இன்றைய ராசிபலன் – 07 மே 2024

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிம்மதியான நாளாக இருக்கப் போகின்றது. முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பணங்களை மனநிறைவோடு செய்வீர்கள். ஆன்மீகத்தில் மனதை ஈடுபடுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். வருமானம் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். கூடுமானவரை அதிகமான வெயிலில் வெளியே செல்லாமல் இருப்பது நல்லது.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு நாளை தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகமாக இருக்கும். எந்த ஒரு விஷயத்திலும் துணிச்சலாக முடிவு எடுப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் மேலதிகாரிகளிடம் ரொம்பவும் வெளிப்படையாக பேசுவீர்கள். இதனால் பிரச்சனைகள் இருக்காது. உங்களுடைய வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். தொழிலை விரைவு செய்யலாம்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப பொறுமை தேவை. எந்த ஒரு விஷயத்திலும் அவசரப்பட்டு முடிவு எடுக்கக் கூடாது. ஒன்றுக்கு பலமுறை சிந்தித்து செயல்படுங்கள். அனுபவ சாலிகளின் பேச்சைக் கேளுங்கள். அடம்பிடித்து எந்த காரியத்தையும் சாதிக்க வேண்டாம். மேல் அதிகாரிகளின் ஆதரவு வேலை செய்யும் இடத்தில் கிடைக்கும். வியாபாரத்தில் சின்ன சின்ன சிக்கல்கள் வந்து விலகும்.
கடகம்
கடக ராசிக்காரர்கள் இன்று கொஞ்சம் சுறுசுறுப்பாக செயல்பட வேண்டும். எல்லா வேலைகளையும் முன்கூட்டியே செய்து வைத்துக் கொள்ளுங்கள். கடைசி நிமிடம் வரை ஒரு வேலையை எடுத்துச் செல்ல வேண்டாம். அது உங்களுக்கு டென்ஷனை கொடுக்கும். ஆரோக்கிய குறைபாடுகளை உண்டாக்கிவிடும். உதாரணத்திற்கு டென்ஷன் தலைவலி வருவதற்கு கூட வாய்ப்புகள் உள்ளது. இன்று கூடுதல் எல்லா விஷயத்திலும் கொஞ்சம் கூடுதல் கவனம் தேவை.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று சுறுசுறுப்பான நாளாக இருக்கும். எல்லா வேலைகளையும் பம்பரமாக சுழன்று செய்து முடிப்பீர்கள். இதனால் வேலை செய்யும் இடத்தில் பாராட்டுகள் கிடைக்கும். பாராட்டோடு சேர்த்து சம்பள உயர்வு அல்லது போனஸ் கிடைப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது. என்ஜாய் பண்ணுங்க. குடும்பத்தில் கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சிக்கல்கள் வரும். யாராவது ஒருவர் விட்டுக் கொடுத்து நடக்கவும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று சின்ன சின்ன சிக்கல்கள் வரும். ஆனால் அந்த சிக்கல்களை எல்லாம் எப்படி சரி செய்வது என்று ரொம்ப ரொம்ப திறமையாக சிந்திப்பீர்கள். அலுவலகத்தில் வரக்கூடிய பிரச்சனைகளை சுமூகமாக முடித்துக் கொடுப்பதன் மூலம் பாராட்டுகளும் உங்களுக்கு கிடைக்கும். திறமை வெளிப்படக்கூடிய நாள். வியாபாரத்தில் உங்கள் கை மேலோங்கி நிற்கும். வருமானம் அதிகரிக்கும்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் ஏற்ற இறக்கங்கள் நிறைந்த நாளாக தான் இருக்கும். பிரச்சனைகளை எதிர்கொள்ள பயப்படக்கூடாது. எதுவாக இருந்தாலும் ஒரு கை பார்த்து விடலாம் என்ற எண்ணம் உங்களுக்குள் இருந்தால் இன்றைய நாளை சுலபமாக கடந்த செல்வீர்கள். ஆனால் கொஞ்சம் வருத்தப்பட்டு உடைந்து போய் உட்கார்ந்து விட்டால் இன்றைய நாள் வீணாக செல்லும். கவனமாக இருங்க. எதற்கும் துணிந்து நடப்பது இன்று உங்களுக்கு வெற்றியை கொடுக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்கள் இன்று யாரிடமும் சண்டை போடக்கூடாது. முன்கோபடக்கூடாது. காலையில் எழுந்தவுடனே, உங்கள் மனதிற்கு பிடித்த இஷ்ட தெய்வத்தை நினைத்து தியானம் செய்யுங்கள். எதிரிகளால் சின்ன சின்ன பிரச்சனைகள் வரலாம். வேலை செய்யும் இடத்தில் சக ஊழியர்கள் உங்களுக்கு ஒத்துழைக்க மாட்டார்கள். மேலதிகாரிகளின் பிரஷர் கூட இருக்கும். கொஞ்சம் அனுசரித்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று கொஞ்சம் செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். சுப செலவுகளாகத்தான் இருக்கும். இருந்தாலும் சேமிப்பு கரையும் போது சின்ன கஷ்டம் மனசுக்குள் வரத்தான் செய்யும் அல்லவா. கவலைப்படாதீங்க வருமானமும் பெருக தொடங்கிவிடும். வேலை செய்யும் இடத்தில் கொஞ்சம் கவனமாக இருங்கள். மூன்றாவது நபரை முழுசாக நம்பாதீர்கள். வியாபாரத்தில் நிலைமை சீராக செல்லும். நல்ல லாபம் கிடைக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று குடும்பம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். கணவன் மனைவி அனுசரித்து செல்ல வேண்டும். பிள்ளைகளின் முன்பு சண்டை போட வேண்டாம். வேலை செய்யும் இடத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். நீங்கள் நினைத்தபடி உங்களுடைய வேலையை சொன்ன நேரத்தில் முடித்து தருவீர்கள். வியாபாரத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கும். பாராட்டுகள் கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் எதிரியை வீழ்த்தும் அளவுக்கு உங்களுடைய திறமை இருக்கப் போகின்றது. வியாபாரத்தில் சின்ன சின்ன பின்னடைவு வரலாம். முதலீட்டில் கவனமாக இருக்கவும். முழுசாக யாரையும் நம்பி கடன் கொடுக்காதீங்க.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று மனசு ஆன்மீகத்தில் ஈடுபடும். முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய திதி தர்ப்பண காரியங்களை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். வேலை செய்யும் இடத்தில் உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவை பெறுவீர்கள். நிதி நிலைமை சீராக இருக்கும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுத்து வாழ்க்கை துணையை மகிழ்விப்பீர்கள்.

– Advertisement –

Qries
Scroll to Top