– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்றைய நாள் ரொம்ப ரொம்ப சுலபமாக நகர்ந்து செல்லும். யாருக்கு என்ன பிரச்சனை வந்தால் என்ன. எனக்கு எந்த பிரச்சினையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை சுகமாக இருக்கிறது என்று சந்தோஷமாக இருப்பீர்கள். இதனாலேயே உங்களை பார்த்து எதிரிகள் பொறாமைப்படுவார்கள். உங்களைப் போல அவர்களால் வாழ முடியவில்லை என்று எண்ணித்தான். இந்த நாளை என்ஜாய் பண்ணுவீங்க. பிரச்சனைகள் வந்தாலும் மனசு கவலை படாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். காதல் கைகூடும். கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த சண்டைகள் ஒரு முடிவுக்கு வரும். வேலை செய்யும் இடத்தில் நீண்ட நாள் முயற்சி செய்து வந்த நல்ல காரியங்கள் எல்லாம் இன்று நடக்கும். வியாபாரத்தில் இருந்து வந்த சிக்கல்கள் விலகும். வியாபாரத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னேற்ற செல்வீர்கள்.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று விடாமுயற்சி இருக்கும். எந்த ஒரு வேலையையும் கையில் எடுத்தால் அதை முழுசாக நல்லபடியாக முடித்தே ஆக வேண்டும் என்று உழைப்பீர்கள். உழைப்புக்கு ஏற்ற வெற்றியும் உங்களுக்கு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்தி காத்துக் கொண்டிருக்கிறது. மாணவர்களுக்கு இன்று நல்ல முன்னேற்றம் தரக்கூடிய நாளாக இருக்கும். விடுமுறை நாட்களாக இருந்தாலும் படிப்பு தவிர மற்ற விஷயங்களில் உங்களுக்கு ஆர்வம் அதிகரிக்கும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. யார் உங்களை சீண்டினாலும் நீங்கள் சாந்தமாக தான் உங்களுடைய வேலையை செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். தொழிலில் சின்ன சின்ன சிக்கல்கள் வரலாம். முதலீட்டில் மட்டும் கவனம் செலுத்துங்கள். செலவை குறைக்க பாருங்கள். சேமிப்பை அதிகப்படுத்துங்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று உற்சாகம் நிறைந்த நாளாக இருக்கும். நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கான பாராட்டு கிடைக்கும். பதிவு உயர்வு சம்பள உயர்வு கிடைக்கவும் வாய்ப்புகள் உள்ளது. ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். முன்பின் தெரியாத நட்பு சில சிக்கல்களில் சிக்க வைக்கும். அதில் மட்டும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று திறமை வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது. எல்லா விஷயத்திலும் ஜெயிப்பதற்கு உண்டான நல்ல நேரம் உங்களுக்கு வந்துவிட்டது. எதிரிகளை வீழ்த்தி வெற்றி காண்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகமாக செயல்படுவீர்கள். ஆனால் வீட்டில் சின்ன சின்ன சண்டை சச்சரவுகள் வரலாம். மனைவியிடம் பேசும் போது கொஞ்சம் கவனமாக இருங்கள். தேவையில்லாத விஷயத்தை பேசி மாட்டிக் கொள்ளாதீர்கள்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். நீங்கள் எதிர்பாராத பிரச்சனைகள் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. ஆனால் அந்த பிரச்சனையில் இருந்து வெளிவர உங்க நண்பர்களும் உறவினர்களும் உதவியாக இருப்பார்கள். புதிய நட்பு எதிர்காலத்திற்கு நன்மை தரக்கூடிய வகையில் அமையும். பெரிய மனிதர்களின் சந்திப்பு நல்ல ஆதாயத்தை தேடித்தரும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலதிகாரிகளின் ஆதரவு உங்களுக்கு முழுமையாக இருக்கும். வியாபாரத்தில் கணக்கு வழக்குகளை கொஞ்சம் சரியாக பாருங்கள். கடனுக்கு வியாபாரம் செய்யாதீர்கள். நிதிநிலைமை கொஞ்சம் மோசமாகத்தான் இருக்கும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். உங்களுடைய வேலையை பார்த்து அனைவரும் பாராட்டுவார்கள். புகழின் உச்சிக்கு செல்வீர்கள். இதனால் தலைக்கனம் கொஞ்சம் அதிகமாகும். கவனம் சிதறும். வாழ்க்கையில் எவ்வளவு தான் உயரத்திற்கு சென்றாலும் தன்னடக்கம் தேவை என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள். நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் போட்டி பொறாமைகள் அதிகமாக இருக்கும். உங்களுடைய வேலையை யாரும் சரியாக செய்ய விட மாட்டார்கள். அடுத்தவர்கள் செய்த தவறுக்கு நீங்க திட்டு வாங்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள். தாய்மாமன் வழி உறவால் நல்லது நடக்கும். தொழிலை மேம்படுத்த வங்கி கடன் கிடைக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்க போகின்றது. வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல நிறைய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். சொத்து தகராறுகள் ஒரு முடிவுக்கு வரும். இழுப்படியாக இருந்து வந்த பிரச்சனைகளுக்கு ஒரு முற்றுப்பள்ளி வைப்பீர்கள். வாழ்க்கைத் துணையின் ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். வேலையில் மேலதிகாரிகளுடன் பேசும்போது, மீட்டிங்கில் பேசும்போது வார்த்தையில் கொஞ்சம் கவனமாக இருங்கள். எதுவாக இருந்தாலும் நிதானமாக எடுத்துச் சொன்னால் நல்லது நடக்கும். முன்கோபம் வேண்டாம். யாரையும் எடுத்தறிந்து பேச வேண்டாம். பொறுமை தான் என்று உங்களுக்கு பெருமையை தேடி தரும்.
– Advertisement –