– Advertisement –
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கக்கூடிய நாளாக இருக்கும். அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். இதனால் உங்களை சுற்றி இருப்பவர்களிடத்தில், உங்களுக்கு மதிப்பும் மரியாதையும் உயரும். வேலை செய்யும் இடத்தில் நல்லது நடக்கும். தொழிலில் இருந்து வந்த இடர்பாடுகள் விலகும். முதலீட்டில் ஆர்வம் காட்டலாம். தொழிலை விரிவு படுத்தலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று நீங்கள் செய்யக்கூடிய அன்றாட வேலையிலேயே சின்ன சின்ன சிக்கல்கள் வரும். உங்களை எரிச்சல் மூட்டும் வகையில், கூட இருக்கிறவங்க நடந்து கொள்வார்கள். இதனால் முன்கோபம் அதிகம் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. எது எப்படியாக இருந்தாலும் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். அவசரப்பட்டு வார்த்தைகளை கொட்டி விடாதீர்கள். வியாபாரத்தில் கூடுதல் முயற்சி இருந்தால் மட்டுமே வெற்றி காண முடியும். அலட்சியப் போக்கு நஷ்டத்தை உண்டு பண்ணும் ஜாக்கிரதை.
– Advertisement –
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு இன்று பெயர் புகழ் அந்தஸ்து உயரக்கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை கொடுக்கும். வேலை செய்யும் இடத்தில் திறமைகள் வெளிப்படும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் இருக்கும். உங்களை கைநீட்டி பேசியவர்கள் மத்தியில் தலை நிமிர்ந்து வாழும் அளவுக்கு நல்லது நடக்கும். குடும்பத்தில் சின்ன சின்ன சண்டைகள் வரலாம். வாழ்க்கை துணையின் பேச்சைக் கேட்டு நடக்கவும். வாக்குவாதம் வேண்டாம்.
கடகம்
கடக ராசிக்காரர்களுக்கு இன்று நல்லது நடக்கும். சுறுசுறுப்பான நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில் சின்ன சின்ன பிரச்சனைகள் வந்தால் கூட அதை சரி செய்வதற்கு உண்டான தன்னம்பிக்கையின் தைரியமும் உங்களிடத்தில் இருக்கும். நிறைய நல்ல அனுபவங்கள் கிடைக்கும். தாய் தந்தையரின் ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். நீண்ட தூர பயணத்தின் போது கூடுதல் கவனம் இருக்கட்டும்.
– Advertisement –
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று எல்லா வேலைகளிலும் எதிர்ப்பு இருக்கும். நீங்கள் வாயைத் திறந்து பேசினாலே அதை குறை சொல்ல நாலு பேர் இருப்பாங்க. சிக்கல்களை சந்திக்க வேண்டிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ள வேண்டாம். எதிரிகளை சூழ்ச்சி செய்து தான் வெல்ல முடியும். ஆக நேரடியாக எந்த விஷயத்திலும் மோதாமல், கொஞ்சம் குறுக்கு வழியை கையாளும் போது தான் இன்று உங்களால் தப்பிக்க முடியும். அடுத்தவர்களுக்கு பாதிப்பு வராத வரை, நாம் செல்லும் குறுக்குப் பாதையில் தவறு இல்லை.
கன்னி
கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று உடல் சோர்வு இருக்கும். வேலையில் அதிக ஆர்வம் காட்ட முடியாது. அசதியாகவே இருப்பீர்கள். இதனால் புதிய முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். நிறைய தண்ணீர் குடிக்கவும். அதிக வெயிலில் வெளியே செல்ல வேண்டாம். உடலுக்கு சூடு தரும் பொருட்களை சாப்பிட வேண்டாம். முக்கியமான வேலை இருந்தால் மட்டும் வெளியிடங்களுக்கு செல்லுங்கள். இல்லை அன்றாட வேலைகளை மட்டும் கவனித்தால் போதும்.
– Advertisement –
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு இன்று அமைதியான நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் உண்டு உங்கள் வேலை உண்டு என்று இருப்பீர்கள். அலுவலகத்தில் பெருசாக பிரச்சனை இல்லை. வியாபாரத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் எடுத்துக் கொள்ளுங்கள். முன்பின் தெரியாத நபருக்கு கடனுக்கு வியாபாரம் செய்ய வேண்டாம். பாட்னரை முழுசாக நம்ப வேண்டாம். எதுவாக இருந்தாலும் உங்கள் நேரடி பார்வையில் இருக்கட்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களுக்கு இன்று தேவை இல்லாத செலவுகள் வர வாய்ப்புகள் உள்ளது. சேமிப்புகளை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். கூடுமானவரை இன்று வெளியிடங்களுக்கு பர்ச்சேஸ் செய்ய செல்ல வேண்டாம். பர்ஸ் காலி ஆகிவிடும். கணவன் மனைவிக்கிடையே சின்ன சின்ன சிக்கல்கள் வரும். குடும்ப உறவுகளுக்கு இடையில் எரிசல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாகவே அமைந்தாலும், சிறிய அளவில் மனதில் ஒரு கவலை இருக்கும். கவலை இல்லை என்றாலும் நீங்களே கவலை இருப்பது போல நினைத்துக் கொள்வீர்கள். இதனால் உங்களுடைய வேலை சுறுசுறுப்பாக ஓடாது. எல்லா குழப்பத்தையும் ஓரமாக எடுத்து வைத்துவிட்டு இஷ்ட தெய்வத்தை வேண்டி இன்றைய நாளை தொடங்குங்கள். நல்லதே நடக்கும் என்று நம்புங்கள். நல்லது நடக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி வாகை சூட கூடிய நாளாக இருக்கும். புதிய முயற்சிகளை மேற்கொள்ளலாம். மாணவர்கள் மேற்கொண்டு என்ன படிக்கலாம், என்பதை பற்றி ஆலோசனை நடத்தலாம். நல்ல முடிவு கிடைக்கும். வாரா கடன் வசூல் ஆகும். நிதி நிலைமை சீராக இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்தில் இருந்து வந்த நீண்ட நாள் சிக்கல்கள் சரியாகும்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு இன்று சுகபோகமான வாழ்க்கை அமையும். எதிர்பாராத பணவரவு இழுக்கும். உங்களுடைய நிதி நிலைமை உயரும். கடன் சுமை குறையும். குடும்பத்தில் சந்தோஷம் இரட்டிப்பாகும். பெண் பிள்ளைகளால் மனம் மகிழ்ச்சி அடைவீர்கள். எதிர்கால சேமிப்பு பற்றி சிந்திப்பீர்கள். வேலையில் கூடுதல் கவனம் இருக்கட்டும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ள வேண்டாம்.
மீனம்
மீன ராசிக்காரர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் நிறைந்த நாளாக இருக்கப் போகின்றது. நீங்கள் நினைத்த பொருளை வாங்கி மன மகிழ்ச்சி அடைவீர்கள். சுபசெலவு உண்டாகும். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் நல்ல விஷயங்கள் நடக்கும். உங்களுடைய மதிப்பும் மரியாதையும் உயரும் அளவுக்கு உங்களுடைய திறமைகள் வெளிப்படக்கூடிய நாளாக இருக்கப் போகின்றது.
– Advertisement –