– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் அமைதியாக இருக்க வேண்டும். எவ்வளவு பிரச்சனைகள் வந்தாலும் நிதானத்தை மட்டும் கைவிடக்கூடாது. பொறுமையாக பேசி, பிரச்சனைகளை தீர்பது நல்லது. முன்கோபமும் அவசர புத்தியும் இன்று பிரச்சனைகளை கொடுத்து விடும். வேலையிலும் தொழிலிலும் நிதானம் தேவை. பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடக்க வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று எதிர்பாராத நல்லது நடக்கும். வேலையிலும் தொழிலிலும் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். கடன் சுமை குறையும். வருமானம் பெருகும். சேமிப்பு உயரும்க்ஷ குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். சுப காரிய தடை விலகும். இந்த நாள் இனிய நாளாக அமையும்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பிரச்சனைகள் கொஞ்சம் இருக்கும். தேவையற்ற போட்டி பொறாமைகளின் மூலம் வம்பு வழக்குகள் வரலாம். நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருங்கள். அனாவசியமாக அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிட வேண்டாம். நிதானம் தேவை. முடிந்தால் பக்கத்தில் இருக்கும் கோவிலுக்கு சென்று பத்து நிமிடம் அமர்ந்து வரவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். கொஞ்சம் வேலை பளு அதிகமாக இருக்கும். உடல் சோர்வு இருக்கும். வேலையில் தொலைபேசியின் மூலம் பிரச்சனைகள் வரலாம். விடுமுறை நாளாகவே இருந்தாலும் இன்று உங்களுக்கு கொஞ்சம் பிரஷர் ஆன நாளாக தான் இருக்கும். கவலைப்படாதீங்க, இந்த நாள் இறுதியில் எல்லா பிரச்சனைகளையும் அந்த இறைவன் சரி செய்து விடுவான்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றி வாகை சூடுவீர்கள். செய்ய முடியாத விஷயங்களை கூட செய்து சாதனை படைப்பீர்கள். பெயர் புகழ் பாராட்டு அந்தஸ்து உயரும். தலைகுனிந்த இடத்தில் தலைநிமிர்ந்து நிற்பீர்கள். எதிரிகளை வீழ்த்துவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பிரச்சனைகள் விலகும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உயர்வு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் முயற்சிகள் வெற்றி அடையும். நீண்ட தூர பயணங்கள் ஏற்படும். வீட்டில் விருந்தாளிகளின் வருகையால் சுப செலவுகள் ஏற்படும். இன்று மாலை பொழுதுபோக்கோடு உங்களுடைய நேரம் கழியும். சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளால் மன மகிழ்ச்சி அடைவீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்கள் இன்று சந்தோஷத்தில் மிதக்க போகிறீர்கள். எதிர்பாராத வருமானம் மன நிம்மதியை கொடுக்கும். நிறைய பண பிரச்சனைகள் இன்று ஒரு முடிவுக்கு வரும். என்றோ செய்த முதலீடு இன்று பெரிய லாபத்தை கொண்டு வந்து சேர்த்திருக்கும். பூர்வீக சொத்து கைக்கு வரலாம். நீண்ட நாட்களாக வசூல் ஆகாத கடனை வசூல் செய்யலாம். நீண்ட நாட்களாக விற்க முடியாத சொத்துபத்துகளை விற்பதற்கான நேரம் காலம் கூடி வரும். இப்படி உங்களுக்கான நல்லது நடக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசி காரர்களுக்கு இன்று விடுமுறை நாள் என்பதால் சந்தோஷம் இரட்டிப்பாக இருக்கும். நிம்மதியான தூக்கமும் இருக்கும். நல்ல சாப்பாடு கிடைக்கும். குடும்பத்தோடு நேரத்தை செலவு செய்வீர்கள். கொஞ்சம் கையில் இருக்கும் பணமும் சேர்ந்து செலவாகும். சில பேருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். மூன்றாவது நபரை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. வியாபாரத்தில் புதிய முதலீடு செய்யக்கூடாது. யாரையும் நம்பி கடனுக்கு பொருட்களை விற்காதீர்கள். அனாவசியமாக தேவையற்ற பிரச்சனைகளில் தலையிட வேண்டாம். கோர்ட்டு கேஸ் வழக்குகள் வர வாய்ப்புகள் இருக்கிறது.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். இன்று விடுமுறை நாள் போலவே இருக்காது. வீட்டில் இருக்கும் பெண்கள் ஆண்கள் பாரபட்சம் பார்க்காமல் வீட்டை சுத்தம் செய்து வேலைகளை சரிவர முடிப்பீர்கள். சந்தோஷம் இருக்கும். இன்று மாலை கோவிலுக்கு சென்று இறை வழிபாடு செய்யுங்கள். மேலும் நல்லது நடக்கும். வியாபாரத்தில் தொழிலில் வந்த இடர்பாடுகள் எல்லாம் தானாக விலகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று தேவையற்ற பிரச்சனைகள் வரும். அவசர அவசரமாக நீங்கள் எடுக்கும் முடிவு உங்களுக்கு சாதகமாக அமையாது. அடுத்தவர்கள் சொல்வதை கொஞ்சம் செவி கொடுத்து கேளுங்கள். அடுத்தவர்கள் பேச்சுக்கும் மரியாதை கொடுங்கள். தனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று தலைக்கனத்தோடு கர்வத்தோடு நடந்தால் இன்று நஷ்டம் உங்களுக்குத்தான்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மன நிம்மதி இருக்கும். வேலையில் இருந்து வந்த டென்ஷன் குறையும். வீட்டில் நீண்ட நேரம் நேரத்தை செலவு செய்வீர்கள். உறவுகளோடு ஒற்றுமையாக சந்தோஷமாக இருக்க நேரம் காலம் கூடி வரும். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேருவீர்கள். உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாக இருக்கும். கவலைப்படாதீங்க கூடிய சீக்கிரம் எல்லாம் சரியாகிவிடும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam