தில் வேதமாவது, பண்டைய கலாசாரமாவது! என்று அவர்கள் எள்ளிநாகையாடுவது நம் கண்கூடாகக் காணும் ஒரு சோக நிகழ்வு.
உலகத்துக்கே ஆன்மிக வாழ்வியல் தத்துவத்தை பறைசாட்டிய இந்த மண்ணில், வேகத்தையும் சுயநலத்தையும் பொருளாதார உயர்வை மட்டுமே மையமாகக் கொண்டும், தனிமனித-சமுதாய தர்ம ஒழுக்கநெறிமுறைகளுக்குப் புறம்பாக இயங்கும் இந்த நவீன வாழ்வியல் மாய தத்துவத்தை, நம் இளைய தலைமுறையினர் ஏற்றுக்கொண்டது துரதிருஷ்டம். இந்த நிலைக்கு நாம் அனைவரும் ஒருவகையில் காரணம் என்று நினைக்கிறேன். உண்மையான ஆன்மிகக் கல்வியையும், வாழ்வியல் பண்புகளையும் அவைகளுக்குள்ள நெறிமுறை மேம்பாடுகளைப் பற்றியும் அவர்களுக்கு சொல்லித்தரும் வாய்ப்புகளை ஏற்படுத்தித்தர தவறிவிட்டோம். பெற்றோர்கள் என்ற வகையில் நாமும் தெரிந்து கொள்ளும் வாய்பை இழந்து விட்டோம். இப்போதாவது இந்தத் தவறை உணர்ந்து இந்த நிலைமையை சரி செய்ய முயல்வது நாம் அனைவரின் சமுதாயக் கடமையாகும்.
முதலில் சில விஷயங்களைத் தெரிந்துகொள்வோம். வேதங்கள் சூத்திரங்களாலும், பாடல்களாலும், செய்யுள் நடைகளாலும் ஆனவை. காலங்களைக் கடந்தது. இந்த உலகைப் படைத்த பரம்பொருள் அருளியது. தனிமனித, சமுதாய வாழ்வியல் தத்துவக் களஞ்சியம் இவை. எப்போது அருளினார்? உயிரினங்கள் தோன்றியபோது!
அது எப்போது? விவரிக்கமுடியாத ஒரு காலத்தில்! மனிதன் யோசிக்கத்தொடங்கும் முன்!! பல ‘யுகங்களுக்கு’ முன்னால் என்று சொல்லலாம். அக்காலத்தில் வந்த ரிஷிகள், முனிவர்கள், சித்தர்கள் போன்றவர்கள் வேதங்களுக்கு விளக்கம் அளிக்க எளிய நடையில் பாசுரங்களை (உபநிஷத்துக்கள்) எழுதினர். அவைகளில் ஒரு பகுதி குருகுல (குரு-சிஷ்ய பாரம்பரிய) வழியில் தலைமுறைகளுக்கு வழிகாட்டியாக இன்றும் நம்மிடையே வலம் வந்துகொண்டிருக்கிறது. பெரும்பாலானவை பாதுகாக்கப்பட முடியவில்லை. காலப்போக்கில் அழிந்துபோனது.
வேதங்களின் சாராம்சம் வேதாந்தம். இது என்ன? நாம் அனைவரும் தெய்வத்தால் படைக்கப்பட்டவர்கள். தெய்வீகமானவர்கள். ‘நம் வாழ்வின் பயனே இந்த தெய்வீகத்தை உணர்வதுதான்’. அதே போல மற்ற உயிர்களில் உள்ள அதே தெய்வீகத்தையும் உணர்வது. நம்மை உணர்ந்தால், உலகையும் அதன் பின்னணி உண்மையையும் உணரலாம். நம்மைப் படைத்த பரமனை உணரலாம். பிறவிப் பயனை அடையலாம். இந்த உன்னத நிலையை உணர்வதற்கான வழிமுறைகளைத்தான் வேதாந்தம் சொல்கிறது.
நம் ஐந்து புலன்கள் வழியாக நமக்கு ஏற்படும் அனுபவங்களின் அடிப்படையில் இந்த உலகை தெரிந்து கொள்ளும் வழி ஆரம்ப நிலை (பிரதிக்க்ஷை அனுபவம்). ஏற்கனவே ஏற்பட்ட அனுபவங்களின் அடிப்படையில் நம் புத்தியைப் பயன்படுத்தி சில அனுபவங்களைப் பகுத்தறிவது அடுத்த நிலை (பரோக்க்ஷ அனுபவம்). இந்த இரண்டு அனுபவ நிலைகளும் இல்லாமல், இந்த இரண்டு நிலைகளியும் தாண்டி சில அனுபவங்களை (ஐம்புலன்களையும், புத்தியையும் பயன்படுத்தாமல்) நேரடியாக உணர்வது மூன்றாம் நிலை (அபரோக்க்ஷ அனுபவம்). இந்த மூன்று நிலைகளும் நம்மையும், நம்மை சுற்றி நடக்கும் இந்த உலகைப் பற்றியும் அதையும் தாண்டி நம் எல்லோரையும் இயக்கும் மஹா சக்தியை உணரக்கூடிய வழிகள் என்று வேதாந்தம் கூறுகிறது. அத்வைதம், விசிஷ்டஅத்வைதம், த்வைதம் ஆகிய மூன்று சித்தாந்த வழிமுறைகளில் உணரலாம் என்பது பிற்காலத்தில் வேதங்களுக்கு விளக்கம் அளித்த குருமார்களான ஸ்ரீ சங்கரர், ஸ்ரீ ராமானுஜர், ஸ்ரீ மத்வர் ஆகியோரது கருத்து. இதைத்தான் உண்மையான ஆன்மிகம் என்று வகைப்படுத்தினாலும் இது நம்மையும் நம்மைப் படைத்தவனையும் தேடும் உண்மையான ‘தேடல்’. தவம், பக்தி, மந்த்ரங்கள், ஜபம், யோகம், யாகம், ஹோமம், பூஜைகள், குரு சேவை போன்றவை இந்தத் தேடலுக்கான சில வழிகள்.

ஆனால் இது எளிதல்ல. இங்கேதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது.
நாம் பார்க்கும், உணரும் இந்த உடல் வெறும் தசையாலும், எலும்பாலும், ரத்தாலும் மட்டுமே ஆனது அல்ல. இதற்குள்ளே இன்னும் நான்கு கூடுகள் (கோஷங்கள்) உள்ளன. இந்த உடல் ‘அன்னமய கோஷம்’. உணவால் ஆனது. அடுத்த அடுக்குகளாக உடலை இயக்கக்கூடிய ப்ராணமய கோஷம், எண்ணங்களையும் உணர்வுகளைக் கொண்ட ‘மனோமய கோஷம்’, தேவை-தேவையில்லாதவைகளை முடிவு செய்யும் (புத்தி) ‘விஞ்ஞானமய கோஷம்’. இவைகளுக்கும் உள்ளே ஆதியாக, அமைதியும் ஆனந்தமும் தாண்டவமாடும் ‘ஆனந்தமய கோஷம்’. இந்த ஐந்து கூடுகளையும் விட்டு விலகி, இவைகளின் நடவடிக்கைகளை ஒளிர்வித்து, இந்த ஐந்து கோஷங்களின் வழியாக உலக அனுபவங்களை அடையாளம் காட்டுவது சதா ஸ்வயப்பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் ஆத்மன். இதுவே களங்கமில்லாத, அழிவில்லாத, நம் உண்மையான சொரூபம்-பரப்ரம்மம். இது வேதங்கள் சொல்வது.
இந்த உன்னத நிலையை உணர, ஆயிரக்கணக்கான ஆண்டுகள் தவம் இருந்து உணர்பவர்களும் உள்ளனர். ஒரு ப்ரம்ம குருவின் உதவியுடன் ஒரே நொடியுள் உணர்ந்தவர்களும் உள்ளனர். பரப்ரம்ம சொரூபத்தை உணர வேதாந்தம் பல நெறிமுறைகளை, ஒழுக்கப் பண்புகளை, வாழ்வியல் தத்துவங்களை பட்டியல் போட்டு காட்டுகிறது. அவைகளில் முற்றும் உணர்ந்த ஒரு குருவின் துணையோடு இந்த ஆன்மிகத் தேடலை மேற்கொள்வதே எளிமையான வழி. யோசித்துப் பாருங்கள். நாமே வேத சாராம்ஸங்களை கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டு உணர்ந்து தெளிவடைவது என்பது இந்தப் பிறப்பில் சாத்தியமா என்று கூட நமக்குத் தெரியாது.
இப்படி கஷ்டப்பட்டு எதற்கு உணரவேண்டும்? நமக்குள் மறைந்து இருக்கும் இறைநிலையை உணருவதால் என்ன பயன்? இத்தகைய வேத நெறிமுறைகள் எளிமையானவை அல்ல. நம் மேல் நம்மைப் படைத்தவனுக்கு அக்கறை இருந்தால், இந்த உணர்வை அவரே தரட்டுமே? நாம் ஏன் தேடிப்போகவேண்டும்? மேலும் தற்போது இவைகளை கற்றுத்தரவோ யாரும் இல்லை, கற்றுக்கொள்ளும் பக்குவமும் நேரமும் நமக்கு இல்லை. அதையும் தாண்டி, தற்கால சூழ்நிலைகளுக்கு ஏற்றவகையில் இவை எப்படி பயனளிக்கும் என்பதுதான் இப்போதுள்ள இளைய தலைமுறையினரின் கேள்வி.
ஏன் அவர்கள் இப்படிக் கேட்கிறார்கள்? எதார்த்தம் என்று நினைத்து குதர்க்கவாதிகளாகி தங்களை கெடுத்துக்கொண்டு வருகின்றனர். காரணம் மேலை நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள இன்றைய ‘கல்வி’ அவர்களை நிலை தடுமாறவைத்துள்ளது. இயல்பான தார்மீக சிந்தனைகள் திசை திருப்பப்பட்டு, தாங்கள் யார் என்று தெரிந்துகொள்ளவோ தங்களுக்குள் நற்பண்புகளை வளர்த்துக்கொள்வதோ அவர்களுக்கு அவசியம் இல்லை என்று அவர்களை நினைக்கத் தூண்டுகிறது. இந்த நவீனக் கல்வியும் தவறான தொழில்நுட்பத் தகவல் சாதனங்களும் அவர்களுக்கு வேகத்தையும், சுயநலத்தையும், பொருளீட்டுவதை மட்டுமே சொல்லித்தருகிறது. இதற்காக மட்டுமே அவர்களைத் தயார் செய்கிறது. அவர்களில் புதைந்துள்ள தெய்வீகச் சிந்தனைகளை, அஹிம்சை தத்துவங்களை சிதைக்கிறது. இதற்கு ஒத்தாசையாக இங்கே நிலவும் அரசியல் அமைப்புகள் இந்த நிலைமையை மேலும் சீரழிக்கின்றன. இளைஞர்கள் தங்கள் பாரம்பரிய நடை, உடை, பாவனைகளையும் தங்களின் இயல்பான தார்மீகச் சிந்தனைகளையும் துறந்து தங்களை ஹிம்ஸித்துக்கொள்வதோடு மற்றவர்களை ஹிம்ஸிப்பதிலும் தவறில்லை என்று தங்களை மேலும் முட்டாள்களாகவும் முரடர்களாகவும் வளர்த்துக் கொள்கின்றனர். இதில் வறட்டு கௌரவத்தையும், அந்தஸ்தையும், சுயமரியாதையையும் கலந்து கொண்டு அல்ப சந்தோஷப்பட்டுக் கொள்கின்றனர். தெளிவான ஆன்மிக சிந்தனைக்கு தங்களை தயார் செய்துகொள்ளும் நிலை தவறி, முன்னோர்கள் விட்டுச்சென்ற தார்மீக வாழ்க்கை நெறிமுறைகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவமில்லாத கோழைகளாக வலம் வந்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நவீன கல்வி முறை, காலம் காலமாக கட்டிக் காத்துவந்த சமுதாய, கலாச்சார தார்மீக நெறிமுறைகலிருந்து அவர்களை விலக்கி, ஒரு செயற்கையான, அதர்ம பண்புகளை போதிக்கிறது. மாறி வரும் குடும்ப சூழல், சமுதாய மாற்றங்கள், இலக்கை அடைய எதையும் செய்யலாம் என்ற மேலைநாட்டு கலாச்சார தத்துவங்கள் அவர்களைத் தவறான வழியில் செல்லத் தூண்டுகிறது. குழம்பி நிற்கும் அவர்களைத் தங்கள் கலாச்சாரத்தையே, தங்கள் இயல்பான நற்குணங்களையே, பண்புகளையே மறக்கச் செய்து, தங்களையும், இந்த சமூகத்தையுமே எதிர்க்கும் அசட்டு தைரியத்தையும், வரட்டு ஆணவத்தையும் தந்து அவர்களை சுயநலப் பேதைகளாக்கியுள்ளது.
அவர்கள் தன்னம்பிக்கை இழந்து, உண்மையை ஏற்றுக்கொள்ளும் தைரியம் இல்லாமல் பரிதவித்து வருகின்றனர். கோவில்களிலும் தெய்வ நம்பிக்கையையும் இழந்து தங்களுக்குள்ளேயே அல்லல்படுகின்றனர். இந்த நிலை அவர்களை தங்களையும் தங்களைச் சுற்றி உள்ள அனைத்தையுமே சந்தேகிக்க வைக்கிறது. சுயநலமே பிரதானமாகி மற்றவர் நலன் அவர்களுக்குத் தேவையில்லாததாக்கியுள்ளது. காலங்காலமாக கட்டிக்காத்த குடும்ப உறவுமுறை, கலாசாரம் அவர்களுக்கு மரியாதை இல்லாத சுமையாகிவிட்டது. ஆன்மிகத்தை விட்டும் தங்களை விட்டுமே வெகு தூரம் விலகிப் போய்விட்ட இவர்கள் ‘ஆன்மிகம் என்பது தமக்குச் சம்பந்தமில்லாதது, தேவையில்லாதது, இந்தகக் காலத்துக்குப் பொருந்தாதது’ என்ற முடிவுக்கு வருவதற்கு இதுதான் காரணம்.

அவர்கள் தங்களின் தவறை உணர்ந்து தங்கள் இயல்பு நிலைக்கு திரும்ப அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு தரப்பட வேண்டும். ஆணித்தரமான ஆன்மிகம் கலந்த நன்னெறி போதனைகளைகளைக் கற்றுக் கொடுக்கவேண்டும். தங்களைப் பற்றி தெரிந்து கொள்ள அவர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு அளிக்கவேண்டும். உண்மையான வாழ்வியல் பண்புகளோடும் ஒழுக்க நெறிமுறைகளால் மட்டுமே அவர்களால் தங்களையும், இயல்பு நிலையான தெய்வீகத்தையும் உணர முடியும் என்பதை தெளிவு படுத்தவேண்டும். அப்போதுதான் அவர்கள் அனைத்து உயிர்களிடமும் தெய்வீகத்தை உணர முடியும்.
தன்னுள் இருப்பவனே அனைத்து உயிர்களிலும் இருக்கிறான் என்று உணர்வு வரும்போது அனைவரும் ‘தானே’ என்றல்லவா நினைக்கமுடியும்? இங்கே எப்படி ஏற்றத்தாழ்வு வரும்? சுயநலம் எங்கிருந்து வரும்? மற்றவர்களுக்கு தீங்கு நினைக்கவோ அதில் ஈடுபடவோ எப்படி இயலும்? இதுவல்லவோ உண்மையான சமத்துவம்? மனிதநேயம்? இதுவல்லவோ உண்மையான உயர்நிலை வாழ்வியல்? வேதங்களில் சொல்லியுள்ள தார்மீக வழி முறைகளையும், உண்மையான மனித கலாச்சாரத்தையும், ஒன்பது வகையான ஒழுக்கப் பண்புகளையும் கற்றுக்கொண்டு, அமைதியையும் ஆனந்தத்தையும், எண்ண சுதந்திரத்தையும் பெற வாய்ப்பு பெறலாம் என்ற கருத்தை அவர்கள் உணரச் செய்யவதே நாம் அவர்களுக்கு செய்யும் பெரிய உதவி.
‘வேதங்கள் காலத்தைக் கடந்தவை. எந்தக் காலத்திற்கும் பொருந்தும் மனிதகுல வழிகாட்டிகள். நவீன காலத்துக்கும் ஏற்ற உண்மையான வாழ்க்கைத் தத்துவங்களை வேதங்களால் மட்டுமே தர முடியும்’ என்ற கருத்து அவர்கள் மனதில் ஆழமாக பதியவேண்டும். ‘நாம் ஒழுக்கப் பாதையில் செல்லும்போது மட்டுமே நமக்கு பாதுகாப்பும், நிம்மதியும், குறையற்ற மன நிறைவும், ஆரோக்யமும் ஐஸ்வரியமும், அமைதியும் உண்மையான ஆனந்தமும் கிடைக்கிறது. இந்த நிலை மற்றவர்களுக்கும் ஒரு முன் உதாரணமாக அமையும். ‘என் ஒழுக்கப் பாதை மற்றவர்களையும் நல்வழிப் படுத்தும்’ என்ற தத்துவம் அவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும். ‘இந்த உலகத்துக்கு தேவையானது தன்னையும் தெய்வத்தையும் புரிந்துகொள்ளும் ஆன்மிக வழி. அது ஒன்றுதான் உண்மையான செல்வத்தையும், அமைதியையும், ஆனந்தத்தையும், பாதுகாப்பையும், வளர்ச்சியையும் தனி மனிதனுக்கு மட்டுமல்லாது உலக சமுதாயத்துக்குமே அளிக்கவல்லது. இது ஆன்மிகத்தால் மட்டுமே சாத்தியம்’ என்ற மகத்தான உண்மையை உணரவைக்க வேண்டும். வேத போதனையான ‘அவித்ய காம கர்ம’ என்பது தவறான கல்வி, விவேகமில்லாத இச்சைகளிலும் கர்ம வினைகளிலும் அவர்களை மேலும் சிக்க வைக்கும் என்ற உண்மையை அவர்கள் உணரச்செய்ய வேண்டும்.
தாங்களாகவே அழிவைத்தேடி தங்கள் வாழ்க்கையை வேகமாக கரைத்துக்கொண்டு வரும் இவர்கள் மீது அக்கறை கொண்டு, அவர்கள் தங்களின் உண்மையான ஆன்மிகச் சொரூபத்தை உணரச் செய்வது நம் பொறுப்பு. இன்றிலிருந்து நம் குடும்பத்தில் உள்ள அனைவரும் குழந்தைகளிடம் இக்கருத்துகளை பற்றி பேச ஆரம்பிக்கவேண்டும். கோவில்கள், புண்ணிய ஸ்தலங்கள், குரு ஆசிரமங்கள் போன்றவைகளுக்கு அவர்களை அழைத்துச் செல்ல ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். குருவருளின் முக்கியத்துவத்தையும் வேத சாஸ்திர நற்பண்புகளை பற்றியும் தொடர்ந்து அவர்களைக் கேட்கச் செய்யவேண்டும். வேத சாஸ்திரங்கள் அருளியுள்ள ஆன்மிகம் மட்டுமே அவர்களைச் செம்மை படுத்தக்கூடிய ஒரு அருமருந்து. இதனால் மட்டுமே தனிமனித ஒழுக்கமும், சமுதாய அமைதியும் வளர்ச்சியும் கிடைக்கும். குற்றங்கள் இல்லாமல் போகும். உண்மையான பேரானந்தத்தை இன்றைக்கும் என்றைக்கும் அனைவரும் உணரமுடியும்.
