இரண்டு உயிர்களை காப்பாற்றிய ராஜ நாகம் – உண்மை சம்பவம்

Qries

– Advertisement –

பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்து ஒருவர் ஒரு நாயை வளர்த்துவந்தார். அந்த நாய் சில குட்டிகளை ஈன்றெடுத்தது. ஒரு நாள் தாய் நாயும் குட்டிகளும் விளையாடிக்கொண்டிருக்கையில் தவறுதலாக இரண்டு குட்டிகள் கிணற்றில் விழுந்துவிட்டது.

இதை கண்டு அதிர்ந்து போன தாய் நாய், என் பிள்ளைகளை யாரேனும் காப்பாற்றுங்கள் என்பது போல சத்தமிட்டு குலைக்கிறது. தன் முதலாளி இங்கு வரும்வரை குலைத்துக்கொண்டே இருக்கவேண்டும் அப்போது தான் தன்னுடைய குட்டிகள் காப்பாற்றப்படும் என்ற தீர்மானத்தோடு குலைப்பதுபோல அது குலைக்கிறது.
– Advertisement –

சிறிது நேரத்தில் தன் நாயின் சத்தம் கேட்டு அந்த நாய்க்கு சொந்தக்காரரும் அங்கு வந்து சேருகிறார். நாய் கிணற்றை பார்த்தே குலைப்பதால் அவர் கிணற்றை எட்டி பார்க்கிறார். உள்ளே இரண்டு நாய் குட்டிகள் அமர்ந்துகொண்டிருக்கிறது. அந்த குட்டிகளுக்கு அருகில் ஒரு ராஜ நாகம் படம் எடுத்து ஆடிக்கொண்டிருந்தது.

அந்த கிணற்றின் ஒரு பாதி கறையாகவும் மறுபாதி நீராகவும் இருக்கிறது. அந்த நாய் குட்டிகள் தெரியாமல் கூட நீரில் இறங்கிவிடக் கூடாது என்பதற்காக அந்த ராஜ நாகம் அவற்றை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது. சிறிது நேரத்தில் தீயணைப்பு துறையினர் அங்கு விரைந்து வருகின்றனர். அவர்கள் கிணற்றில் இறங்குவதை கண்ட ராஜ நகம் குட்டிகளை விட்டு நகர்கிறது.
– Advertisement –

கிணற்றில் இறங்கிய தீயணைப்பு வீரர்கள் அந்த நாய் குட்டியோடு சேர்ந்து ராஜ நாகத்தையும் பாதுகாப்பாக பிடித்தனர். பின் நாய் குட்டிகளை அதன் எஜமானிடம் ஒப்படைத்துவிட்டு அந்த ராஜ நாகத்தை பாதுகாப்பாக ஒரு காட்டில் விட்டனர்.
இதையும் படிக்கலாமே:உறவுக்குள் சண்டையா ? இந்த கோயிலிற்கு செல்லுங்கள் சரியாகிவிடும்
பஞ்சாப் மாநிலத்தில் நடந்த இந்த உண்மை சம்பவத்தை கேள்விப்பட்டு பலரும் ஆச்சர்யமுற்றனர். பிற உயிர்களை பார்த்து மனிதன் கற்றுக்கொள்ள இன்னும் பல விடயங்கள் இருக்க தான் செய்கிறது என்பதற்கு ஒரு மிக சிறந்த உதாரணம் இந்த நிகழ்வு.

– Advertisement –

Qries
Scroll to Top