இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2025

இன்றைய ராசிபலன் – 08 ஜனவரி 2025

Qries

– Advertisement –

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் ரொம்ப ரொம்ப தேவை. அவசரப்பட்டு எந்த காரியத்தையும் செய்யக்கூடாது. கணவன் மனைவிக்குள் சண்டை போட்டுக் கொள்ளக் கூடாது. குறிப்பாக வேலையில் இருப்பவர்கள் பிரச்சனை என்று வந்தால் வேலையை விட்டு நான் இன்றோடு வெளியே போகிறேன் என்றெல்லாம் சபதம் போடக்கூடாது. எல்லாமே பொறுமையோடு இன்று நடக்க வேண்டும். சிந்தித்து செயல்பட வேண்டும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நிதானம் இருக்கும். பொறுமை இருக்கும். சிந்தித்து செயல்படுவீர்கள். ஆனாலும் பிரச்சனைக்கு பஞ்சம் இருக்காது. பிரச்சினைகளை, பெட்ஷீட் ஆக மாற்றி மேலே போட்டுக் கொண்டு தூங்குவீர்கள். அந்த அளவுக்கு பாரம் இருக்கும். உங்களுடைய நம்பிக்கை விடாமுயற்சி பிரச்சினைகளை எல்லாம் சரி செய்து விடும். பொறுமைக்கு இத்தனை சக்தியா என்பதை இன்று நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.
– Advertisement –

மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இன்று நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். ஆனால் உங்களைப் பார்த்து நிறைய பேர் பொறாமைப்படுவார்கள். இவனுக்கு இப்படி ஒரு வாழ்க்கையா என்று வாய்விட்டு சொல்பவர்களும் இருப்பார்கள். கவலைப்படாதீங்க, இறையருள் உங்களுக்கு இருக்கு. எந்த எதிர்மறை ஆற்றலும் உங்களை தாக்காது. வேலையிலும் வியாபாரத்திலும் எதிர்பார்த்ததை விட நல்ல முன்னேற்றம் அடைவீர்கள்.
கடகம்
கடக ராசி காரர்களுக்கு இன்று தேவையற்ற மன பயம் இருக்கும். இந்த வேலை நடக்குமா? நடக்காதா என்ற சந்தேகம் இருக்கும். நேரா நேரத்திற்கு அந்தந்த வேலைகளை செய்து விடுங்கள். நேரத்தை வீணடிக்காமல் இருந்தால் உங்களுக்கு எல்லாமே நல்லதாக நடக்கும். எந்த வேலையும் பிறகு செய்து கொள்ளலாம் என்று மட்டும் தள்ளி போட வேண்டாம்.
– Advertisement –

சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் இன்று வெற்றிவாகை சூடு பெயர்கள். வேலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். வியாபாரத்தில் நினைத்ததை விட நல்ல லாபத்தை எடுப்பீர்கள். சின்ன சின்ன பெட்டிக்கடை வைத்திருப்பவர்கள், டிபன் கடை வைத்திருப்பவர்கள் கூட இன்று மனதிருப்தியாக கல்லா கட்டுவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். சுப செலவுகள் ஏற்படும்.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று புதிய முயற்சிகள் வெற்றியைத் தரும். உங்களை சுற்றி இருப்பவர்கள் எல்லாம் ஆதரவாக இருப்பார்கள். பக்கத்து வீட்டுக்காரர்கள் சொந்தக்காரர்கள் நண்பர்கள் என்று உங்களுடைய முன்னேற்றத்திற்கு ஊக்கம் தரும்படி பேசுவார்கள்‌. மன நிறைவான இந்த நாளில் இறைவனுக்கு நன்றி சொல்லுங்கள்.
– Advertisement –

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று வருமானம் நிறைந்த நாளாக இருக்கும். நீண்ட நாள் வராத பணம் கையை வந்து சேரும். கடன் சுமை குறையும். சொத்து சுகம் வாங்கவும் வாய்ப்புகள் இருக்கிறது. வியாபாரத்தை விரிவு செய்யலாம். வங்கி கடன் முயற்சி செய்யலாம். பயணத்தின் போது சந்தோஷம் இருக்கும். எதிர்பாராத நேரத்தில் மனதிற்கு பிடித்த நபரை சந்திக்கவும் வாய்ப்புகள் இருக்கிறது.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று நிறைவான நாளாக இருக்கும். நிம்மதியான நாளாக இருக்கும். நினைத்த வேலைகள் எல்லாம் சரியாக நடந்து முடியும். அடுத்தவர்களுக்கு கொடுத்த வாக்கை நிறைவேற்றிக் கொடுத்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் இருக்கும். கணவன் மனைவி உறவு பலப்படும்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று வேலை தொழிலில் எல்லாம் கூடுதல் கவனம் இருக்க வேண்டும். கவனக்குறைவாக எந்த வேலையையும் செய்யாதீங்க. மூன்றாவது நபர்களை கண்மூடித்தனமாக நம்ப கூடாது. தகாத நண்பர்களோடு பழக வேண்டாம். குறுக்குப் பாதையில் செல்ல வேண்டாம். நேர்மையாக இருந்தால் எதிர்காலத்தில் வரும் பிரச்சனையிலிருந்து தப்பிக்க முடியும்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இன்று சுறுசுறுப்பாக இருப்பீர்கள். வேலைகளை எல்லாம் எப்படியாவது முடித்து விட வேண்டும். பொங்கலுக்கு முன்பாக தயாராக வேண்டும் என்று சொல்லி உங்களுடைய கடமையில் ரொம்ப ரொம்ப கவனமாக இருப்பீர்கள். சொந்த ஊர் செல்வதற்கு தயாராகுவீர்கள். மனதில் உற்சாகம் கூடுதலாக இருக்கும். சந்தோஷம் வெளிப்படும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்கள் இன்று வியாபாரத்தில் கவனமாக இருக்க வேண்டும். பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டும். அனாவசியமாக அடுத்தவர்களுக்கு கடன் கொடுக்க வேண்டாம். யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம். வீட்டில் வாழ்க்கைத் துணை சொல்லும் பேச்சை கேட்டு நடப்பது நல்லது. ஈகோவை குறைத்துக் கொள்ளுங்கள்.
மீனம்
மீன ராசிக்காரர்கள் இன்று நிறைய நல்ல விஷயங்களை செய்வீர்கள். வேலை பளு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். இருந்தாலும் மனதிற்கு பிடித்தமான விஷயங்களை செய்ய மறக்க மாட்டீங்க. குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுப்பீர்கள். மேலதிகாரிகளுடன் அனுசரணையாக நடந்து நல்ல பெயரை எடுப்பீர்கள். எங்கிருந்து இவ்வளவு பக்குவம் நம்மிடம் வந்தது என்று நீங்களே உங்களை பற்றி சிந்திப்பீர்கள் பாருங்க.

– Advertisement –

Qries

Follow Us:
https://facebook.com/nithyasubamin
https://nithyasubam.in
https://www.youtube.com/@nithyasubam
href=”https://telegram.me/tamil_astrology_nithyasubam”>https://telegram.me/tamil_astrology_nithyasubam

Scroll to Top