இன்றைய ராசிபலன் – 02 மே 2024

இன்றைய ராசிபலன் – 02 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை அவசியம் தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்படக்கூடாது. வேலை செய்யும் இடத்தில் பிரச்சனை வந்தாலும், தொழிலில் பிரச்சனை வந்தாலும், சொந்த பந்தங்களுக்கு இடையே பிரச்சனை வந்தாலும் நிதானமாக யோசிக்கவும். முன் கோபத்தை காட்டாதீர்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். கூடுமானவரை புதிய முயற்சிகளை நாளை தள்ளி போடுவது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல விஷயங்கள் கைகூடி வரும். வீட்டில் தடைபட்டு வந்த சுபகாரிய பேச்சுக்கள் மீண்டும் தொடங்கும். காதல் கைகூடும். சண்டை போட்டுக் கொண்டிருந்த கணவன் மனைவிக்குள் பிரச்சனைகள் தீரும். வேலை செய்யும் இடத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று அன்பு வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். நீண்ட நாள் பிரிந்த உறவுகளோடு ஒன்று சேருவீர்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேரவும் வாய்ப்புகள் இருக்கிறது. குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். தொழிலில் புதிய முதலீட்டின் போது கவனமாக இருக்கவும். யாருக்கும் கடன் கொடுக்காதீங்க ஜாமீன் கையெழுத்து போடாதீங்க.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு என்று நினைத்தது நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சம்பள உயர்வும் சில பேருக்கு கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்களே நம்ப முடியாத நல்ல விஷயங்கள் நடக்கும். சில பேருக்கு எதிர்பாராமல் வரும் பரிசுப் பொருட்களின் மூலம் சந்தோஷம் இரட்டிப்பாகும். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். வீட்டில் பெரியவர்களின் ஆசீர்வாதம் கிடைக்கும். சில பேர் இன்று மாலை குடும்பத்தோடு வெளியிடங்களுக்கு செல்லவும் வாய்ப்பு உள்ளது.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிக்கள் பிடுங்கள் இருக்கும். எந்த பிரச்சனையையும் சமாளிக்கவே முடியாது. எதிரிகள் உங்களோடு போட்டி போட்டு பிரச்சனைகளை உண்டாக்குவதிலேயே குறியாக இருப்பார்கள். கொஞ்சம் கவனமாக இருந்து கொள்ளுங்கள். இன்று நிறைய குள்ளநரி வேலைகளை செய்ய வேண்டிய சூழ்நிலை இருக்கும். வேறு வழி இல்லை உங்களை காப்பாற்றிக் கொள்ள எதையாவது செய்து தான் ஆக வேண்டும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றி தரும். வேலை செய்யும் இடத்தில் நன்மை நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். தொழிலில் புதிய முதலீடுகளை செய்யலாம். முதலீடு செய்வதற்கு தேவையான கடன் தொகையும் சரியான நேரத்தில் கிடைக்கும். தாய் மாமன் உறவால் ஆதாயம் உண்டு. வாகனங்களில் செல்லும்போது கொஞ்சம் கவனமாக இருங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். நீண்ட நாட்களாக செய்ய முடியாத காரியங்களை இன்று கையில் எடுத்தால் சுலபமாக செய்து முடிப்பீர்கள். யோகம் நிறைந்த நாளாக இருக்கும். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும். அனாவசியமாக அடுத்தவர்களை உசுப்பேத்தும் படி கமெண்ட் பண்ணாதீங்க.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று ஓய்வு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். நிறைய வேலை இருக்கலாம், நீங்கள் செய்யும் தொழிலில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். ஆனாலும் எல்லாவற்றையும் தூக்கி ஒரு ஓரமாக வைத்துவிட்டு, நிம்மதியாக இருப்பீர்கள். நல்ல சாப்பாடு, நல்ல தூக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். எதையும் ஒரு கை பார்த்துக் கொள்ளலாம் என்ற தைரியம் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று பேராசை இருக்கக் கூடாது. உங்களுக்கு கிடைத்ததை வைத்து வாழப் பழகிக் கொள்ளுங்கள். அடுத்தவர்களுடைய வாழ்க்கையை ஒப்பிட்டு உங்களுடைய வாழ்க்கையையும் நிலைகுலைத்துக் கொள்ளக் கூடாது. நீங்கள் உண்டு, உங்கள் வேலை உண்டு என்று இருக்க வேண்டும். ஆடம்பர செலவு பக்கம் போகவே கூடாது. மனதை கட்டுப்படுத்தி வைத்துக் கொள்ளுங்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் பிரச்சனையில் இருந்து வெளி வருவீர்கள். அடுத்தவர்களுக்கு பணம் கொடுத்து உதவி செய்யும் அளவுக்கு உங்களிடம் நிதி நிலைமை உயர்ந்து இருக்கும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பு மரியாதையும் உயரும். தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பொன் பொருள் சேர்க்கையும் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சிரமங்கள் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பிரச்சனைகள் வரும். குடும்பத்தில் மூன்றாவது நபர்களால் பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எந்த விஷயத்திலும் பொய் சொல்லி சமாளிக்காதீர்கள். பிரச்சனை வந்தாலும் உண்மையை சொல்லுவது தான் நல்லது. மற்றபடி ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்திலும் முன்னேற்றம் இருக்கும் புதிய முயற்சிகள் வெற்றி தரும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். புதிய முதலீட்டை செய்யலாம். புதிய நண்பர்களின் சந்திப்பு நிறைய நல்ல அனுபவங்களை கற்றுக் கொடுக்கும். மேலதிகாரிகளின் தொல்லையிலிருந்து விடுபடுவீர்கள். உங்களுடைய திறமைகள் வெளிப்படும் நல்ல நாளாக இருக்கும்.

– Advertisement –

Qries
Scroll to Top