முதலில் நம்மை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். நமக்குள் புதைந்துள்ள பரப்ரம்ம சொரூபத்தை உணரவேண்டும். அதன் பலனை நம்மைச் சுற்றியுள்ள அனைவரும் குறிப்பாக இளையவர்கள் தெரிந்து கொள்ள ஒரு பெரிய இயக்கத்தைத் துவங்கவேண்டும். அதன் வழியாக ஆன்மிக கலாசாரத்தின் மஹிமையை, அதில் பெறப்படும் பரவாசத்தை, பாதுகாப்பை, நிம்மதியை, ஆழ்ந்த அமைதி நிலையை, ஆத்ம போதனையை உணரச் செய்யவேண்டும். இல்லாவிட்டால் அவர்களை இந்த நவீன மாய சித்தாந்தங்களிலிருந்து காப்பது கடினம். இந்த இளைஞர்களின் உதவியோடுதான் அடுத்தப் பல தலைமுறைகள் பண்பட வாய்ப்புள்ளது! இந்த தேசம் முன்னேற வாய்ப்புள்ளது! தான் கேட்ட விஷயங்களை அசை போடும் வகையில் இளம் நண்பர் ஆழந்த யோசனையில் மூழ்கிவிட்டார்.
Also, read

சொந்த வீடு அமைவதற்கு இந்த 2 விஷயத்தை மட்டும் பண்ணுங்க | www.nithyasubam.in




நித்ய சுபம் வழங்கும் : சொந்த வீடு அமைவதற்கு இந்த 2 விஷயத்தை மட்டும் பண்ணுங்க…

https://nithyasubam.in
https://facebook.com/nithyasubamin/

ஜாதக புத்தகம் : https://nithyasubam.in/astrology-pred
உங்களுக்கான ராசி கல் மோதிரம் : https://nithyasubam.in/gem-stone/
உங்களுக்கான ருத்ராக்ஷம் : http://nithyasubam.in/rudhraksham/
திருமண பொருத்தம் : https://nithyasubam.in/marriage-match

மேலும் பல பொருட்கள் / விவரங்கள் அடைய
https://nithyasubam.in

#anmigam #tamilpoetry #vishnupuram #aram #tamilwriters #tamilwriter #tamilquotes #tamilquotespage #tamilquotesforlife #tamilkavithai #tamilkavithaigal #tamilkavidhai #kavithai #kavithaigal #tamilpoem #tamilnovels #tamilbooks #tamilbooklovers #tamillyrics #tamilstatus #jeyamohanquotes #besttamilquotes #thathuvamquotes #tamilmotivation #tamillovers #tamilreaders #thathuvam #venmurasu #tamilpoet#godstory #godhistory #historicaltemple #tamilstory #anmigakathaigal #ancienttemple #mahalakshmijothidam #aanmegastory #anmeegastory #tirunelveli #arupadaiveedugal #jothidam #arupadaiveedu #putharapakiyam #murugandevotionaltamilsongs #murugansongs #murugantemples #nellaitemple #anmigastorytamil #devotionalsong #whatsapp #whatsappstatus #anmeegathagaval #aanmeegam #anmeegam #aanmeegathagaval #palani #siruvapurimurugan #whatsapptamilstatus #samipattuintamil

source

பிருகு உணர்ந்த உண்மை – Sage Bhrigu Perceived Truth in Tamil


Sage Bhrigu Perceived Truth
ப்ரிகு உணர்ந்த உண்மை
நன்றி: வெ நாராயணமூர்த்தி (கட்டுரையாளர் ஒரு ஆன்மிக நெறியாளர்)
நாம் யார்? நம்மைப் படைத்தவன் யார்? நம்முடைய உண்மை இயல்பு என்பது என்ன? நம் கண் எதிரே நாம் காணும் உலகம் என்பது என்ன? வேதங்கள் கூறும் தெய்வீகத்தை உணருவது எப்படி? தங்கள் வாழ்க்கையில் ஒரு முறையேனும் இந்தக் கேள்விகளைக் கேட்காத நபர்கள் வெகு குறைவு.
முன்னொரு காலத்தில் பிருகு என்கிற மாணவனும் இந்தக் கேள்விகளைக் கேட்டதோடு அல்லாமல் கேள்விகளுக்கான பதிலையும் முனைப்புடன் தேடினான். கேள்விகளையும் பதிலையும் முழுமையாக உணர்ந்து தெளிந்தபோது, இந்த உலகமே அவனை அறிந்தது.
குருகுல கல்வியில் தேர்ச்சி பெற்று, அடிப்படை கேள்விகளுக்கு விடை தேடி அலைந்தபோது, தன் தந்தையும், குருவுமான வருணமுனியை அணுகி தனக்கு உதவி செய்ய வேண்டினான். ஆர்வமுடன் ஆன்மீகத் தேடலை மேற்கொண்டுள்ள தன் மகனுக்கு முதலில் மனித உடல், உள்ளம், எண்ணம், புத்தி ஆகியவைகளுக்கு அடிப்படையாக விளங்கும் ‘ஐந்து கோச விவேக’ தத்துவ நிலைகளை விளக்கினார் குரு. (கோசம் என்பது கூடு).
ஐந்து புலன்கள் அடங்கிய உடல் அன்னத்தால் ஆனது. இது அன்னமயக்கோசம். அதை அடுத்து, உடலை இயக்கும் சூட்சும சக்தி ப்ராணமயக்கோசம். உடல், புலன்கள் வழியாக ஏற்படும் அனுபவ உணர்வுகளை உணர்த்துவது மனோமயக்கோசம். எண்ணங்களைத் தெளிவு செய்வது விக்னாயமயகோசம். இந்த நான்கு கோசங்களின் அனுபவங்களின் பின்னனியில் இருப்பது ஆனந்தமயக்கோசம். இந்தக் கோசங்கள் ஒன்றுடன் ஒன்று இயல்பாகவே பின்னிப் பிணைந்து சூட்சுமத்தில் இயங்குகின்றன. இது தெய்வீகக் கலவை. நாம் பார்க்ககூடிய அன்னமயக்கோசத்தைத் தவிர மற்ற கோசங்கள் மறைந்துள்ளன. உணரமுடியும் ஆனால் பார்க்க முடியாது, இந்த ஐந்து கோசங்களின் துணையோடுதான், நாம் நம் உடல் வழியாக நம் புலங்களுக்குப் புலன்படும் இந்த உலகம் மற்றும் கற்பனை அனுபவங்களைப் பெறுகிறோம்.
‘புலன்களான கண், காது, மனசு, வார்த்தைகள், உணவு மற்றும் ப்ராணன் ஆகியவை நீ கேட்ட உண்மையை உணர்ந்து கொள்வதற்கு உதவி செய்யும் கருவிகள். இந்தக் கருவிகள் அனைத்தும் நீ அறிய விரும்பும் பரப்ரம்மத்திலிருந்து உருவானவை. அதிலேயே கரைந்து மீண்டும் உருவாகுபவை. ‘எதனிடமிருந்து உயிர்த்திரள்கள் தோன்றுகின்றனவோ, எதனால் அவை காக்கப்படுகின்றனவோ, முடிவில் எதைச்சென்று அடைந்து மீண்டும் தோன்றுகின்றனவோ அதுவே பரப்ரம்மம். இதுவே நீ தேடும் தெய்வீகம். இதை அடைய கடும் முயற்சியை மேற்கொள்ள வேண்டும். முனைப்புடன், நம்பிக்கையுடன் தேடினால் நீ தேடும் தெய்வீகத்தை அறிவாயாக. இந்தக் குறிப்புகளின் அடிப்படையில் உன் தேடலை மேற்கொள்’ என்று அறிவுரை வழங்கி ஆசீர்வதித்தார்.
வேத கல்வி பயின்ற பிருகு தன் குருவின் அறிவுரையை ஏற்றுத் தவம் புரியத் தொடங்கினான். முதலில் அன்னமயக்கோசத்தில் தொடங்கினான். உடல் கருவிகள் அனைத்தும் செயல்பட அன்னம் (உணவு) தேவை அல்லவா? உணவிலிருந்துதான் அனைத்து உயிர்களும் பிறக்கின்றன. உணவாலே வளர்கின்றன, உணவாலே மடிகின்றன. மீண்டும் உணவாலே பிறக்கின்றன. அந்தவகையில் உணவே தான் தேடும் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான். உடனே தன் குருவிடம் சென்று தான் உணர்ந்ததை எடுத்துரைத்தான். ‘ப்ரிகு, நீ யோசிக்கத் தொடங்கிவிட்டாய். மேலும் முயன்று பார்’ என்று மீண்டும் தொடர்ந்து தவம் செய்ய சொல்லியனுப்பினார்.
ப்ரிகு தன் தவத்தைத் தொடர்ந்தான். முனைப்புடன் தவம் செய்ய உதவுவது எண்ணங்கள் அல்லவா? அப்படிப்பார்த்தால் எண்ணங்களேதான் எல்லாம்! அனைத்தும் எண்ணங்களாலேயே தோன்றி, வளர்ந்து, மறைந்து, மீண்டும் தோன்றுகின்றன. ஆகவே இதுதான் பரப்ரம்மம். உடனே தான் உணர்ந்ததை தன் குருவிடம் விவரித்தான். குருவோ புன்னகைத்தார். மீண்டும் தவம் செய்யப் பணித்தார்.
ப்ரிகுவும் தவத்தைத் தொடர்ந்தான். இந்த முறை ப்ராண சக்திதான் பரப்ரம்மமாக இருக்க வேண்டும் என்று உணர்ந்தான். ஏனென்றால் ப்ராண சக்திதான் உயிர்களை உருவாக்குகிறது. ப்ராண சக்திதான் உயிர்களை காக்கிறது. ப்ராண சக்தி இல்லையென்றால் உயிர் வாழமுடியாது. ஆகவே ப்ராண சக்திதான் பரப்ரம்மம் என்ற முடிவுக்கு வந்தான். இதை தன் குருவிடமும் தெரிவித்தான். ப்ரிகுவின் முனைப்பையும் முயற்சியையும் மேலும் பாராட்டிய குரு அவனை மீண்டும் முனைப்புடன் தவம் செய்ய அனுப்பினார்.
மாணவன் ப்ரிகு தன் முயற்சியை விடவில்லை. பரப்ரம்மம் என்பது என்னவாக இருக்கும்? எது இந்த கேள்விக்கு விடை அளிக்கும்? கேள்வியையும் பதிலையும், அனைத்தையும் உணர வைப்பது ஞானம் அல்லவா? ஒரு வேளை ஞானம்தான் பரப்ரம்மமா? ப்ரிகு தன் குருவிடம் தான் உணர்ந்ததைக் கூறினான். மாணவனின் முன்னேற்றத்தை கவனித்த குரு, தவத்தை மேலும் தொடரச் சொன்னார்.
ப்ரிகு சிறிதும் சோர்வடையவில்லை. தன் முயற்சியிலிருந்து தளரவில்லை. மாறாக தன் ஆர்வம் அதிகமாவதை உணர்ந்தான். இந்த முறை இன்னும் முனைப்புடன், நம்பிக்கையுடன் ஆழமாக தவத்தில் இறங்கினான். தான் இதுவரை உணராத ஒன்று என்னவாக இருக்கும்? தன்னை மறந்து, இந்த உலகை மறந்து, முழுமையாக தவத்தில் மூழ்கினான்.
திடீரென்று இருள் விலகியது. இந்த முறை, தன்னையும், தன்னை சுற்றியுள்ள உலகையும் அனைத்தையும் தானாகவே, தன்னுள்ளே உணரமுடிந்தது. தன்னை உணர்ந்தபோது தமையனையும் உணர முடிந்தது. அனைத்து அனுபவங்களையும் உணரவைப்பது எது? அனுபவங்கள் வித்யாசமானாலும், அவைகளோடு கலக்காமல், அவைகளிருந்து விலகி நின்று, அனைத்து அனுபவங்களையும் ஒளிர்வீப்பது ‘உள்ளுணர்வு’. இது இல்லாமல் எந்த அனுபவமும் இல்ல. இதுவே சித், இதுவே சத் இதுவே ஆனந்தம். ஆத்மன். ப்ரம்மம். தெய்வீகம்.
ஆத்மனுக்குள்ளேதான் நம் உடல் தோன்றுகிறது. உடல் புலன்கள் வழியாக இந்த உலகம் தோன்றுகிறது. ஆத்மன் ஒன்றேதான் உண்மை. மற்றைவையெல்லாம் நாம் உணரும் தோற்றங்கள். இந்த ஆத்மன்தான் பரப்ரம்மம். இதுவே தன் உண்மை இயல்பு. இந்த ப்ரம்மம் இல்லாவிட்டால், எந்த அனுபவமும் இல்லை. அனுபவமில்லாம் எந்த உலகமும் இல்லை. ஆத்மனில்தான் அனைத்தும் தோன்றுகின்றன, வாழ்கின்றன, மறைகின்றன. இந்த உண்மை சொரூபமே பரப்ரம்மம் என்ற உண்மையை உணர்ந்தான் ப்ரிகு. அவனுள் இனம் புரியாத ஒரு ஆனந்தத்தை உணர்ந்தான். சத் சித் ஆனந்த நிலையே பரப்ரம்மம். இந்த ஆனந்த நிலையே அனைத்து உயிர்களின் உண்மை சொரூபம். உயிர்கள் ஆனந்தமாக உருவாகின்றன, ஆனந்தத்தை உணர வாழ்கின்றன, ஆனந்தமாக மடிகின்றன, மீண்டும் ஆனந்தமாக உருவாகின்றன என்ற உண்மை விளங்கியது.
இந்த உண்மையை தன் குருவிடம் விவரித்தபோது, அவர் அவனை ஆரத் தழுவிக்கொண்டார். ‘ப்ரிகு நீ உண்மையை புரிந்துகொண்டது மட்டுமல்லாமல், உணர்ந்து கொண்டது உன்னை உயர்த்திவிட்டது. ப்ரம்மத்தை உணர்ந்தவன் ப்ரம்மஞானி. ‘ப்ரம்ம விதாப்நோதி பரம்’. ப்ரம்மத்தை உணர்ந்தவன் மிக உயர்ந்த நிலையை, ப்ரம்ம நிலையை அடைகிறான். ப்ரம்மத்தோடு ஒன்றிப்போகிறான். ‘சத்யம், ஞானம், அனந்தம் ப்ரம்ம’. ப்ரம்மம் பரமானந்தம். அது ஒன்றே உண்மை (சத்யம்), அனைத்தையும் உணர்ந்தது (ஞானம்), அது ஒன்றே எல்லை இல்லாதது-கோடி (அனந்தம்). இதுதான் இந்த உலகின் மிக உயர்ந்த கல்வி.

