இன்றைய ராசிபலன் – 05 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சேமிப்பை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாத ஆடமரச் செலவுக்கு பர்ஸை வெளியில் எடுத்தால் அவ்வளவுதான். எல்லாம் காலி. வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். தொலைபேசியின் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வாழ்க்கையில் மேலும் மேலும் முன்னேறுவதற்கு தேவையான வாய்ப்புகள் உங்களுக்காக வரிசை கட்டி நிற்கிறது. அதை எல்லாம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் எல்லா விஷயத்திலும் அதிக ஆர்வம் இருக்கும். புதிய விஷயங்களை கற்றுக் கொள்ள வேண்டும். புதிய தொழில் தொடங்க வேண்டும் நாமும் மற்றவர்களைப் போல நிறைய பணம் சம்பாதித்து சமூகத்தில் உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்ற கனவு உங்களிடத்தில் இருக்கும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். நல்லதே நடக்கும்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆன்மீகத்தில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தோடு கோவிலுக்கு சென்று இறைவழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். வேலையில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். மேலதிகாரிகளுடன் வாக்குவாதமும் வரலாம். அதையெல்லாம் மனதில் போட்டு குழப்பிக் கொள்ளாமல், அடுத்தடுத்த வேலையில் கவனம் செலுத்திக் கொண்டே இருங்கள். நிச்சயமாக உங்களுக்கு இன்று நல்லது நடக்கும். முன்னேற்றமும் இருக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று அளவோடு ஆசைப்பட வேண்டும். பேராசைப்படக்கூடாது. பேராசை பெரு நஷ்டம் என்று சொல்லுவார்கள் அல்லவா. ஆகவே கடமையை செய்யுங்கள் பலனை எதிர்பார்க்காதீர்கள். இன்றைய நாள் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் ஆசைகளை கட்டுப்படுத்தி தான் ஆக வேண்டும். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் எதிர்பாராத வரவு மன திருப்தியை கொடுக்கும்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று லாபம் நிறைந்த நாளாக இருக்கும். புதிய தொழில் தொடங்கலாம். புதுசாக முதலீட்டை செய்யலாம். சின்ன சின்ன வியாபாரிகள் கூட சூப்பராக கல்லா கட்டுவீர்கள். இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் இருக்கும் இல்லத்தரசிகளுக்கு வேலை கொஞ்சம் இரட்டிப்பாகும். தடபுடலாக சமையல் சோர்ந்து சோர்ந்து போடுவீர்கள். நீர் சத்து குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடியுங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்கள் இன்று புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். அன்றாட வேளையில் அக்கறை எடுத்துக் கொண்டாலே போதும். நல்லதே நடக்கும். வேலை செய்யும் இடத்தில் நீங்கள் பேசக்கூடிய வார்த்தைகளுக்கு மரியாதை கிடைக்காது. இதனால் வேலையில்  நிரந்தரமாக தங்களாமா வேண்டாமா என்ற குழப்பம் மனதில் எழும். புதிய வேலை கிடைப்பது குதிரை கொம்பு. வேலையில் இருக்கும் பிரச்சனைகள் நாளை சரியாகலாம். கொஞ்சம் பொறுமையாக காத்திருங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதுசாக தொழில் தொடங்குவதில் ஆர்வம் இருக்கும். புதிய நண்பர்களின் சந்திப்பு நாளை நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும். பிள்ளைகளின் கல்வியில் பெற்றவர்கள் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்காலத்திற்கு தேவையான நல்லதை செய்வீர்கள். சேமிப்பு உயரும். செலவு குறையும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சுப செலவு ஏற்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் எல்லாம் மீண்டும் நடக்கும். காதல் கைகூடும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். மனைவிக்கு தேவையான ஆடம்பரமான பரிசுப் பொருட்களை வாங்கிக் கொடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மன நிறைவான போக்கே நிலவும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சுடக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டும் புகழும் உங்களைத் தேடி வரும். எதிர்பாராத பண வரவு நிதி நிலைமையை சீர்படுத்தும். தாய்மாமன் வழி உறவால் குடும்பத்தில் சிக்கல்கள் வர வாய்ப்புகள் உள்ளது. உறவுகளை பகைத்துக் கொள்ளாதீர்கள். பெரியவர்களுக்கு மதிப்பு கொடுத்து நடந்து கொள்ளவும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் தேவையற்ற பதட்டம் மனதில் இருக்கும். ஏதோ ஒரு பயம் உங்களை புதிய முயற்சிகளை செய்ய விடாமல் தடுக்கும். பதட்டத்துடன் புது காரியங்களை தொடங்க வேண்டாம். அன்றாட வேலைகளில் மட்டும் கூடுதல் கவனம் இருந்தால் போதும். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிடாதீங்க. அதிக வெயிலில் வெளியே செல்லாதீங்க நிறைய தண்ணீர் குடிக்கவும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நிதிநிலைமை கொஞ்சம் சீராக இருக்கும். எதிர்பாராத பண வரவு கடன் பிரச்சனையிலிருந்து உங்களை காப்பாற்றி விடும். ஆடம்பர செலவை குறைத்துக் கொள்ளுங்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தேவையற்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கும். தொழிலில் வெற்றி காண்பீர்கள். புதிய முதலீடுகளை செய்யலாம். கூடுமானவரை நண்பர்களோடு சேர்ந்து வெளியிடங்களில் சுற்றுவதை தவிர்த்துக் கொள்வது நல்லது.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அனுகூலம் நிறைந்த நாளாக இருக்கும். நீங்கள் தொடங்கும் புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பிள்ளைகளின் மூலம் பெற்றவர்கள் மன மகிழ்ச்சி அடைவீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். எடுத்து வந்த சின்ன சின்ன கெட்ட பெயரை கூட சரி செய்து விடுவீர்கள். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். பார்ட்னரோடு சேர்ந்து சந்தோஷமாக உங்களுடைய வேலைகளை கவனிப்பீர்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top