– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். புதுசாக வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த நல்ல காரியங்கள் இன்று நடக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப செலவுகள் உண்டாகும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் சரியாகும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று ஆக்கபூர்வமான விஷயங்கள் நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நிறைய முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். எல்லா இடங்களிலும் நல்ல பெயர் எடுப்பீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் சரியாகி ஒற்றுமை ஏற்படும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் எதிர்பார்த்ததை விட இரட்டிப்பு வருமானம் கிடைக்கும். அதை சரியான முறையில் செலவு செய்வதற்கு தயாராகிக் கொள்ளுங்கள். தேவையற்ற செலவுகளை குறைத்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் மாத இறுதியில் பிரச்சனைகளை சமாளிக்க முடியும். இல்லை என்றால் கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்போடு செயல்பட வேண்டும். எந்த ஒரு வேலையையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று வைக்கக் கூடாது. குறிப்பாக இல்லத்தரசிகள் வீட்டு வேலையில் பொறுப்புணர்வோடு நடந்து கொள்ள வேண்டும். வீட்டில் பெரியவர்கள் சொல்வதைக் கேட்டு நடக்கவும். யாரையும் எதிர்த்து பேச வேண்டாம். பொறுமையாக இருந்தால் இன்றைய நாளை சந்தோஷமாக கடந்து செல்ல முடியும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மனநிறைவான நாளாக இருக்கப் போகின்றது. தேவையற்ற சிந்தனைகளிலிருந்து வெளி வருவீர்கள். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் கிடைக்கும். நீண்ட தூர பயணத்தின் மூலம் நல்லது நடக்கும். மேலதிகாரிகள் உங்களுடைய பிரச்சனைகளை புரிந்து கொண்டு தேவைகளை பூர்த்தி செய்து வைப்பார்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தாலும் உதவி செய்ய நண்பர்களும் மேலதிகாரியும் இருப்பாங்க. உங்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொண்டு நடப்பார்கள். எந்த ஒரு வேலையாக இருந்தாலும் முன்கூட்டியே சரியான முறையில் பிளான் செய்து கொள்ளவும். ப்ளான் இல்லாமல் எந்த ஒரு காரியத்தையும் இன்று செய்ய வேண்டாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். பிரச்சனைகளை கண்டு பயப்பட மாட்டீர்கள். துணிச்சலாக எதிர்த்து நிற்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் முன்னேற்றம் இருக்கும். குடும்ப சண்டைகள் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒளிவு மறைவு இல்லாமல் பேசினாலே பிரச்சனைகள் இல்லை. பொய் சொல்லாதீங்க உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து பாராட்டு கிடைக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சிலருக்கு எதிர்பாராத ப்ரமோஷன் கிடைக்கும். இடமாற்றம் நன்மையை தரும் ஏற்றுக்கொள்ளலாம். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். அதையெல்லாம் சமாளிக்க தென்பும் இருக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று அன்றாட வேலையில் முழு கவனத்தை செலுத்தினால் போதும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். வீட்டில் சுப காரியத்தை இருக்கும். வேலை செய்யும் இடத்திலும் சின்ன சின்ன தடைகள் வரும். உங்களுடைய வேலையை சரியா செய்ய விடாமல் சின்ன சின்ன மன உளைச்சல்கள் வரலாம். எதையும் கருத்தில் கொள்ளாமல் வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பது நல்லது.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கும். அதிர்ஷ்ட காற்று உங்கள் பக்கம் வீசும். மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். ஏதாவது ஒரு விஷயத்தில் சாதனை படைத்து காண்பிப்பீர்கள். நாலு பேருடைய பாராட்டு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு வழி வகுக்கும். நிதி நிலைமை சீராகும். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்றைய தொடக்கம் கொஞ்சம் மந்தமாக இருந்தாலும், போகப்போக சுறுசுறுப்பு வந்துவிடும். உங்களுடைய வேலைகளை சரிவர செய்து முடித்து விடுவீர்கள். சின்ன சின்ன பொய் சொல்லி மாட்டிக் கொள்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்று பொய் சொன்னாலும் பொருந்த சொல்ல வேண்டும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பார்த்த நல்லது நடக்கும். உங்களுடைய வேலைகள் முன்கூட்டியே சரியான நேரத்தில் தொடங்கி விடும். இன்று மாலை எல்லா வேலையும் சீக்கிரமாக முடித்துவிட்டு வீடு திரும்பிவீர்கள். சந்தோஷம் நிறைந்திருக்கும். கணவன் மனைவிக்கு இடையே சின்ன சின்ன சிக்கல்கள் வாக்குவாதங்கள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்தால் பிரச்சனை கிடையாது.
– Advertisement –