– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மன உறுதியான நாளாக இருக்கும். எடுத்த காரியத்தை வெற்றிகரமாக முடிப்பீர்கள். முன்வைத்த காலை பின் வைக்க மாட்டீர்கள். அடுத்தவர்கள் உங்களை பார்த்து பொறாமைப்படும் அளவுக்கு திறமைகள் வெளிப்படக்கூடிய நாள் இது. எதிரிகளின் முன்பு தலை நிமிர்ந்து நடப்பீர்கள். இன்று உங்களிடம் போட்டி போட்டு யாராலும் ஜெயிக்க முடியாது. சந்தோஷம் இரட்டிப்பாக கூடிய நாளாக இருக்கும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று மன நிறைவு இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகளை சரியாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்தாலும், சமாளித்துக் கொள்ளும் தெம்பு இருக்கும். நீண்ட தூர பயணம் நன்மையை தரும். வெளியூர் வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். தகுதிக்கு மீறிய விஷயங்களை செய்து சாதிப்பீர்கள். இதனால் உங்களுடைய தகுதியை உயர்த்திக் கொள்வீர்கள். வருமானம் அதிகரிக்கும். சேமிப்பு உயரும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கூடுமானவரை எதிரிகளிடம் ஜாக்கிரதையாக இருங்கள். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பார்ட்னரிடம் கவனமாக இருக்க வேண்டும்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். மனது ஆன்மீகத்தில் ஈடுபடும். இல்லத்தரசிகளுக்கு இன்று மன நிறைவான நாளாக இருக்கும். பெரியவர்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல பெயர் கிடைக்கும். மேல் அதிகாரிகளின் ஆதரவு மன நிம்மதியை கொடுக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் மன கவலை இருக்கும். உடல் சோர்வு காணப்படும். எல்லா விஷயத்திலும் சுறுசுறுப்பாக இருக்க முடியாது. வேலையில் சின்ன சின்ன பின்னடைவுகள் வரும். நண்பர்களோடு சேர்ந்து வீணாக நேரத்தை செலவு செய்து விட்டு, பிறகு வருத்தப்படுவதில் எந்த பிரயோஜனமும் இல்லை. கெட்ட சாவகாசத்தை நிறுத்துங்கள். நல்லது நடக்கும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று மன பயம் இருக்கும். எந்த விஷயத்தையும் தெளிவாக செய்ய மாட்டீர்கள். வேலை செய்யும் இடத்தில் பின்னடைவு உண்டாகும். சின்ன தவறை செய்துவிட்டு அதையே நினைத்துக் கொண்டு இன்றைய நாள் முழுவதும் வீணாவதற்கு வாய்ப்புகள் உள்ளது. கொஞ்சம் கவனமாக இருங்கள். வாழ்க்கை என்றால் பிரச்சனைகள் வரப்போகத்தான் செய்யும். நல்லது கெட்டது இருக்கும். அதை எல்லாம் தாண்டி செல்லும் அளவுக்கு மனப்பக்குவத்தை வர வைத்துக் கொண்டால் இன்று சமாளித்து விடலாம்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வேண்டாம். அன்றாட வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். மனதை ஆன்மீகத்தில் ஈடுபடுத்துங்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய காரியங்களை சரியாக செய்து முடிக்கவும். குலதெய்வத்தை நினைத்து வழிபாடு செய்யவும். மனதை ஒருநிலைப்படுத்துங்கள். அலைபாய விடாதீர்கள். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்கவும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வீட்டில் தடைப்பட்டு வந்த சுப காரியங்கள் நடக்கும். கணவன் மனைவிக்கிடையை ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு தேவையான விஷயங்களை பார்த்து பார்த்து செய்வீர்கள். சுப செலவுகள் உண்டாகும். தொழிலை விரிவு படுத்தலாம். முதலீட்டுக்கு தேவையான கடன் சுலபமாக கிடைக்கும். முயற்சி செய்யுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று ராஜ வாழ்வு, ராஜ உபச்சாரம் இருக்கும். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் இருக்கும். நீங்கள் கேட்காமலேயே மரியாதை தேடி வரும். சுகபோக வாழ்க்கை என்று சொல்லுவார்கள் அல்லவா. அதை அனுபவிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆனால் மனைவியிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். தேவையற்ற விஷயங்களில் பொய் சொல்லாதீர்கள். தவறான வாக்குறுதியை கொடுக்காதீர்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று டென்ஷன் நிறைந்த நாளாக இருக்கும். முன்கோபம் அதிகம் வரும். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்களோடு சண்டை வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளிடம் பேசும்போது கவனமாக பேசுங்கள். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரும். சமாளிப்பதற்கு உண்டான வழியை தேடுங்கள். புதிய முதலீட்டை செய்ய வேண்டாம். பார்ட்னரை கண்மூடித்தனமாக நம்ப வேண்டாம்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று பொறுமை நிறைந்த நாளாக இருக்கும். பிரச்சனைகள் வந்தாலும் அதை சரி செய்வதற்கு உண்டான வழியை பார்ப்பீர்கள். அடுத்தவர்களை குறை சொல்ல மாட்டீர்கள். இதனால் உங்களுடைய வாழ்க்கை தரம் உயர்ந்து காணப்படும். நட்பு வட்டாரங்கள் உங்களை புகழும். உங்களைப் போல வாழ வேண்டும் என்று நாலு பேர் சொல்லும் அளவுக்கு பக்குவம் உங்களிடத்தில் வெளிப்படும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று ஆன்மீகம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய வழிபாட்டில் ஆர்வம் காட்டுவீர்கள். மனசு லேசாகும். வேலை செய்யும் இடத்தில் டென்ஷன் இருக்காது. இருந்து வந்த டென்ஷனை எல்லாம் சரி கட்டி விடுவீர்கள். வருமானம் நிறைந்த நாளாக இருக்கும் கடன் சுமை குறையும் வாகனத்தில் செல்லும்போது மட்டும் கொஞ்சம் கவனமாக இருக்கவும்.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam