– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் இன்று எல்லா விஷயத்திலும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அலட்சியமாக பண விஷயங்களை கையாள கூடாது. குடும்ப விஷயங்களை மூன்றாவது நபரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். சோசியல் மீடியாவில் இருப்பவர்கள் கூடுதல் கவனத்தோடு இருக்க வேண்டும். யாரைப் பற்றியும் கமெண்ட் பண்ணாதீங்க. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருந்தால் பிரச்சனை கிடையாது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று அலைச்சல்கள் கொஞ்சம் அதிகமாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். அனாவசியமாக யாரிடமும் வாக்குறுதி கொடுக்காதீங்க. இந்த நேரத்திற்குள் இந்த வேலையை முடித்து தருவதாக கமிட்மெண்ட் பண்ணாதீங்க. கணவன் மனைவிக்கிடையே இருந்து வந்த பிரச்சனைகள் விலகும். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் சோம்பேறித்தனமான நாளாக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் பின்னடைவு உண்டாகும். எந்த வேளையிலும் முழு கவனம் செலுத்த முடியாது. இதனால் முன்கோபம் அதிகமாக வருவதற்கும் வாய்ப்புகள் உள்ளது. முக்கியமான வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தினால் போதும். தேவையற்ற வேலைகளை நாளை தள்ளி வைக்கவும்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். சொன்ன வேலையை, சொன்ன நேரத்திற்கு முன்பாகவே செய்து முடித்து விடுவீர்கள். நிம்மதியாக இந்த நாளை கடந்து செல்லலாம். தேவைக்கு ஏற்ப பணவரவு இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பெண்கள் உறவுகளோடு ஒற்றுமையாக இருந்து சந்தோஷமாக நேரத்தை செலவு செய்வீர்கள்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சந்தோஷம் நிறைந்த நாளாக இருக்கும். உற்சாகத்தோடு எல்லா வேலையையும் செய்வீர்கள். வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கூடும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். புதிய முதலீடு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். கமிஷன் தொழில் செய்பவர்களுக்கு அவநம்பிக்கை உண்டாகும் படியான சில பிரச்சனைகள் வரும். கொஞ்சம் ஜாக்கிரதையாக இருங்கள்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். கடன் சுமை குறையும். வேலை செய்யும் இடத்தில் ப்ரோமோஷனுக்கு வாய்ப்பு இருக்கிறது. நீங்கள் நினைத்து பார்க்காத அளவுக்கு நல்ல வாய்ப்புகள் உங்கள் வீட்டு கதவை தட்டும். அதையெல்லாம் ஏற்றுக் கொள்வதன் மூலம் நன்மையே நடக்கும். உங்களுடைய உடைமைகளை கொஞ்சம் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்ளுங்கள். திருடு போக வாய்ப்பு உள்ளது.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று இறக்க குணம் இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்யக்கூடிய மன பக்குவத்தில் இருப்பீர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலில் இருந்து வந்த தடைகள் விலகும். வீட்டில் விருந்தாளிகளின் வருகை இருக்கும். சுப செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு இன்று கூடுதல் நல்லது கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று வரவு நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாட்களாக வராத கடன் தொகை வசூல் ஆகும். மன நிம்மதி அடைவீர்கள். சொத்து சுகமா வாங்குவதற்கான யோகம் இருக்கிறது. வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை நிலவும் .
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கோபம் நிறைந்த நாளாக இருக்கும். உங்களை சீண்டிப் பார்க்க நாலு பேர் இருப்பார்கள். உங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள். அடுத்தவர்களை பற்றி கவலைப்படாதீர்கள். இன்று சுயநலமாக சிந்தித்தால் மட்டும் தான் உங்களால் ஜெயிக்க முடியும். சில எதிரிகளால் தொல்லை உண்டாகும். நிம்மதி கெடும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். நண்பர்கள் கூட எதிரியாக மாறுவதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக மேனேஜர், டீம் லீடரிடம் கவனமாக பேசுங்கள். இருக்கும் வேலையை விடுவது, புதிய வேலை தேடுவது போன்ற பேச்சுக்கே இடம் இருக்கக் கூடாது. பிரச்சனைகளை அனுசரித்து போக தெரிய வேண்டும். வீட்டில் இருக்கும் பெண்கள் குடும்ப சண்டைகளை வெளியில் சொல்லாதீங்க.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா விஷயத்திலும் ஆர்வம் அதிகமாக இருக்கும். புதிய வேலைகளை கற்றுக் கொள்வீர்கள். மேலதிகாரிகளிலும் பாராட்டையும் பெறுவீர்கள். நிறைய பேருக்கு இட மாற்றம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. இடமாற்றம் உங்களுக்கு நன்மையை கொடுக்கும். புதுசாக சொத்து சேர்க்கை இருக்கும். குழந்தைகளின் மூலம் மனம் மகிழ்ச்சி கிடைக்கும்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று சின்ன சின்ன தோல்விகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும். உடனே துவண்டு போடக்கூடாது. முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி உங்களுக்கு கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரணையாக பேசுங்கள். மனைவியிடம் பொய் சொல்ல வேண்டாம். மேலதிகாரிகளிடம் பொய் சொல்ல வேண்டாம். உண்மையாக நடந்து கொண்டால் சிக்கல்கள் கிடையாது ஜாக்கிரதை.
– Advertisement –
Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam