இன்றைய ராசிபலன் – 04 ஜூன் 2024

இன்றைய ராசிபலன் – 04 ஜூன் 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் குழப்பம் நிறைந்த நாளாக இருக்கும். எந்த ஒரு பிரச்சனைக்கும் நல்லதொரு முடிவு எடுக்க முடியாது. புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அன்றாட வேலைகளில் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். அலட்சியப் போக்கோடு எந்த வேலையும் செய்யக்கூடாது. புதிய முதலீட்டில் கவனம் செலுத்துங்கள். அதிக வட்டிக்கு கைநீட்டி கடன் வாங்காதீர்கள். ஜாமீன் கையெழுத்து போடாதீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த, லாபமான நாளாக இருக்கும். நீண்ட நாள் கடன் தொல்லையில் இருந்து வெளி வருவீர்கள். வாரா கடன் வசூல் ஆகும். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தலை குனிந்து நின்ற இடத்தில், தலை நிமிர்ந்து கேள்வி கேட்கும் அளவுக்கு வாழ்க்கை தரம் உயரும். அந்தஸ்து உயரும், சந்தோஷம் இரட்டிப்பாகும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி காணக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் மேற்கொள்ளலாம். நீண்ட நாள் சொத்து பிரச்சனைக்கு ஒரு முடிவு கிடைக்கும். தீராத குழப்பத்தில் இருந்து வெளி வருவீர்கள். நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் ரொம்ப ரொம்ப அமைதியான நாளாக இருக்கப் போகிறது. எதிராளி எவ்வளவு தான் கடினமாக நடந்து கொண்டாலும், கோபமாக பேசினாலும் உங்களுடைய பதில் மௌனமாக இருக்கும். இதனாலேயே உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும். இன்றைக்கு உங்களுக்கான பக்குவம் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன குழப்பத்தில் இருந்து விடுதலை கிடைக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். நிறைய சிக்கலான விஷயங்களில் இருந்து வெளி வருவீர்கள். இரவு நிம்மதியான தூக்கத்தை பெறுவீர்கள். எல்லாவற்றிற்கும் காரணம் தெய்வம்தான் என்பதை உணரும்போது உங்களுடைய வாழ்க்கை முழுமை பெறும். நிறைய அதிசயமான மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் இன்று நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் மன உறுதியோடு இன்றைய நாளை கடந்து செல்வார்கள். எவ்வளவு பிரச்சனை வந்தாலும் துவண்டு போக மாட்டீர்கள். விடா முயற்சி விஸ்வரூப வெற்றியை உங்களுக்கு கொண்டு வந்து சேர்க்கும். வேலை செய்யும் இடத்தில் தடைகள் வரும். அதையெல்லாம் கடக்க கூடிய தெம்பும் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். கவலைப்படாதீங்க கடவுள் உங்க பக்கம்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் அலைச்சல் நிறைந்த நாளாக இருக்கும். ஒரு வேலையை ஒரு முறை செய்தால் வெற்றி கிடைக்காது. பலமுறை செய்யும் போது தான் சிறிய அளவில் முன்னேற்றம் காணப்படும். ஆகவே புதிய முயற்சிகளை இன்று செய்யாமல் இருப்பதே நல்லது. தேவையான வேலையில் மட்டும் அக்கறை காட்டவும். முன்கோபத்தை குறைத்துக் கொள்ளவும். எந்த விஷயத்திலும் சோம்பேறித்தனம் படாதீங்க.
விருச்சிகம்
விருச்சக ராசிக்காரர்களுக்கு இன்று போட்டி பொறாமை நிறைந்த நாளாக இருக்கும். உங்களை முன்னேற விடாமல் தடுப்பதற்கு நாலு பேர் காத்துக் கொண்டிருப்பார்கள். நண்பர்களாகவே இருந்தாலும் சில பேருடைய பேச்சை நம்ப கூடாது. இன்று உஷாராக இருங்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உறவுகளுடைய அருமை பெருமைகளை தெரிந்து கொள்ளக் கூடிய வாய்ப்புகளும் கிடைக்கும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று அடுத்தவர்களுடைய வாழ்க்கையை நோட்டம் விடுவதே வேலையாக இருக்கும். உங்களுடைய வேலையை மட்டும் நீங்க பார்க்க மாட்டீங்க. இதனாலேயே உங்களுடைய பாதி நேரம் வீணாகும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வரும். தொழிலில் முன்னேற்ற தடை இருக்கும். சிக்கல்களை எதிர்கொள்ள வழி தெரியாமல் சில பேர் ரொம்பவும் மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புகள் உள்ளது. மனதை ஒருநிலைப்படுத்துங்கள். இஷ்ட தெய்வ வழிபாடு செய்யுங்கள் நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று அசதி நிறைந்த நாளாக இருக்கும். சோம்பேறித்தனத்தோடு இருப்பீர்கள். வேலையில் கவனத்தை செலுத்த மாட்டீர்கள். இதனால் மேலதிகாரிகளிடம் திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். வியாபாரத்தில் முதலீட்டில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அலட்சியமாக நடந்து கொள்ள வேண்டாம். அனுபவசாலிகளின் அறிவுரையை கேட்டு நடக்கவும். இன்று எந்த ஒரு விஷயத்திற்கும் அடம் பிடிக்காதீர்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பாராட்டுகள் நிறைந்த நாளாக இருக்கும். உயர் அதிகாரிகளின் பேச்சு உங்களுக்கு அனுசரணையை கொடுக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தோடு மகிழ்ச்சியாக இன்றைய நாளை கடந்து செல்வீர்கள். கமிஷன் தொழில் நல்ல லாபத்தை கொடுக்கும். ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்தவும். உடல் பருமனாக உள்ளவர்கள் உடல் எடையை குறைப்பதற்கு உண்டான வழியை தேடவும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை சீராக கூடிய நாளாக இருக்கும். வருமானம் நிம்மதியை கொடுக்கும். கடன் பிரச்சனையிலிருந்து வெளி வருவீர்கள். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சேமிப்புக்கு உண்டான வழியை பாருங்கள். தேவையற்ற செலவை குறைப்பது நல்லது. அதேசமயம் பேச்சை குறைப்பதும் உங்கள் வாழ்க்கைக்கு நல்ல முன்னேற்றத்தை தரும். அளவோடு பேசினால் ஆனந்தமாக வாழலாம்.

– Advertisement –

Qries
Scroll to Top