இன்றைய ராசிபலன் – 03 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று லாபகரமான நாளாக இருக்கப் போகின்றது. தொழிலில் புதியதாக எடுக்கும் முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வியாபாரத்தில் புதிய முதலீடுடை செய்யலாம். லாபம் இரட்டிப்பாக கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். சக ஊழியர்களின் நட்பு உதவியாக இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்கள் இன்று ஆசைப்பட்டு, உங்களுக்கு பிடித்த நிறைய விஷயங்களை செய்யப் போகிறீர்கள். நீண்ட நாள் கனவு நிறைவேறும். மாணவர்களுக்கு கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்கள், அவர்களுக்கு மனதிற்கு பிடித்தபடி அமையும். விடுமுறை நாட்களை பயனுள்ளபடி அமைத்துக் கொள்வீர்கள். வீட்டில் பெண்களுக்கு பொன் பொருள் சேர்க்கை இருக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக தான் இருக்கும். உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் கூடுதல் பொறுப்பு கிடைக்கும். நீங்களும் திறமைசாலிகள் தான் என்று நிரூபிப்பீர்கள். இதனால் பாராட்டுகள் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது. தொழிலில் கூடுமானவரை முதலீட்டில் கவனமாக இருங்க. கடனுக்கு வியாபாரம் செய்யாதீங்க. முழுக்க முழுக்க பாட்னரை நம்பாதீங்க.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று நட்பு வட்டாரத்தில் நிறைய நல்லது நடக்கும். புதிய நண்பர்கள் உருவாக வாய்ப்புகள் உள்ளது. வேலை செய்யும் இடத்தில் சுமூகமான போக்கே நிலவும். வியாபாரத்தில் சின்ன சின்ன ஏற்ற இறக்கங்கள் இருக்கும். ஏதாவது பிரச்சனை என்று வந்துவிட்டால் அதையே நினைத்து சோர்ந்து போய் உட்காராதிங்க. பிரச்சனையை தூக்கி ஓரம் வைத்து விட்டு, உங்களுடைய வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். நேரத்தை வீணாக்கினால் பின்பு உங்களுக்கு தான் பிரச்சனை பார்த்துக்கோங்க.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று நிறைய ஆக்கப்பூர்வமான வேலைகளில் ஈடுபடுவீர்கள். எதற்குமே உதவாது என்று தூக்கிப் போட்ட ஒரு விஷயத்தை கூட அனைவருக்கும் பயன்படும் படி மாற்றுவீர்கள். அந்த அளவுக்கு உங்களுடைய திறமை வெளிப்படும். சிந்தனை ஆக்கப்பூர்வமாக இருக்கும். இதனால் பாராட்டுகளும் கிடைக்கும். குறிப்பாக மெக்கானிக்கல் தொழிலில் இருப்பவர்கள் ஆராய்ச்சி சம்பந்தமான வேலையில் இருப்பவர்களுக்கெல்லாம் இன்று கூடுதல் நன்மை கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். மனது சந்தோஷத்தில் துள்ளி குதிக்கும். இன்பமான செய்திகள் தொலைபேசி மூலம் வரும். அது உங்கள் பிரமோஷன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். அல்லது குடும்ப சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்கலாம். ஏதோ ஒன்று உங்களுக்கு இனிப்பான இன்பத்தை கொடுக்கும். பெரியவர்கள் ஆசிர்வாதம் கிடைக்கும். கடவுளின் பரிபூரண ஆசி உங்களுக்கு இருக்கு.
– Advertisement –

துலாம்
துலாம் ராசி காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எவ்வளவுதான் அலைச்சல் இருந்தாலும் உங்களுடைய வேலையில் கண்ணும் கருத்துமாக இருப்பீர்கள். அடிக்கிற வெயிலில் வெளியே போக சொன்னாலும் அந்த வேலையை சரியாக முடித்துவிட்டு வருவீர்கள். இதனால் உடல் ஆரோக்கியம் கெட்டுப் போவதற்கு வாய்ப்பு உள்ளது. நிறைய தண்ணீர் குடிக்கவும். உடலுக்கு சூடு தரும் பொருளை சாப்பிட வேண்டாம்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். சின்ன சின்ன தடங்கல்கள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. சுப காரிய நிகழ்ச்சிகளை நாளை தள்ளிப் போடுங்கள். அன்றாட வேளையில் மட்டும் இன்று கவனம் செலுத்துங்கள். உங்களுடைய பிள்ளைகளின் ஆரோக்கியத்தின் கவனம் செலுத்துங்கள். குழந்தைகளை அனாவசியமாக வெயிலில் அனுப்ப வேண்டாம். மருத்துவ செலவு வீண் விரைய செலவு ஆவதற்கு வாய்ப்பு உள்ளது. ஜாக்கிரதையா இருங்க.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கும். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். யார் வம்பு தும்புக்கும் போக மாட்டீர்கள். ஆனால் பிரச்சனைகள் உங்களைத் தேடி வரும். அதை சமாளிக்க கொஞ்சம் குழப்பமான சூழ்நிலை உண்டாகும். இருந்தாலும் முன்கோபடாமல் டென்ஷன் ஆகாமல் ஒரு பிரச்சினையை சமாளிக்கும் வித்தையை இன்று நீங்கள் கையாளுவீர்கள். உங்களுக்கு பொறுமைசாலி என்ற பட்டமே கொடுக்கலாம்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமைகள் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. எதிரிகளிடம் போராடியே இன்றைய நாள் முடிந்து விடும். ஆனால் ஒன்று. நல்ல அனுபவம் கிடைக்கும். யார் யார் எப்படிப்பட்டவர்கள் என்பதை புரிந்து கொள்வதற்கான சந்தர்ப்பங்கள் உங்களுக்கு கிடைக்கும். ஏனென்றால் கஷ்டம் வரும்போது தான் நம் கூட இருக்கிறவங்களை பத்தி நம்மால் புரிந்து கொள்ள முடியும். அந்த அனுபவங்கள் இன்று உங்களுக்கு கிடைக்கலாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழில் வந்த சிக்கல்கள் விலகும். உங்களுடைய பிரச்சனைகளுக்கு, பார்ட்னர்களை ஒரு முடிவை தேடி தந்து விடுவார்கள். ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துங்கள். வேலை வேலை என்று இருக்காமல் கொஞ்சம் குடும்பத்தையும் பார்க்கவும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று அவசியம் பொறுமை காக்க வேண்டும். எந்த ஒரு விஷயத்திலும் முன் கோபப்படக்கூடாது. மேலதிகாரிகளை அனுசரித்து செல்லுங்கள். விதாண்டா வாதம் செய்யக்கூடாது. விவாதம் செய்யக்கூடாது. சரி சரி என்று தலையாட்டிக் கொண்டு உங்கள் வேலையை கவனமாக செய்தாலே போதும். இறை நம்பிக்கையை கைவிட வேண்டாம். குடும்பத்தில் இருப்பவர்கள் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top