வேதங்கள் இதை,
‘வேதாஹ மேதம் புருஷம் மஹாந்தம், ஆதித்யவர்ணம் தமசஸ்து பாரே, தாமேவ விதித்வா அதி ம்ருத்யோமேதி, நான்ய பந்தா வித்யதே அயனாய’ என்று வர்ணிக்கின்றன. அதாவது, சூர்யனைப் போல ஸ்வப்ரகாசமாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் ஆத்மன்தான் தன் சுய ரூபம் என்று உணர்பவனுக்கு இறப்பில்லை. இதை விட மிக உயர்ந்த கல்வி இந்த உலகில் வேறு இல்லை. இந்த உண்மையை உணர்ந்தவனுக்கு பிறப்பு-இறப்பு எதுவும் இல்லை. இன்பம்- துன்பம் எதுவும் இல்லை. சதா ஆனந்த நிலையில் சஞ்சரிக்கும் தெய்வீக நிலையை அடைகிறான். சர்வ சாந்த நிலை. அனைத்தையும் கடந்த நிலை. இதுவே வாழும்போதே முக்தி. ப்ரம்மானந்த நிலை. இந்த நிலையை நீ அடைந்து விட்டாய்’ என்று வாழ்த்தி அனுப்பினார்.
இந்த உரையாடல் தைத்தீர்ய உபநிஷத்தில், ப்ரிகுவல்லி என்கிற அத்யாயத்தில் காணப்படுகிறது. இது யாரால் எந்தக் காலகட்டத்தில் எழுதப்பட்டது என்பது தெரியாது. ஒரு காலத்தில் தைத்ரி என்ற ஒரு பட்சி ரிஷிகள் உபநிஷத் உண்மைகளை தங்களுக்குள் பரிமாறிக் கொண்டபோது கேட்டுக்கொண்டு, பின்னர் மனித இனம் மேம்பட்ட இந்த இந்த உண்மையை மற்ற முனிவர்களுக்கு தெரியப்படுத்தியதாகவும் அந்தப் பதிவே பின்னர் தைத்தீர்ய உபநிஷத் என்று அழைக்கப்பட்டதாகவும் ஒரு புராணக் கதை கூறுகிறது.
தைத்தீர்ய உபநிஷத்தில் விவரிக்கப்பட்டுள்ள இந்த உரையாடல் ப்ரிகுவுக்கும் அவனது குருவுக்கும் நடந்த சாதாரண உரையாடல் அல்ல. பரப்ரம்மத்தை உணர தேவைப்படும் நிலைகளை, வழிமுறைகளை, பயிற்சிகளை, நிதர்சனமாக எடுத்துரைக்கும், கற்றுத்தரும் சாதனமாக இந்த உரையாடலை நாம் பார்க்கவேண்டும். அறியாமையில் தவித்த ஒரு சிறுவன், ப்ரம்ம ஞானத்தை உணர மேற்கொண்ட ஆன்மீகப் பயணம் இது.
நம் உண்மை ஸ்வரூபம் பற்றிய தெளிவு இல்லாமல் நம்மைப் பற்றிய ஒரு அடிப்படை புரிதல் இல்லாமல், உடல், உள்ளம் கொண்ட கலவையாக நம்மை கற்பனை செய்துக் கொண்டு, உடல்-உள்ளம் கலவை செய்யும் தவறுகள் எல்லாம் ‘நம்முடையது’ என்று ஏற்றுக்கொண்டு, அறியாமையில் உழன்று வருகிறோம். உண்மையில் நாம் தெய்வீகப் பிறவிகள் என்பதை மறந்து, தெய்வீகத்தை தேடி அலைகிறோம். ‘சம்சாரம்’ என்கிற சிக்கல்களில் கிக்குன்று அல்லல்படுகிறோம்.
முதலில் கண்ணுக்குப் புலப்படும் உடலிலிருந்து தொடங்கி, புலப்படாத சூட்சும கோஸங்களைக் கடந்து அனுபவ ரீதியாக ப்ரம்மத்தை உணர மாணவன் ப்ரிகு மேற்கொண்ட ஆர்வம், விடாமுயற்சி, தன்னம்பிக்கை, தவம், இவைகளின் பலனாக அவன் உண்மையை உணர்ந்த விதம் ஆகியவை நமக்கு ஒரு பெரும் வழிகாட்டியாக அமையவேண்டும். இதுவே தைத்தீர்ய உபநிஷத் நமக்குக் கற்றுத்தறும் பாடம்.
தன்னை உணர்ந்த ப்ருகுவை இந்த வையகமே உணர்ந்து பாராட்டுகிறது. சரித்திரம் படைத்த ப்ரிகு பிற்காலத்தில் சப்த ரிஷிகளில் ஒருவராக உயர்ந்து பல நூல்களை, குறிப்பாக ‘ப்ரிகு சம்ஹித’ என்கிற ஜோதிஷ நூலை மனிதகுல உயர்வுக்கு அளித்துச் சென்றதாக புராணங்கள் கூறுகின்றன.
Also, read